26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125. அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும், தேடிவரவும். இன்றைக்கும் உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்ப. போதும் அதற்கு, தமிழ்முன்னோரால் முன்னெடுக்கப்பட்ட, மூன்றாவது முன்னேற்றக்கலையைப் புரிந்து கொண்ட, வெறுமனே ஓராயிரம் தமிழர்கள். குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர் தமிழ்முன்னோர். நடப்புத் தமிழ்த்தொடர் ஆண்டு 5125. ஐயாயிரத்து நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னேமே ஓர் ஆண்டுக்கு 365 நாள் 15 நாழிகை 31 விநாழிகை 15தற்பரை என்று ஆண்டுக் கணக்கைத் தெளிவாக நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர். தமிழ் மாதங்களுக்கும் மிக மிக நுட்பமான தற்பரை வரைக்குமான நேரத்தை கணித்திருந்தனர் தமிழ்முன்னோர். சித்திரை தொடங்கி மாசி வரைக்குமான மாதங்களுக்கு நாளும், நாழிகையும், விநாழிகையும் உண்டு. பங்குனி மாதத்திற்கு நாள், நாழிகை, விநாழிகையோடு தற்பரைக் கணக்கும் உண்டு. ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது என்பதையும், டிசம்பர்- தசம்- பத்து என்பதையும் பொருத்தி ஆங்கில ஆண்டுக்கான மாதங்கள் தொடக்கத்தில் பத்து மட்டுமே என்பதை அறியலாம். ஜூலை மாதமும், அகஸ்டு மாதமும் பின்னர் இணைக்கப்பட்டு, ஆங்கில ஆண்டுக்கணக்கில் பனிரெண்டு மாதங்களாக்கப்பட்டு, தமிழ்த் தொடர் ஆண்டுக் கணக்கோடு நேர் செய்யப்பட்டது. ஆனாலும் ஐரோப்பியக் நாட்காட்டிப்படி 365நாள் என்றே தொடக்கத்தில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு நாளில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். இந்த திருத்தத்தின் படி 400ஆண்டுகளுக்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வேறுபாட்டைச் சரி படுத்த எண்ணி லீப் ஆண்டுக்கணித முறையைக் கொண்டு வந்தனர். கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி ஆண்டை சாதாரண ஆண்டாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு 29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வேறுபாட்டுக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது. இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் மாறுபடும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது. இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் நாட்காட்டியிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில ஆண்டுக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5124 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட தமிழ்த் தொடர் ஆண்டு கணக்கு முறை நமக்கு உண்டு என்பது தமிழினத்திற்கான பெருமிதமாகும். தமிழ் ஆண்டுக்கணக்கில் ஒரு ஆண்டுக்கான முழு நாட்கள் 365, நாழிகை15, விநாழிகை31, தற்பரை15 (தற்பரை என்பது பரையில் ஒரு கொட்டு கொட்டும் போது எழுகின்ற அதிர்வு நேரமே தற்பரை ஆகும்) என்று நிமித்தகம், வள்ளுவம், கணியத்துறை சார்ந்தவர்களால் 5124 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 5125 ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அதைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற மனிதரில் தமிழர் விரிந்து பரவிய நிலத்தை, நடுவாக அமைந்த இமயத்திற்கு வலமாக (தெற்கு) அமைந்த தேயம் என்கிற பொருளில் நாவலந்தேயம் என்றும் பெயர் சூட்டிக் கொண்டாடியிருந்தனர் தமிழ்முன்னோர் தமிழ்நிலத்திற்கு, இடமாக பயணித்தும் ஆறுகளைத்தேடி வாழ்க்கை அமைத்துக் கொண்ட இன்னொரு இனம் உலகினர் ஆவர். 