இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ்க் குழந்தை, தமிழ்மட்டுமே படித்து- தொல்காப்பியனாக, திருவள்ளுவனாக, கரிகாற் சோழனாக, காக்கைப் பாடினியாக, ஒளவையாராக, வள்ளல் பாரியாக, பல நூறு பெண்பாற் புலவர்களாக மாறிநின்ற வளர்ச்சியையும் கொண்டாடினர். 17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் உள்ள 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறார் தொல்காப்பியர். இந்தக் கருத்தியல் மட்டும் அல்ல, தொல்காப்பியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்;ள எந்தக் கருத்தியலும் அவரின் சொந்த முடிவு அன்று. இதை அவரே தெளிவு படுத்தும் வகைக்கானவைகள் தாம் என்ப, மொழிப என்று தொல்காப்பியம் முழுமையும் அவர் தெரிவித்திருக்கின்ற முறைமை. என்ப, மொழிப என்னும் முறைமை தொல்காப்பியம் முழுதும் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளது. பின்வரும் பத்தொன்பது எடுத்துக்காட்டுகளில் தான் தெரிவிக்கும் எந்த கருத்தியலும் தமிழ்முன்னோர் தொடர்ந்து எடுத்தாண்டு வந்தது என்று தொல்காப்பியர் தெரிவிப்பதை நாம் உய்த்துணர முடியும். சரி எதற்கு இவ்வளவு பீடிகை? தமிழைத் தாய்மொழியாக, தன்மொழியாகக் கொண்ட ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்கும் முதல் உடைமைகளில்- எல்லாச் சொல்லும் பொருள் குறித்த அந்த தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லை கற்கும் அந்தத் தமிழ் குழந்தையின் சிந்தனை வெற்றிகளை குவிக்க சிறகடிக்கிறது. குழலினிது யாழினிது என்பதம் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்தக் குழந்தை தொல்காப்பியனாக, திருவள்ளுவனாக, கரிகாற் சோழனாக, காக்கைப் பாடினியாக, ஒளவையாராக, வள்ளல் பாரியாக, பல நூறு பெண்பாற் புலவர்களாக மாறிநின்ற வளர்ச்சியையும் கொண்டாடினர். அனால் தற்போது அந்தக் குழந்தைக்கு மூன்று அகவை ஆகிவிட்டால் போதும், அரக்கியாக மாறிவிடுகின்றனர் தமிழைத் தாய்மொழியாக, தன்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு தாயும். இந்த வன்கொடுமையில் வாழையடி வழையாக தொடர்கதை படைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அந்தக் குழந்தையை ஆங்கில வழிக்கல்வி, ஹிந்தி வெறியர்களின் ஒன்றியப் பாடத்திட்ட கல்வி, என்கிற பூதகணங்களிடம் ஒப்படைத்து மகிழ்கின்றனர். அந்த பூத கணங்களுக்கு நடுவே அந்தக் குழந்தைக்கு, ஒரு தமிழாசிரியர் குலதெய்வமாக கிடைத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் ஒரு பாடமாகக் கூட வேண்டாம் என்று சில பல தாய்கள் முடிவெடுத்து அவ்வகையான பூதகணங்களிடம் தம்பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். அந்தப் பள்ளியில் தமிழ்க் குலக்கொழுந்துகளான உடன் குழந்தைகளிடம் இந்தப் பிள்ளைகள் தமிழ்பேசி மகிழ்கின்றனர். அப்படிக் கூட தன்பிள்ளை தமிழ்பேசிவிடக் கூடாது என்பதற்காக- தன் குழந்தைக்கு சோறு ஊட்ட அந்தப் பள்ளிக்குச் செல்லும் இந்தத் தாய்- பக்கத்துக் குழந்தையிடம்- இது உன் மம்மியா? இது உன் டாடியா? என்று தனக்குத் தெரிந்த ஒரு நூறு ஆங்கில பெயர்ச்சொற்களில் உரையாடி, தான் ஆங்கிலத்தில் ஆய்வுக் கல்வியே முடித்திருப்பது போல அந்தக் குழந்தைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்து, சிலிர்த்துக் கொள்வார். அம்மா என்கிற தமிழ்ச்சொல்லை புரிந்து