நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த- பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை- அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் தொடர். 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நிமித்தம்- காலத்திற்கு அடிப்படையான கோள்களை யுணர்ந்து, 60தற்பரைஒருவிநாழிகை, ஞாயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம் வெள்ளி காரி என்கிற கிழமைக்குரிய ஏழுநாட்களுக்கு ஏழுபெயர்கள். 15தற்பரை 31விநாழிகை 15நாழிகை 365நாட்கள் கெண்டது ஓர் ஆண்டு என்று காலத்தை காலம் சார்ந்தது அல்லவா நிமித்தகக்கலை? நிமித்தகக் கலை எனும் பகுத்தறிவு மார்க்சிய தலைப்பில் இருப்பவர்கள், -இன்று தமிழ்ஆண்டு5123 கார்த்திகை மாதம் இருபத்தி ஒன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை 22வது நாழிகை நேரத்தில் இந்தப் பதிவு மௌவல் இணையத்தளத்தில் இடப்படுகிறது- நிமித்தகக் கலை- நம் பிறந்த நேரத்தை வைத்து, நடப்பு கோள்களின் நிலையை வைத்து, பலன் சொல்லுகிற கலை. நல்ல பலன் வந்தால் தொடர்ந்து செயல்படலாம். பலன் சரியாக வரவில்லை என்றால், முயற்சியைத் தள்ளி முன்னெடுக்கலாம். என்ன பலன் வருகிறதோ அது அப்படியே நடக்கும் என்பதை தமிழ்முன்னோர் நிர்பந்திக்கவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை. அப்படி நிமித்தகப் பலனில் தமிழ்முன்னோர் நூறு விழுக்காடு உறுதிப்பாடாக இருந்திருந்தால் அடுத்து கணியத்திற்கும், அதற்கும் அடுத்து மந்திரத்திற்கும் பயணித்திருக்க மாட்டார்கள். நிமித்தகப் பலனும்- இந்த நல்லப்பலன் நமக்கு நடந்தே ஆகவேண்டும் என்கிற மனஉறுதிக்கு நம்பிக்கை தருகிற வகைக்கான ஒரு பாதைதான். இது மந்திரக்கலையின் மாற்றுவழிப்பாதை. அல்லது குறுக்குவழிப்பாதை. அடுத்து நாம், 'கணியக்கலை அறிவோம்' தொடரில் வகுத்தளிக்கிற பாதையும் உங்கள் மனஉறுதியை உங்கள் பெயரில் நிறுத்திக் கொண்டு இந்த நல்ல இயல்பில் நான் சாதித்தே தீருவேன் என்று சாதித்துக் காட்டுவதற்கானதுதான். இதுவும் மந்திரக் கலையில் மாற்றுவழிப்பாதைதான். ஆனால் குறுக்கு வழிப்பாதையல்ல. வரைபடப்பாதை. உண்மையில் தமிழ்முன்னோர் அமைத்த மந்திரக்கலை மூலமாகத்தான் நம்முடைய விதியை நாம் விரும்பும் வகைக்கு, நாமே- விசும்பு அல்லது கடவுள் என்கிற பேரறிவு பேரற்றல் அண்டவெளியில், எழுதி நூறு விழுக்காடும் சாதிக்க முடியும். சாதிக்கிற ஒவ்வொருவரும் எண்ணிய எண்ணத்தில் திண்ணியராக இருக்கிற இந்த மந்திரக் கலையை இயல்பாகவே பெற்றவர்கள் ஆவர். அப்படி இயல்பாக பெறாத நாம்- நம் அறிவாற்றால் மூலம் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் முன்னோர் அமைத்த மூன்று கலைகள் தாம் நிமித்தகம் கணியம் மந்திரம் என்பன.
நிமித்தகம்,
கணியம்,
மந்திரம்.
இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள்.
என்றால், 'காலம்சார்ந்த' என்று பொருள்.
நிமித்தகம் என்பது காலம்சார்ந்த முன்னேற்றக் கலை.
ஆக நிமித்தகம் என்கிற கலை தோற்றுவிக்கப் படுவதற்கு,
காலம் குறித்த,
பார்வை-தீர்மானம்-முழுமையானவரையறை
நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
தற்பரை-விநாழிகை-நாழிகை-பகல்இரவு-நாள்-கிழமை-மாதம்-பருவம்-ஆண்டு-ஆண்டின் சுழற்கணக்கு தொடர்கணக்கு என்பனவெல்லாம் நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
நிறைவு செய்யப் பட்டது.
60விநாழிகைஒருநாழிகை,
பகல்30இரவு30-60நாழிகைஒருநாள்;
ஏழுநாள்ஒருகிழமை
பனிரென்டுமாதங்கள்;
ஆறுபருவங்கள்;
நிறைவு செய்தான் நம்பழந்தமிழன்.
இதுவரை நாம் விவரித்தது காலம்.
இத்துடன் பிறந்த நேரம்
அதையொட்டி நிகழப் போகும் இடர்சோதிப்பதற்கான
சாதகக் குறிப்புகள் உள்ளடங்கியது.
காலம் சார்ந்த இந்தப் பகுதியை மட்டும்,
ஜாதகம் ஜோஸ்யம் என்று ஆரியர் கண்டுபிடித்த கலை போல தலையில் வைத்துக் கொண்டாடியும்,
மூடநம்பிக்கை என்று எள்ளி நகையாட,
என்கிற தொடர்ஆண்டுகணக்கு உள்ளிட்ட
முழு நிமித்தகக்கலையையும் பின்னுக்குத் தள்ளி விட்டு-
உலகுக்கே கிழமையையும் நிமித்தகக் கலையின் பெரும்பகுதியை வானியல் என்ற தலைப்பில் கொடையாகக் கொடுத்த தமிழர்கள் நாம் என பெருமிதம் கொள்ள வேண்டியவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். நிமித்தகக் கலையின் நிலை- இன்று இதுதான்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.