நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்கிற பழமொழி- பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, வளைகாப்பு விழா, தொழில் விழா, பொங்கல், புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, விளக்குத் திருவிழா என விழாக்கள் எதுவும் ஏழையர் கொண்டாட வேண்டியதில்லை என்பது போலவும், சோதிடம், சாதகம் பார்க்க வேண்டியது இல்லை என்பது போலவும் போலியான புழக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது பிழை என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நலம் என்பது உடல் நலத்தையே குறிக்கும். உடல் நலத்தின் பாதுகாப்பு நடவடிக்கையாக நலங்கு வைக்கிற நடைமுறை தமிழ்மரபு நெடுங்காலம் கொண்டாடுகிற பண்பாடு ஆகும். நலிவு என்பது உடல்நலக் குறைபாடு சார்ந்த வகைக்கான சொல்லே ஆகும். நலிந்தோர் என்கிற சொல் நாள்பட்ட நோயாளரைக் குறிக்கும் சொல் ஆகும். பொருளாதாரக் குறைபாட்டைக் குறிக்க வறுமை, ஏழ்மை. வளமின்மை என்ற சொற்களே பொருந்தும். வளம், வளமை, வளர்ச்சி, வளாகம், என்கிற சொற்கள் எல்லாம் பொருளாதாரச் செழுமையைக் குறிக்கும் சொற்கள். நலம், நலங்கு, நல்வாழ்வு என்பன உடல் நலத்தைக் குறிக்கிற சொற்கள் ஆகும். நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்கிற பழமொழியை வறுமையர்- ஏழையர்- பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, வளைகாப்பு விழா, தொழில் விழா, பொங்கல், புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, விளக்குத் திருவிழா என தமிழர் விழாக்கள் எதுவும் கொண்டாட வேண்டியதில்லை என்பது போலவும், சோதிடம், சாதகம் பார்க்க வேண்டியது இல்லை என்பது போலவும் போலியான புழக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்முன்னோர் விழா கட்டமைத்த நோக்கமே விழாமல் இருப்பதற்கு விழா என்பதாகும். விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதற்குக் கட்டமைத்தது விழா ஆகும். ஆக தமிழர் கட்டமைத்த விழாக்கள் அனைத்தும் அனைத்து நிலை மக்களுக்கும் ஆனதேயாகும். விழாக்களில் செல்வம் மிகுந்தவர்கள் நிறைய செலவு செய்ய, உழைப்பாளர்கள் அந்தச் செலவுகளில் வருமானம் பார்ப்பார்கள். நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்பது காலமோ, விழாக்களோ, சோதிட சாதகமோ சார்ந்தது அல்ல. அது உடல் நலிவகற்றும் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும் செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கு போன்ற சில பிணிகளுக்கு நாள் அடிப்படையில் நான்கு வேளை மருந்து போதும்.
சளி, காய்ச்சல் போன்ற சில பிணிகளுக்கு கோள் அடிப்படையில் எட்டு நாள் மருந்து தேவைப்படும்.
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்பது நாள்பட்ட நோயளிக்கு இந்த வேளைகள் மருந்து போதாது என்பதாகும்
ஆக அவ்வாறான சில பிணிகளுக்கு ஒரு மண்டலம் மருந்து தரவேண்டும் என்பது மருத்துவ முறையாகும்.
ஒரு மண்டலம் என்பது நான்கை எட்டால் பெருக்க வரும் 32 ம் ஆகும்.
இந்த முப்பத்தி இரண்டுதான் ஒரு மாதத்தின் அதிக பட்ச நாட்களாகக் கொள்ளப்படுகிறது.
நன்கு எட்டு ஒரு மண்டலம் என்று சொல்லப்பட்டதை, நான்கையும் எட்டையும் தொடர்ந்து எழுதி நாற்பத்தி எட்டு நாட்கள் ஒரு மண்டலம் என்றும் சிலர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.
தமிழர் கொண்டிருக்கிற கிழமைகள் ஏழு எனினும் தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய கோள்கள் எட்டு ஆகும். தமிழர் தங்கள் இருப்புக் கோளான புவிக்கு கிழமை அமைத்திருக்க வில்லை.
இந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதியம், வியாழம், வெள்ளியம், கார்இயம் என்கிற ஏழு கிழமைகள் உலகினருக்கு தமிழர் அளித்த கொடை என்று நெஞ்சம் நிமிர்த்தலாம்.
இங்கே தமிழ் மாதங்களின் நாட்கள் முழுமையாக நாட்களை மட்டும் கொண்டதல்ல நாழிகைகளையும், விநாழிகைகளையும் மற்றும் தற்பரையும் கொண்டது என்பதை மனதில் நிறுத்தலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,351.