18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மொழி என்பது அதன் சொந்தக்காரனுக்கு- அதுதான் அடிப்படை, தொடக்கம், வாழ்க்கை எல்லாம். அதை அடுத்தவன் தானாக எடுத்துக் கொண்டால் அது ஒரு துறை; பொறியியல், மருத்துவம், கல்வியியல் என்பன போல. அதை அடுத்தவன் மீது திணிப்பது, மதம் அல்லது இயக்கம். உலகின் முதன் மொழியான தமிழ் உலகளாவி பரவிய போது, அது துறையாகத்தான் எடுத்துக் கொள்ளப் பட்டது. உலகின் அனைத்து மொழிகளும், தமிழ்ச் சொற்களை ஐந்து விழுக்காடு முதல் ஐம்பது விழுக்காடு வரை தமதாக்கிக் கொண்டன. ஞாயிறு, திங்கள் கிழமைகள்- இன்று உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிற எண்கள் எல்லாம் தமிழர்கள் உலகிற்கு வழங்கிய கொடையே. உலகினர் தமிழை ஒரு துறையாக எடுத்துக் கொண்டு நிறைய பயன் அடைந்தார்கள். வௌ;ளையர்கள், தொடக்க காலத்தில், தங்கள் மொழியை மதமாக மட்டுமல்ல, மதமோடு (கிறித்துவம்) இயக்கமாக உலகம் முழுவதும் முன்னெடுத்தனர். அதனால் உலகில் ஏழுபேரில் ஒருவர் கிறித்துவர். உலகம் முழுவதும் ஆங்கிலம் அலுவலக மொழி. ஆக மொழியை, துறையாக எடுத்துக் கொண்டால், எடுத்துக் கொள்கிறவனுக்கு ஆதாயம். (தமிழை உலகினர் எடுத்துக் கொண்டது போல) ஆக மொழியை- மதமாக, இயக்கமாக திணித்தால் திணிப்பவனுக்கு ஆதாயம். (உலகத்தில் இன்று ஆங்கிலத்திற்கு கிடைத்திருக்கிற அங்கிகாரம் போல) நடுவண் அரசை ஆளும் வாய்ப்பை பெறுகிற ஹிந்திக்காரன்கள், ஹிந்தியை, இந்தியா முழுவதும் மதமாக மட்டுமல்ல, மதமோடு (ஹிந்துத்துவா) இயக்கமாக முன்னெடுக்க வெறி பிடித்து அலைகிறான்கள். ஹிந்தியை ஒரு துறையாக தமிழர்கள் முன்னெடுப்பதற்கு, அந்த மொழியினர் பெரிய லம்பாடிக் கூட்டம் என்பதைத் தவிர அந்த மொழிக்கு எந்த தகுதியும் இல்லை. மொழியே இல்லாத சமசுகிருதத்தையும், எந்தத் தகுதியும் இல்லாத, இந்தியாவின் எந்த மொழிக்கும் காலத்தால் பிந்தைய ஹிந்தியையும் ஒரு துறையாக எடுத்துக் கொள்ள இந்தியர்கள் யாருக்கும் எப்போதும் எந்தத் தேவையும் இல்லை. அந்த இரண்டு மொழிகளைத் தவிர இந்தியாவின் அனைத்து மொழிகளையும் துறையாக எடுத்துக் கொள்ளலாம். இன்று ஆங்கிலத்தை, மதமாகவோ, மதத்தோடு மொழியாகவோ, இயக்கமாகவே எடுத்துச் செல்லும் நிலையில் அந்த மொழிக்குச் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. உலகம் முழுவதும் ஆங்கிலத்தை ஒரு துறையாக எடுத்துக் கொண்டு பயன் பெற்று வருகையில் தமிழகத்தில் மட்டும் ஒரு அதிசயம் நிகழ்ந்து வருகிறது. படிக்காத, தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத பாமரமக்கள், தாஙகள் படிக்காத ஆங்கிலத்தை, தங்கள் பிள்ளைகள் மீது, மூன்று அகவையிலிருந்தே, இயக்கமாக திணித்துக் கொள்கிறார்கள். ஆங்கிலத்;தை துறையாக எடுத்துக் கொண்ட பாவாணர், மறைமலையடிகள் போன்றோரெல்லாம் ஆங்கிலத்;தை தமிழ் வளர்ச்சிக்கு உரமாக்கினார்கள். நம்முடைய அப்பாவி தமிழ்மக்களோ ஆங்கிலப் பெயர் சொற்களை மட்டுமே தமிழில் கலந்து பேசி ஆங்கிலமே பேசுவதுபோல் பெருமையடித்துக் கொள்ள, கல்வி வணிகர்களின் கூட்டுக் கொள்ளைக்கு பழியாகி தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் மட்டுமல்ல உலகின் எந்த மொழியையும் துறையாக எடுத்துக் கொண்டால் மட்டுமே முன்னேறலாம். இயக்கமாக மதமாக நாமாக எடுத்துக் கொண்டாலும், திணிப்பை ஏற்றுக் கொண்டாலும் பயனடையப் போவது அந்த இயக்க மொழியும், அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களும்தான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714.