சமஸ்கிருதமோ, ஹிந்துமதமோ, பார்ப்பனியமோ தனி அடிப்படையாக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவைகள்- அவர்கள், நாவலந்தேயத்தில் குடியேறிய காலத்தில் வாழ்ந்திருந்த தமிழர் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகக் கட்டமைக்கப் பட்டவை என்று நிறுவுவதற்கு வடமொழியில் நிறைய சொற்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக்கட்டுரையில்- அந்த வகைச் வடமொழிச்சொற்களில், அத்வைதம் என்ற சொல் விளக்கப்படுகிறது. 03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள் ஆனாலும் சரி, அவைகளில் அடிப்படையாகப் பொதிந்திருக்கிற கோட்பாடுகளை- தமிழ் அறிவுத்தளத்தில் இருந்து பாகுபாட்டியல், முரண்பாட்டியல், வகைபாட்டியல் என்கிற மூன்றும் என்று நிறுவலாம். இந்தப் பாகுபாட்டியலும் வகைபாட்டியலும் கட்டுமானக் கோட்பாடுகள். முரண்பாட்டியல் சீர் திருத்தக் கோட்பாடு ஆகும். 'தமிழ்இயல்' பன்னெடுங்காலமாகவே வகைப்பாட்டியலைக் கொண்டாடும் அடிப்படையில் இயங்கி வருகிறது. அதை தமிழ்மக்களின் இயக்கப்போக்கிலும் சங்க இலக்கியங்களின் பாடுபொருளிலும் தெரிந்து கொள்ளலாம். நடப்பு நிலையில், தமிழ்இயலை முழுமையாகப் பேசுகிற, தமிழ்இயலை முழுமையாகக் கொண்டாடுகிற அமைப்போ, கல்விமுறையோ தமிழர்களுக்கு எதுவும் இல்லை. தமிழ் என்பது- தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நிலம், தமிழ்வரலாறு, தமிழ்இயல் என்கிற ஐம்பரிமாணங்களின் முழுமையாகும். இந்த ஐம்பரிமாணங்களிலும் தமிழை மீட்டுருவாக்கம் செய்கிற நிலையில், தமிழின் முழுமையான வகைபாட்டியல் கிடைக்கப்பெறும். தற்போதைய தமிழ்நாட்டில் பார்ப்பனியத்திற்கு எதிரான முரண்பாட்டியலையும் ஐரோப்பியத்திற்கு எதிரான முரண்பாட்டியலையுமே தமிழின் அடிப்படை போல (தமிழ்இயல் அல்ல) கட்டுமான முயற்சிகளில் பெரும்பாலான பேரறிமுகமான அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு அருவி என்கிற தமிழ்ச்சொல்லை பேரளவான புழக்கத்திற்குக் கொண்டுவராமல் நீர்வீழ்ச்சி என்று ஆங்கிலத்தை மொழிபெயர்ப்பது ஐரோப்பியத்திற்கு எதிரான முரண்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு ஐந்திரம் என்கிற தமிழ்ச்;சொல்லை பேரளவான புழக்கத்திற்குக் கொண்டுவராமல் பஞ்சபூதம் என்கிற சொல்லடியாக ஐம்பெரும்ஆற்றல் என்று மொழிபெயர்ப்பது பார்ப்பனிய முரண்பாட்டியல் ஆகும். இந்த எடுத்துக்காட்டு தமிழின் மொழியைப் பரிமாணத்தைப் பொறுத்ததாகும். மற்ற தமிழின் நான்கு பரிமாணங்களிலும் இது போன்ற நடவடிக்கைகள் நிறைய முன்னெடுக்கப் படுவதில் இருந்து தமிழை மீட்டு நிறுவது சாத்தியப்படுமா என்று வியக்கிற பெரும்பணி ஆகும். மதக்கோட்பாடுகளில் உலகின் பலமதங்கள் பாகுபாட்டுக் கோட்பாடுகளை கட்டுமானம் செய்து இயங்கி வருகின்றன. வழித்தோன்றல்களிடம் அதைக் மரபெனக் கொண்டாடச் செய்வதற்கு பொருளாதார வாழ்மானங்களும், கடுமையான சட்டங்களும் பயன்பட்டு வருகின்றன. இந்தியாவின் ஹிந்து மதத்;தில் பாகுபாடுகள் காணப்படுவதாலேயே அதை பாகுபாட்டுக் கோட்பாடு என்ற தலைப்பில் கொண்டுவந்துவிட முடியாது. ஹிந்து மதம் கட்டுமானம் செய்யப்பட்ட மதம்அன்று. ஹிந்துமதமோ, சமஸ்கிருத மொழியோ, பார்ப்பனியமோ, எந்த இனத்தாலும் கட்டுமானம் செய்யப்பட்டவைகள் அல்ல. அதனால் அவைகளை மரபெனக் கொண்டாடச் செய்வதற்கு பொருளாதார வாழ்மானங்களும், கடுமையான சட்டங்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லை. