நாள்: 22
கிழமை: வெள்ளி
மாதம்: ஆனி
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: ரேவதி
ஓரை: மீனம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840
இன்றைய இயல்பு எண்: சுழியம்
இயல்பு: எதிர்வினை.
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு என்பதை நியுட்டன் மூன்றாவது விதி என்று உலகம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அது ஏன் என்பதை விளக்குவதாக உள்ளது தமிழர் சுழியம் குறித்த செய்திகள்.
இயல்பு எண் சுழியத்தில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: செழியன், அமுதா.
இன்றைய உற்சாகமான செய்தி: ஒரு பெண் தன்னந்தனியாக இருட்டிய வேளையில் முழுமையாக நகைகளை அணிந்து கொண்டு செல்ல முடிந்தாலே அந்த நாடு விடுதலை அடைந்த நாடாக கொள்ள முடியும் என்று காந்தியார் சொன்னதாக நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையான விடுதலைக் காற்றை பிரபாகரன் காலத்தில் ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்தார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்வது, அப்படியா என்று வியப்படையத் தக்கதாகவும், அப்படிப் பட்ட தலைவன் நம் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்தும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்கிற வெட்கமும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.