Show all

உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட

தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு- நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி பேரளவாக வெற்றி பெறவைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும் வருகிறோம். தற்போது பேரளவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சாதக அடிப்படையில் குழந்தைகளுக்குப் பெயர்சூட்ட தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த வகைமையை ஆற்றுப்படுத்தும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், முத்தமிழில் மூன்றாவது தமிழான இயற்றமிழில், முன்னெடுத்த முதலாவது முன்னேற்றக்கலை நிமித்தகம் என்கிற காலக்கலை ஆகும். இதில் இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்த பகுதிகள் வானியல் என்ற தலைப்பில் தொடரப்பட்டு வருகிறது. 

இதில் இயல்கணிப்பு சார்ந்த பகுதியில் சாதகம், சோதிடம் என்கிற இரண்டு தொகுதிகள் உண்டு. சாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் எந்தெந்த ஓரைகளில் கோள்கள் இருந்தன என்பதை எழுதி வைத்துக்கொள்வதாகும். சோதிடம் என்பது அன்றன்;றைக்கு உங்களுக்கு வாய்ப்பான பலன்களை தெரிவிப்பது ஆகும். 

உங்களுக்கு சாதக அடிப்படையில் பெயர் வைப்பதற்கு- மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் பனிரெண்டு ஓரைகளுக்கு, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்;கிற பனிரெண்டு உயிரெழுத்துக்களை நிரவிடமுடியும். 

பின் வரும் ஆறு மெய்களின் வரிசையின், எல்லா உயிர் மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலாக அமையும் என்பதான க, ச, த, ந, ப, ம என்கிற ஆறு எழுத்துக்களை 27 நாள் மீன்களுக்கு மீண்டும் மீண்டும் சுழன்று வருமாறு அமைக்கலாம் 

அடுத்ததாக ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே, மொழிக்கு முதலாக அமையும் என்பதான நிலையில் அந்த ஞ, ய, வ என்கிற மூன்று எழுத்துக்களை 27 நாள் மீன்களுக்கு மீண்டும் மீண்டும் சுழன்று வருமாறு நிரவலாம். இதற்கு தமிழ்முன்னோர்- இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னேற்றக் கலைகளாக நிறுவிய கணியம் மற்றும் மந்திரம் இடம் தருகிறது.

புரவி (அசுவினி) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

அடுப்பு (பரணி) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ, ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

ஆரல் (கார்த்திகை) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ, ஆ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

சக்கரம் (ரோகிணி) ஆ, ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

மான்தலை (மிருகசீரிடம்) ஆ, இ, ப வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

மூதிரை (திருவாதிரை) இ, ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
 
கழை (புனர்பூசம்) இ, உ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

காற்குளம் (பூசம்) உ, ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

கட்செவி (ஆயில்யம்) உ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

கொடுநுகம் (மகம்) ஊ, ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

கணை (பூரம்) ஊ, ப வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

உத்தரம் (உத்திரம்) ஊ, எ, ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

கை (அஸ்தம்) எ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

அறுவை (சித்திரை) எ, ஏ, ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

விளக்கு (சுவாதி) ஏ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

முறம் (விசாகம்) ஏ, ஐ, ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

பனை (அனுசம்) ஐ, ப வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

துளங்கொளி (கேட்டை) ஐ, ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

குருகு (மூலம்) ஒ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

உடைகுளம் (பூராடம்) ஒ, ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

கடைக்குளம் (உத்திராடம்) ஒ, ஓ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

முக்கோல் (திருவோணம்) ஓ, ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
 
காக்கை (அவிட்டம்) ஓ, ஒள ப வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

செக்கு (சதயம்) ஒள ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
 
நாழி (பூரட்டாதி) ஒள, அ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
 
முரசு (உத்திரட்டாதி) அ, ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
 
தோணி (ரேவதி) அ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,471. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.