5125 ஆண்டுகளுக்கு முந்தைய காலம். உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம் ஆகும். தமிழர் கடலோடும்திரம் வியந்து, தமிழர் பொருள் பொதித்த சொற்களைக் கொண்ட தமிழ்திரம் வியந்து, தமிழரின் அறிவார்ந்த வானியல்திரம் வியந்து, தமிழரின் மெல்லிய நூலடையை வாங்கி தமிழரின் துகிலியல்திரம் வியந்து, கடலில் விளைந்த முத்தை குளித்து வணிகமாற்றுகிற தமிழனின் கடல்திரம் வியந்து, தமிழனின் கப்பல் கட்டும் திரம் வியந்து, ஆமைகளை கொண்டு கடலோடிய தமிழனின் திசையியல் நுட்பத்திரம் வியந்து உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து 'நாவலந்தேயம்' என்ற அறிமுகம் மட்டுமே உலகினருக்கு இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - ஐனெயை என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே. அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது- ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால், அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலiனெயைம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை. இப்படி உலகை வியக்க வைத்திருந்த தமிழினம்- இன்றைக்கு, ஆள்வதற்கு சொந்தமாக நிலமும் அதிகாரமும் இல்லாமல், ஒட்டுமொத்த நாவலந்தேயத்தையும் அயலவர்களுக்கு விட்டுக்கெடுத்துவிட்டு- பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் ஆகிய அயல்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் கலவையாகும், பயணித்து வருகிறது. பேரறிமுகமான கலைஞர்கள் வேண்டாம். பேரறிமுகமான அரசியல் தலைவர்கள் வேண்டாம். பேரறிமுகமான விளையாட்டு வீரர்கள் வேண்டாம். பெரும் பணக்காரர்கள் வேண்டாம். பேரளவாகப் பட்டம் பெற்றவர்கள் வேண்டாம். தமிழ்வழிக் கல்வியில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய ஓர் ஆயிரம் பேர்கள் போதும். பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் ஆகிய அயல்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் கலவையாகவும் இருந்து வரும் அவர்கள் அவைகளில் இருந்து முற்றாக விலகினால் அவர்களுக்குள் முந்தை தமிழரின் மந்திரக்கலை இயல்பூக்கமாக நிரம்பும். அந்த ஓர் ஆயிரம் பேர்கள் மட்டும்கூட தமிழ்முன்னோரின் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தைப் புரிந்து கொள்வார்களேயானால் இன்றைக்கும் உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்பிட என்பதை தமிழின் ஐம்பரிமானத்தைக் கொண்டாடியிருந்த தமிழினத்தின் முந்தை வரலாறு நமக்கு ஊக்கம் ஊட்டுகிறது.
1. சித்திரைக்கு நாட்கள் 30, நாழிகை 55, விநாழிகை 32.
2 வைகாசிக்கு நாட்கள் 31, நாழிகை 24, விநாழிகை 12.
3 ஆனிக்கு நாட்கள் 31, நாழிகை 36, விநாழிகை 38.
4 ஆடிக்கு நாட்கள் 31, நாழிகை 28, விநாழிகை 12.
5 ஆவணிக்கு நாட்கள் 31, நாழிகை 02, விநாழிகை 10.
6 புரட்டாசிக்கு நாட்கள் 30, நாழிகை 27, விநாழிகை 22.
7 ஐப்பசிக்கு நாட்கள் 29, நாழிகை 54, விநாழிகை 07.
8 கார்த்திகைக்கு நாட்கள் 29, நாழிகை 30, விநாழிகை 24.
9 மார்கழிக்கு நாட்கள் 29, நாழிகை 20, விநாழிகை 53.
10 தைக்கு நாட்கள் 29, நாழிகை 27, விநாழிகை 16.
11 மாசிக்கு நாட்கள் 29, நாழிகை 48, விநாழிகை 24.
12 பங்குனிக்கு நாட்கள் 30, நாழிகை 20, விநாழிகை 21 தற்பரை 15. ஐயாயிரத்து நூற்று இருபத்தி நான்கு ஆண்டுகளாகவும் இதே கணக்கில் தொடர்கிறது தமிழ்ஆண்டு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,765.