நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். 13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது அழகான தமிழ்ச்சொல். ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று முடிவு செய்துவிட்டாலே அந்தச் சொல்லில் ஆழமான பொருள் பொதிந்திருக்கும் என்பதும், அது நமக்கு ஆழத்தேடும் வகைக்கு அருமையான பொருளை தரக் காத்திருக்கிறது என்பதும் உண்மை. மந்திரம் எனும் தமிழ்ச்சொல் கொண்டுள்ள விளக்கம் என்ன? மனத் திரம்- மனத்தின் திரம் மந்திரம். மனம் என்கிற சொல் நடப்பு நிலையில் புழக்கத்தில் இருக்கிற சொல் அது குறித்து தெளிவாகவே நாம் அறிவோம். அம்மா பசிக்கிறது என்றால், அம்மா நமக்கு சோறு போடும் செயல் நடக்கிறது இல்லையா? அம்மாவுக்கும் நமக்கும் இணைப்பு இருக்கிறது. அதனால் அம்மாவிடம் சோறு கேட்டால் சோறு போடுகிறாள் என்று நம்மால் எளிதாக ஒரு கருத்து செயலாக்கம் பெறுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது அல்லவா? அப்படி நமது எல்லாக் கருத்தும் விசும்பில் பதிவாகியே நமது வாழ்க்கை நமது விருப்பத்திற்கு முன்னெடுக்கப்படுகிறது. நமக்கும், வெளியில் இருக்கிற அனைத்திற்கும் கடந்தும் உள்ளுமாக விசும்பு இணைப்பு கொடுக்கிறது. கடந்தும் உள்ளும் இருக்கிற அந்த விசும்பையே தமிழ்முன்னோர் கடவுள் என்றனர். அப்படியானல் மந்திரத்தால் மரத்திலிருந்து மாங்காய் விழ வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் விடை. உங்கள் வீட்டில் ஒரு மாமரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருநாள் நீங்கள் அந்த மரத்தடிக்குச் சென்று இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும் கேட்கின்றீர்கள். மாங்காய் விழாது. அப்படி ஒரேயொரு முறை கேட்டு உலகத்தில் யாராலும் மாங்காய் விழ வைக்க முடியாது. ஆனால் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மந்திரக்காரர்கள் தாம். நம் வாழ்க்கைக்காக நம் தலைஎழுத்தை நாம்தான் எழுதிக் கொள்கிறோம். தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?
ஆனால் திரம் என்றால் என்ன? திரம் என்பது திறன் என்னும் அற்றலின் குவிந்த நிலை ஆகும். ஐந்திரம் என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்து அடிப்படை ஆற்றல்களை குறிக்க தமிழ்முன்னோர் அமைத்த சொல்லே ஐந்திரம். ஆக திறன் என்பது திற, திறக்கப்பட்ட என்கிற ஆற்றலைக் குறிப்பது. திறக்கத் தயாராக இருக்கிற, திறந்தால் வெளிப்படக் கூடிய ஆற்றல் திரம். ஆக மந்திரம் என்பது மனதில் குவிந்திருக்கிற ஆற்றல்; திறந்தால் பயன்தரும் என்பதாகும். மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும்.
இதைத்தான் கணியன் பூங்குன்றனார் அவர்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலின் அடுத்த அடியாக (வரியாக) தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிறார். நமக்கு வந்ததாக கருதப்படும் எந்த நன்மையோ தீமையோ நாம் மனஅற்றலால் நினைத்த கருத்தே, விசும்பில் பதிவாகி நன்மையாகவோ தீமையாகவோ நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதாகும்.
அப்படி விழவைத்துக் காட்டினால் அது வித்தை (மேஜிக்) அப்படி வித்தைக்காரர்கள் உலகத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரக்காரர்கள் அல்ல.
நாம் மாங்காய் விழ வைப்பதற்கு அன்றாடம் மரத்தடிக்குச் சென்று, 'இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும்' ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருநாள் நீங்கள் வியப்படைகிற படிக்கு மாங்காய் விழும். அல்லது யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள், அல்லது அணில், அல்லது வெளவால் உங்களுக்கு அதைப்பறித்து போடும். உங்கள் கோரிக்கை மட்டும் நிறைவேறும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தரும் நபரோ, காலமோ உங்கள் தீர்மானத்திற்கு அப்பாற் பட்டது.
அந்த மந்திரத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழப்பாமல் மந்திரத்தை உருவாக்கவேண்டும். மந்திரத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடாது.
மந்திரத்தை அன்றாடம் ஒருமுறையாவது மனதில் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரி வேண்டிக்கொள்ள வேண்டும்.
உங்கள் நோய் தீருவதற்கு ஒரு மருத்துவரோடான தொடர்பு உங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும். மருந்தில்லாத நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,111.