நமக்கு நமது பெற்றோரால் சூட்டப்பட்ட பெயரின் இயல்பை நமது அடிப்படையான இயல்பாகக் கொள்வதற்கான கலையாக தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலைதான் கணியம் ஆகும். 19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது ஐரோப்பிய இயல்அறிவும் தமிழ் இயல்கணக்கும் நிறுவிய உண்மையாகும். ஒவ்வொருவருக்கும் அவர் அமைந்த எண்ணிக்கையால் ஒரு அடிப்படை இயல்பு இருக்கும். அந்த இயல்பே அவரின் மனநிலை ஆகும். உங்கள் இயல்பு சார்ந்த விடையங்கள் உங்கள் மனவலிமையைக் கூட்டும். உங்களுக்கு இயல்பு இல்லாத விடையங்கள் உங்களைச் சோர்வடையச் செய்யும். நமக்கு நமது பெற்றோரால் சூட்டப்பட்ட பெயரின் இயல்பை நமது அடிப்படையான இயல்பாகக் கொள்வதற்கான கலையாக தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலைதான் கணியம் ஆகும். முதலாவது முன்னேற்றக் கலை சோதிடம் சாதகம் என்கிற நிமித்தகம் ஆகும். கணியக்கலை- அடிப்படையான, ஒன்பது இயல்புகளைப் பட்டியல் இடுகிறது. அவை ஒன்று உழைப்பு, இரண்டு மேலாண்மை, மூன்று முனைப்பு, நான்கு பயணம், ஐந்து கலை, ஆறு தொழில்நுட்பம், ஏழு கமுக்கம் மற்றும் செல்வம், எட்டு புகழ், ஒன்பது தனிமுடிவு மற்றும் போரியல் என்பனவாக. இந்த இந்த இயல்புக்கான விடையங்கள் அந்த அந்த இயல்பினரின் மனதை துள்ளல் நிலையில் வைத்திருக்கும் என்பது கணியக்கலை நிறுவல் ஆகும். நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த- பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில், பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிறது நமது பெயர். உங்கள் பெயரின் அடிப்படை இயல்பு அறிந்து கொள்வதற்கும், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்பில் பெயர் சூட்டுவதற்கும், நீங்கள் விரும்பும் இயல்புக்கான விடையங்கள் எவையெவை என்று கண்டுகொள்வதற்கும், உங்கள் இயல்பை நினைத்து நினைத்துக் கொண்டாடுவதால் உங்கள் இயல்பு உங்களுக்கு வலுவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும், உங்கள் பெயரை நீங்கள் விரும்பும் இயல்பில் மாற்றிக் கொள்வதற்கும், நீங்கள் தொடங்கும் நிறுவனம் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் உங்கள் இயல்பில் அமைத்துக் கொள்ளும் வகைக்கும் கணியக்கலை நமக்குப் பேரளவாக உதவமுடியும். அன்பின் இனிய தமிழ் உறவுகளே! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் அவர்களை அனைவரும் அறிவோம். பக்குடுக்கை நன்கணியன் என்றும் இன்னொருவர் இருந்திருக்கிறார். அவரை தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்கள் அறிவார்கள். பூங்குன்றனாருக்குக் கணியம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதே? கணியம் என்றால் என்ன? அது ஒரு துறைபடிப்பு அல்லது கலை என்றால் அது நம்முடன் தொடர்ந்து எடுத்து வரப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகள் எழும். திருக்குறள் நமக்குக் கிடைப்பதைப் போல கணியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மீட்பதற்கு தமிழ் மொழியில் வேறுவேறு வடிவங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகால முயற்சியில், கணியத்தை கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் அடிப்படைக்கு பொருந்தும் வகையாக மீட்டெடுத்திருக்கிறேன். கணியக்கலையை கற்றுத் தருவதற்கு நான் முன்னெடுத்திருக்கும் சில முதன்மைத் தலைப்புகள்:
1.நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம் கணியக் கலை ஆகும்.
2.நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட மூன்று முன்னேற்றக் கலைகள்.
3.உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.
4.எண்ணிக்கை வேறுபாடுதாம் ஒவ்வொன்றையும் வௌ;வேறாகக் காட்டுகிறது.
5.உங்கள் ஒவ்வொரு அகவையின் இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வது எப்படி
6.உங்கள் பெண் குழந்தைகளுக்கு கணியக்கலை அடிப்படையில் பெயர் சூட்டி சாதிக்க
7.உங்கள் ஆண் குழந்தைகளுக்கு கணியக்கலை அடிப்படையில் பெயர் சூட்டி சாதிக்க
8.ஒன்று முதல் ஒன்பது எண்களுக்கான இயல்புகளும் பலன்களும்
9.பெயரை மாற்றிக் கொண்டால் இயல்பை மாற்றிக் கொண்டு சாதிக்க முடியுமா
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,453.