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றே இந்திய அரசியல்அமைப்பு தெளிவு படுத்துகிறது. ஆனாலும் ஒன்றியத்தை ஆளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற முன்பு காங்கிரஸ் தற்போது பாஜக வடஇந்தியத் தலைவர்கள் தூக்கிப்பிடிக்கும் ஹிந்துத்தவா, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியன- சட்ட அங்கீகாரம் பெறாத அத்துமீறல்களே. ஈரானில் இருந்து இந்தியா வந்த நாடோடிக் கூட்டம் அங்கு பின்பற்றி வந்த மொழி, மதம் கோட்பாடு இழந்து இங்கே வாழ்ந்த தமிழ் இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முரண்பாடுகளே இன்றைக்கு பெருங்கூட்டமாக தூக்கிப்பிடிக்கிற சமஸ்கிருதம், ஹிந்துத்துவா, பார்ப்பனியம் எல்லாமே. அந்த வகையில் அவர்கள் அமைத்துக் கொண்ட 'அத்வைதம்' என்ற சொல்- தமிழ் அடிப்படைக்கு எப்படி முரண்படுகிறது என்பதற்கான விளக்கமே இந்தக் கட்டுரை. 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் 'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு உலகத் தோற்றத்தின் அடிப்படையாக தமிழர் தெரிவிக்கிற- ஒன்று என்றாலே 'ஒன்றிய இரு அல்லது ஒன்றிய இரண்டு' என்று தமிழர் தெரிவிக்கிற- இரண்டடிப்படை கோட்பாட்டிற்கு முரண்படுவதுதான் ஹிந்துத்துவா கோட்பாடு. அறங்கூற்று என்கிற தமிழ்சொல்லை நீதி என்றும் அதன் எதிர்மறை அநீதி என்றும் சொல்லப்படுவது போல தமிழரின் இரண்டடிப்படை கோட்பாட்டை துவைதம் என்று சொல்லி, தாங்கள்- இரண்டடிப்படைக்கு முரண்படுகிறோம் என்பதாகவே அ துவைதம் அல்லது அத்வைத்தம் என்று தங்கள் கோட்பாட்டிற்கு பெயர் அமைத்துக் கொண்டுள்ளனர் பார்ப்பனியர்கள். அவர்கள் அத்தைவதம் குறித்து தெரிவிக்கிற செய்திகள்:-இது ஹிந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்| பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது. ஆதிசங்கரர் முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை. இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும். அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்: 2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த இறைவன் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும். 3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே. 4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) (உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) (உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும். என்று பேசப்படுகிறது.
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே'
என்பது தொல்காப்பிய நூற்பாவில் சொல்லப் படுகிற உலகத்தோற்றம் குறித்த தமிழ் அடிப்படையாகும்.
தெள்ளியர் ஆதலும் வேறு'
என்பது திருக்குறளில் சொல்லப்படுகிற உலகத்தோற்றம் குறித்த தமிழ்அடிப்படையாகும்.
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் 'ஸத்' என்றும், (பரப்-) பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,101.