சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்கள் தங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்து பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் நிகழ்ச்சிகளை நடத்த- நேரடியாக ஒருங்கிணைக்கத் தேவையில்லாமல், இணையத் தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிற சிறப்பான வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்தி வருகின்றார்கள். 13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்கள் தங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்து பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதுவும் நிகழ்ச்சிகளை நடத்த- நேரடியாக ஒருங்கிணைக்கத் தேவையில்லாமல், இணையத் தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிற சிறப்பான வாய்ப்புகளைச் செவ்வனே பயன்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்று மாலை நடக்கவிருப்பது சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் நூல் ஆய்வரங்கம். இன்று மாலை 7.00 மணிக்கு நூலாசிரியர். வீ.காந்தி லெனின் அவர்களின் ‘ஆயிரம் பாக்கள்- இயல்அறிவு தமிழ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி! முன்னெடுக்கிறது ‘சான்றோர்த் தளம்’ அமைப்பு. இது சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் 17வது நூல் வெளியீட்டு நிகழ்ச்சியாகும். முனைவர் தன்னானே சு.இரமேசு தமிழிசை பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். முனைவர் பாலமுருகன் நூலைவெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். நூலாசிரியர். வீ.காந்தி லெனின் அவர்கள்; தன்னுடைய நூலான ‘ஆயிரம் பாக்கள்- இயல்அறிவு தமிழ்’ குறித்து ஆய்வுரை நிகழ்த்துகிறார். பாவலர். மன்னர் மன்னன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கூகுள்குவியம் (ஜும்) செயலி மூலமாக முன்னெடுக்கிறது சான்றோர்த்தளம் அமைப்பு. கூட்டஅடையாளஎண்: 828-8992-9253. தமிழ்ஆர்வலர்கள் சான்றோர்த் தளத்தின் இந்த பதினேழாவது மின்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.