கொண்டு பொருள் தேட முயன்றால்- அம்மாவை அழைக்கின்றன! அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் வேரடியாகவே உலகின் அத்தனை மொழிகளும் என்கிற சுரங்கம் நமக்கு வெளிப்படுகிறது. அப்பாவுக்கும் அதே வரலாறுதான். மம்மி, டாடி என்ற இரண்டு இடுகுறிச்சொற்களை அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து முதலாவதாக, இரண்டு பொருட் சுரங்கங்கள் அந்த குழந்தைக்கு கிடைக்காமல் இழுத்து மூடி விடுகிறாள் அந்தத்தாய். பொருள் குறித்த ஒவ்வொரு தமிழ்ச்சொல்லை கற்கும் போது அந்தக் குழந்தையின் அறிவு விரிகிறது. இடுகுறியான ஒவ்வொரு அயற் சொல்லை கற்கும் அந்த குழந்தையால் அந்த வகையான பொருட் சுரங்கத்தை தன்னூக்கமாக திறக்க முடியாமலே போகும். அவைகள் கற்கும் ஒவ்வொரு இடுகுறிகளும் அந்த குழந்தையின் மீது பூட்டப்படுகின்ற அடிமை விலங்குகள் ஆகும். அடிமைகளுக்கும் வாழ்வு இல்லாமல் இல்லை. அயல்மொழிக் கல்விக்கு வாழ்வுதரும், தமிழுக்கு அயலான பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள்- தங்கள் நிருவாகக் கூலி அடிமைகளின் ஐம்பத்தெட்டு அகவைகளுக்கு மட்டும் பாதுகாக்கத்தான் செய்கின்றன. அது அடுத்த தலைமுறைக்கு வாழ்வுதராது.
என்மனார் புலவர் என்பது சுமார் 68 இடங்களில் வந்துள்ளது. வரையார் என்பது 15 இடங்களில் வந்துள்ளது.
பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும்.
1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே
2. ஒத்த தென்ப உணரு மோரே
3. செவ்வி தென்ப சிறந்தி சினோரே
4. புகரின்று என்மனார் புலமை யோரே
5. உளவென மொழிப உணர்ந்திசினோரே
6. வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே
7. விளியொடு கொள்ப தெளியு மோரே
8. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே
9. இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
10.புலன் நன் குணர்ந்த புலமை யோரே
11. கொள்ளும் என்ப குறியறிந் தோரே
12. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே
13. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே
14. வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர்
15. யாப்பென மொழிப யாப்பறி புலவர்
16. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்
17. பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே
18. ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே
19. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்
தமிழ் மொழியில், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று நம் தமிழ்முன்னோர் தெரிவித்திருப்பதிலிருந்து. தமிழின் ஒவ்வொரு சொல்லும் பல்வேறு பொருட்களைத் தோண்டி எடுப்பதற்கான பொன்னான சுரங்கம் என்பதை ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் உணரவேண்டும் என்பதே எனது பீடிகைக்கான நோக்கம்.
ஒன்று: தன் குருதியைப் பாலாக்கி ஊட்டிய பாலில் நேரடியாக பொருளாக வழங்கிய அந்தக் குழந்தையின் உடம்பு.
இரண்டு: தன் உயிர்க்காற்றை மொழியாக்கி அறிவாக வழங்கிய தாய்மொழி, தமிழ்மொழி.
மழலைச்சொல் கேளா தவர்
என்று தமிழ்ப்பொற்றோர் அதன் வளர்ச்சியின் தொடக்கத்தைக் கொண்டாடுகின்றனர்.
இந்த வரலாற்றுக்கான செய்தியை இந்த இணைப்பில்; சென்று படிக்கலாம்:
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,174.