30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. நம்ம நரேந்திர மோடி மாதிரி மக்கள் (அடுத்தவர்கள்) பணத்தில் அல்ல. உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 35கோடி அதிகரித்துள்ளது. உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 விழுக்காட்டு பேர்கள் பெண்களாவர். முதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி. இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் ஏர் உலகில் அதிக பெண் விமானிகளை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, அந்நிறுவனத்திலுள்ள 30 விமானிகளில் ஒன்பது பேர் பெண் விமானிகள் என்று சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கூறுகிறது. எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார். பொதுவாக விமானிகள் ஒவ்வொரு நாளும் குறுகிய அல்லது நீண்டதூர இடங்களுக்கு பயணிகள் விமானத்தையோ அல்லது சரக்கு விமானங்களையோ இயக்குகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,973.
வர்த்தக விமானிகளின் ஊதியமானது அவர்கள் பணிபுரியும் விமான நிறுவனம், அவர்கள் இயக்கும் விமானத்தின் வகை மற்றும் அவர்களது அனுபவத்தை பொறுத்து அமையும்.
சராசரியாக பதினெட்டு இலட்சம் முதல் இருபத்தெட்டு இலட்சம் வரையில் அவர்களது வருமானம் இருக்கும்.