Show all

‘நீர் உயிரின் வேர்’ நூல் திறனாய்வு நிகழ்ச்சி! முன்னெடுத்தது ‘முப்பா’ இயக்கம்

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை 6.20 மணியளவில் பொறியாளர். அ.பீட்டர்ராசன் எழுதியுள்ள ‘நீர் உயிரின் வேர்’ என்ற நூலின் திறனாய்வு நிகழ்ச்சியை முன்னெடுத்தது ‘முப்பா’ இயக்கம்.

கொரோனா காரணமாக, சமூக இடைவெளி போண வேண்டியிருக்கிற நிலையில்- இந்த நிகழ்ச்சி கூகுள்கூட்டச் (ஜும்) செயலி மூலமாக நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தென்மொழி ஈகவரசன் அவர்கள் இனமான இன்னிசையை முழங்கினார்கள்.

பாவலர் முயற்சி முருகேசன் அவர்களின் நெறியாளுகையில்- வரவேற்புரை பாவலர் தமிழரசன் அவர்கள் வழங்கிட, திரு ஒப்பிலாமணி தலைமையேற்றிட, பாராளுமன்ற உறுப்பினர் திரு டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் நூலுக்கான திறனாய்வுச் சிறப்பரை ஆற்றினார்கள். நூலாசிரியர் பொறியாளர் அ.பீட்டர்ராசன் அவர்கள் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கிட கூட்டம் இனிதே முடிந்தது.
நிகழ்ச்சியின் இடையில்- நேரலையில் கலந்து கொண்ட பலரும் நூலை குறித்தும், நூலாசிரியர் குறித்தும் தங்கள் தங்கள் கருத்துக்களைப் பகர்ந்து கொண்டனர். 

இந்த நூல் திறனாய்வுக் கூட்டத்தில் நான் (குமரிநாடன்), சக்கையா, வேலரசு, ஞானசேகரன், முல்லைகோ, இரவிமணி, சேகர், மன்னர் மன்னன் உள்ளிட்ட பலர் நேரலையில் இருந்து கூட்டத்தைச் சிறப்பித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.