Show all

பெண் குழந்தைகளுக்கான இயல்பான தமிழ்ப் பெயர்கள்!

தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில இயல்பான தமிழ்ப் பெயர்களை இங்கே குறித்திருக்கிறேன். 
 
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட, நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில இயல்பான தமிழ்ப் பெயர்களை இங்கே குறித்திருக்கிறேன். அந்தப் பெயர்கள் தூக்கிப் பிடிக்கப் போகும் இயல்பு என்ன என்பதை கணியக்கலையோடு இங்கே விரிவாக்கியிருக்கிறேன். 

அகல்விழி 3
அருள்மொழிதேவி 2
அருளரசி 5
அருள் 6
அருள்விழி 3
அருளி 8
அருவி 8
அறம் 6
அறச்செல்வி 4
அறிவுமதி 5
அமுதா 1
அமுதவல்லி 6
அமுதரசி 5
அமுதினி 2
அரசி 8
அல்லி 6
அல்லிக்கொடி 4
அவ்வை 8
அழகி 8
அழகரசி 5
அறிவுக்கொடி 6
அறிவொளி 2
அன்பு 6
அன்பரசி 3
அன்பழகி 3
அன்புக்கொடி 4
ஆதிரை 3
இசை 7
இசையரசி 7
இயற்றமிழ்ச் செல்வி 3
இலக்கியம் 4
இளங்கிளி 3
இளங்குயில் 4
இளநகை 4
இறைவி 1
இறைஎழிலி 6
இறையரசி 7
இயலரசி 5
இயற்கை 2
இளஞ்சித்திரை 9
இளநிலா 4
இளமதி 2
இளமயில் 3
இளம்பிறை 5
இளநாச்சி 5
இளந்தென்றல் 5
இளந்தேவி 5
இளவரசி 5
இளவழகி 5
இளவெயினி 5
இளவேனில் 5
இனியாள் 2
இன்மொழி 9
ஈழச்செல்வி 6
ஈழமதி 4
ஈழக்கதிர் 6
எழில் 6
எழில்நிலா 5
எழிலரசி 5
எழிற்செல்வி 4
ஏழிசை 3
ஒப்பிலாமொழி 8
ஓவியம் 2
ஓவியா 3
ஒளவை 9
கண்ணம்மா 4
கண்ணகி 1
கண்மணி 1
கதிர் 7
கதிரொளி 3
கயல்விழி 4
கருங்குழலி 7
கலையரசி 8
கலைமகள் 6
கன்னல் 8
காக்கைப்பாடினி 5
கார்குழலி 6
கார்முகிலி 6
கார்முகில் 4
காவிரி 2
காவேரி 4
குறள்மொழி 4
குறளமுது 6
குறிஞ்சி 1
குயில் 7
குயிலி 9
குயில்மொழி 4
சங்கவி 1
சிந்து 7
சித்திரை 3
சிலம்பு 1
சிலம்பரசி 7
சிலம்பொலி 4
செங்கொடி 1
செந்தமிழ் 2
செந்தமிழ்ச் செல்வி 1
செந்தமிழருவி 1
செந்தாழை 5
செம்மலர் 2
செம்மொழி 1
செல்லம் 8
செல்லி 7
செல்வி 7
சேரன்செல்வி 7
தங்கமுகில் 5
தங்க நிலா 6
தமிழ்ப்பொழில் 6
தமிழ்மகள் 5
தமிழ்மொழி 4
தமிழ்விழி 4
தமிழ்க்கொடி 5
தமிழினி 3
தமிழ்ச்செல்வி 6
தமிழ்க்கிளி 5
தமிழ்முல்லை 7
தமிழோவியா 1
தமிழ்ஒளி 3
தமிழரசி 6
தமிழழகி 6
திருமலர் 4
திருமொழி 3
துளசி 9
தென்குமரி 4
தென்றல் 8
தேன்மொழி 3
தேனருவி 5
நன்முல்லை 4
நிறைமதி 5
நிறைமொழி 5
பகுத்தறிவு 7
பவளக்கொடி 7
பாவை 1
பாமகள் 3
பிறைநிலா 7
புகழ் 7
புகழ்மொழி 4
மங்கை 9
மஞ்சு 7
மணிக்கொடி 4
மணிமொழி 3
மணிமேகலை 1
மலர்க்கொடி 5
மலர்விழி 4 

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து இருந்திருக்கிறார்கள்.

அந்தக் கணியக்கலையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்புக்கான வகையில் பெயர் சூட்டி உங்கள் பிள்ளைகளுக்கான முன்னேற்றத்தை பெற்றுதர இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். 

உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வெவ்வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக இரும்பு அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 26 ஆகும். தங்கத்தின் அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 79 ஆகும். அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்களில் ஒன்றான, இயக்கம் இல்லாத வெளியாக அமைந்து- அந்த வெளியில் உலா வருகிற நிலம், நீர், காற்று, தீ என்கிற நான்கு ஆற்றல்களால், அந்த இயக்கம் இல்லா வெளி, இயக்கம் பெற்று- விண்வெளியாகி, அந்த நான்கு ஆற்றல்களுக்கு எதிர் இயக்கம் தருகிற விசும்பு என்கிற ஆற்றல் என்று தமிழ் முன்னோர் கணித்திருக்கிறார்கள். தமிழ்முன்னோர் சுட்டும் ஐந்திர (பஞ்சபூத) ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பவைகள் ஆகும். இவற்றுள் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். ஐந்தாவது ஆற்றலானது:- இயக்கம் இல்லாத வெளி, அந்த வெளியில் இயங்குகிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்களால் இயக்கம் பெற்ற விண்வெளி, எதிர் இயக்கமாக மற்ற நான்கு ஆற்றல்களை இயக்கும் விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது. 

இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிற நியூட்டனின் மூன்றாவது விதியில் சொல்லப்படுகிற "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு" என்பதில் அந்த எதிர்வினைதான் இந்த விசும்பு என்று நிறுவியிருக்கின்றனர் நம் தமிழ் முன்னோர். விசும்பைப் பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். இதைத்தான் திருக்குறள்
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது. 

ஆக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல்
இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும். 

ஒலியன் 1க்கு உரிய உழைப்பு இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
கண்ணகி, அமுதா, மணிமேகலை, அங்கயற்கரசி, கலைக்குறிஞ்சி, ஆகிய உழைப்பு என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். இலக்கியத் தலைவிகள் கண்ணகி, மணிமேகலை ஆகியோரின் இயல்பு உழைப்பு தானா என்று பொருத்திப் பாருங்கள். 

ஒலியன் 2க்கு உரிய நிருவாகம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அகல்யா, குமுதா, மாதவி, அகிலா, அமிர்தா ஆகிய நிருவாகம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். எம்.ஜி. இராமச்சந்திரன் நிருவாக இயல்பில் சாதித்தாரா என்று பொருத்திப் பார்க்கலாம். 

ஒலியன் 3க்கு உரிய முனைப்பு இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அருள்விழி, அன்பரசி, ஆகிய குழந்தைத்தனம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம் 

ஒலியன் 4க்கு உரிய பயணம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அன்னக்கிளி, அன்புக்கொடி, கனல்மொழி, கயல்விழி, தமிழ்மணி, ஆகிய பயணம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம் 

ஒலியன் 5க்கு உரிய கலை இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
சிதம்பரம், அமுதரசி, எழிலரசி, கன்னல்மொழி, கயற்கண்ணி ஆகிய கலை என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் அவர்கள் இந்த இயல்பில் பொருந்துகிறாரா என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

ஒலியன் 6க்கு உரிய தொழில் நுட்பம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அமுதவல்லி, அம்மு, அஞ்சு, கனியமுது, கன்னல்தமிழ், கார்குழலி ஆகிய தொழில்நுட்பம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம் 

ஒலியன் 7க்கு உரிய கமுக்கம் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
அண்ணாதுரை, ராமசாமி, கமல்காசன், அன்னம், கதிர், கனல், கருங்குழலி, கலைக்கடல், ஆகிய கமுக்கம் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். பேறிஞர் அண்ணாதுரை, பெரியார். ராமசாமி, நடிகர் கமல்காசன் ஆகியோரின் இயல்பு கமுக்கத்துறை (ஆன்மீகம் அல்லது நாத்திகவாதம்) என்பதும் நாமறிந்த ஒன்றுதாம். 

ஒலியன் 8க்கு உரிய புகழ் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
திருவள்ளுவர், கருணாநிதி, அழகி, அங்கயற்கண்ணி, கன்னல், கலை, கலைத்தென்றல் ஆகிய புகழ் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். திருவள்ளுவர், கலைஞர் கருணாநிதி, செயலலிதா போன்றவர்களின் இயல்பு புகழ் தளம் சார்ந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

ஒலியன் 9க்கு உரிய போரியல் இயல்பை உங்கள் பிள்ளைகளுக்கு விரும்பினால்-
பிரபாகரன், கலைக்கோவன், ஆகிய போரியல் என்கிற இயல்புக்கு பொருந்தும் ஒலியன்கள் கொண்ட பெயர்களைச் சூட்டலாம். மேதகு பிரபாகரன் அவர்களின் இயல்பு போரியல் என்பது உறுதியும் அறுதியும் ஆனது ஆகும் அல்லவா! 

பெயர்களின் ஒலியன்களை கணக்கிடுவது பெரிய தலைப்பாகும். பெயர்களின் ஒலியன்களை கணக்கிட்டு இயல்புகளின் ஒன்பது தலைப்புகளிலும் பட்டியல் இடுவதும் பெரிய தலைப்பே. ஒற்றைச் சொல்லில் சுட்டப்படுகிற இயல்பின் விரிவுகளை எழுதுவதும் பெரிய தலைப்பேயாகும். அந்த மூன்று தலைப்புகளும் பின்வரும் காலங்களில் உறுதியாக எழுதப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.