Show all

இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழின் ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த சொல்லின் வடமொழியாக்கமே பிரபஞ்சம் என்பதாகும். ஆனால் தமிழின் அண்டவெளி என்ற சொல்லுக்குப் பகரமாக பிரபஞ்சம் என்ற சொல்லை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் பிரபஞ்ச சக்தி என்று குறிப்பிட்டிருப்பது எந்த வகையினதாக இருந்தாலும் சரி.
நம்முள் இருக்கிற அல்லது தான்தோன்றியாக நாம் உருவாக எடுத்துக் கொண்ட நான்கு ஆற்றல்கள் நிலம், நீர், தீ, காற்று என்பன. இவைகளுக்கு எல்லை, எண்ணிக்கை, வடிவம், தான்தோன்றி இயக்கம் அனைத்தும் உண்டு. இவற்றைத் தமிழ்முன்னோர், இறைந்து கிடப்பதால் இறை என்றனர்.

நம்முள்ளும் நமக்கு வெளியிலும் இருக்கிற ஐந்தாவது ஆற்றல் அண்ட வெளி. அண்டவெளிக்கு எல்லையோ, தான்தோன்றி இயக்கமோ கிடையாது. நாமும், நாம் உருவாக எடுத்துக் கொண்ட நான்கு ஆற்றல்கள் நிலம், நீர், தீ, காற்று என்கிற ஆற்றல்களும், தமக்கு உள்ளும் வெளியிலும் இருக்கிற அண்ட வெளிக்கு தங்கள் தான்தோன்றி இயக்கத்தால் இயக்கம் கொடுத்து, கொடுத்த இயக்கத்தால் தங்கள் தான்தோன்றி இயக்கத்திற்கான ஒரு கட்டுப்பாட்டைப் பெறுகின்றோம். நம்முடைய இயக்கத்தை பெற்று நம்மை இயக்குகிற அண்டவெளியின் 1.வெளி 2.விண்வெளி 3.விசும்பு என்கிற மூன்று நிலைமாற்றம் அடைகிற ஆற்றலை கடவுள் என்கின்றனர் தமிழ் முன்னோர்.

இந்த அடிப்படைகளில் இருந்து நமக்கான விதிகளை நாம்தாம் தற்பரைக்குத் தற்பரை (தமிழ்முன்னோர் வகுத்த மிகச்சிறிய காலஅளவு) கடவுள் என்கிற வண்தட்டில் கடவுள் நம்மை இயக்கும் வகைக்கான மென்பொருளாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தமிழ்முன்னோர் தெளிவாக நமக்கு வகுத்துக் கொடுத்துச் சென்றிருக்கின்றனர். 

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது தமிழ்மரபு. அந்த அடிப்படையில், நாம் நம் அறிவாற்றலைப்; பெருக்கிக் கொள்ள நம் பெற்றோரின் தோளில் அமர்ந்து சிந்திக்க வேண்டும். நம் பெற்றோர் சில பாட்டன் பூட்டன்கள் பாட்டி பூட்டிகள் அயலவர்கள் சார்பில் சிந்தித்திருந்த காரணம் பற்றி, தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் தோளில் அமர்ந்து சிந்திக்கிற போது அவர்கள் சார்ந்திருக்கிற அயலவர் புளுகு தொன்மங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. நாம் சுழியத்தில் இருந்து சிந்திக்க அல்லது வேறு அயல்மத அயல் அரசியல் கோட்பாடுகளில் இருந்து சிந்தித்து புதிய சார்புகளில் அடுத்து வரும் நமது தலைமுறைகளையும் குழப்பத்திலும், அயல்வகை அடிமைத்தனங்களிலுமே ஆழ்த்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகை குழப்பத்தோடுதான் உங்களுக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. அயலவர் சார்பில்லாத தமிழ்இலக்கியங்களை படியுங்கள். தமிழ்முன்னோர் தோளில் அமர்ந்து சிந்தியுங்கள். வாழ்த்துக்கள். மேலும் விளக்கத்திற்கு இந்த இணைப்பை பரிந்துரைத்திருந்தேன்.  http://www.news.mowval.in/Editorial/katturai/No-191.html

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.