நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில்- பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து, நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த, கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் தொடர். 23,தை,தமிழ்த்தொடராண்டு-5123: சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல கணியக்கலை. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே கணியக்கலை. இந்தக் கலையின் அடிப்படையில் தொடர்ந்து வரும் உங்கள் ஒவ்வொரு அகவையின் இயல்பைப் புரிந்து கொண்டு வெற்றிக்கு முயலும் வகைக்கானது இந்தக் கட்டுரை. அடிப்படை இயல்புகள் மூன்று. அவை- இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு எண்ணுக்குமான இயல்புகளை நீங்களே பக்கம் பக்கமாக எழுத முடியுமல்லவா? அந்த வகையில் தொடரும் உங்கள் அகவையின் ஆட்சி இயல்பை உங்களின் பெயர் இயல்போடு பொருத்தி நீங்கள் உங்களுக்கு விரும்பும் வெற்றியை சாதகமாக்கிக் கொள்ள முடியும். ஒன்றுக்கான இயல்பு உழைப்பு என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் முதலாம் அகவை ஆட்சி இயல்பு உழைப்பு ஆகும். அந்த அகவை இயல்போடு நீங்கள் உங்கள் குழந்;தைகளுக்கு சூட்டுகிற பெயர் இயல்பும் விசும்பில் பதிவாகி அந்த வகைக்கு அந்த குழந்தை கையை காலை ஆட்டி உணவுக்காக அழுது, நோயுக்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கி, தனது ஒன்றாம் அகவையை நிறைவு செய்கிறது அந்தக் குழந்தை. மூன்றுக்கான இயல்பு முனைப்பு என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் மூன்றாம் அகவை ஆட்சி இயல்பு முனைப்பு ஆகும். நான்குக்கான இயல்பு பயணம் என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் நான்காம் அகவை ஆட்சி இயல்பு பயணம் ஆகும். ஐந்துக்கான இயல்பு கலை என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் ஐந்தாம் அகவை ஆட்சி இயல்பு கலை ஆகும். ஆறுக்கான இயல்பு தொழில்நுட்பம் என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் ஆறாம் அகவை ஆட்சி இயல்பு தொழில் நுட்பம் ஆகும். ஏழுக்கான இயல்பு கமுக்கம் என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் ஏழாம் அகவை ஆட்சி இயல்பு கமுக்கம் ஆகும். எட்டுக்கான இயல்பு புகழ் என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் எட்டாம் அகவை ஆட்சி இயல்பு புகழ் ஆகும். ஒன்பதுக்கான இயல்பு போரியல் என்கிற நிலையில் ஒவ்வொரு குழந்தையின் ஒன்பதாம் அகவை ஆட்சி இயல்பு போரியல் ஆகும். பத்தாவது அகவையில் மீண்டும் ஒன்றுக்கான இயல்பான உழைப்பு- ஆட்சி இயல்பாக- இரண்டாவதாக தொடரும் நிலையில்- நிருவாகம் சார்ந்த உழைப்பாக மிளிர்கிறது. இப்படி உங்களின் ஒவ்வொரு அகவையின் ஆட்சி இயல்பை புரிந்து கொண்டு, அந்த வகைக்கு இயங்கி, உங்கள் வெற்றியை உங்கள் வாழ்க்கை முழுவதும் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.
வகைபாடு, பாகுபாடு, முரண்பாடு என்பன.
இந்த இயல்புகளை முறையே தாய், தந்தை, பிள்ளைகள் ஆகியோரிடம் காணலாம்.
கணியக் கலையில் தாய்-1 தந்தை-2 பிள்ளைகள்-3 என்று எண்களோடு பொருத்தலாம்.
முதலாமவளாக இருக்கிற தாயுக்கு எண் ஒன்றின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
தாயின் இயல்புகளை எண் ஒன்றின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
இரண்டாமவராக இருக்கிற தந்தைக்கு எண் இரண்டின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
தந்தையின் இயல்புகளை எண் இரண்டின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
மூன்றாவதாக இருக்கிற பிள்ளைகளுக்கு எண் மூன்றின் இயல்புகள் அமையப் பெறுகிறது.
பிள்ளைகளின் இயல்புகளை எண் மூன்றின் மீதும் பொருத்திப் பார்க்கலாம்.
அடுத்து வருவது பயணம்.
நான்காவதாக அமைகிற இயல்பு பயணம்.
பயணத்திற்கான இயல்பு எண்-4
பயணம் சார்ந்த துறைகள் அனைத்திற்குமான இயல்பு நான்கு.
அடுத்து வருவது கலை.
கலை பொதுவானது; கலைக்கான இயல்பு எண்-5 ஐந்து என்கிற எண் 1,2,3,4,5,6,7,8,9 என்கிற எண்களில் நடுவில் அமையப் பெற்ற வாய்ப்பால் அது நடுநிலையானது.
கலை- எண்ஐந்து இவற்றின் இயல்புகளை ஒன்றன் மீது ஒன்று பொருத்தி கொள்ளலாம்.
அடுத்து வருவது இலக்கியம்.
ஆறாவதாக அமைகிற இயல்பு இலக்கியம்.
இலக்கியத்திற்கான இயல்பு எண்-6
இலக்கியத்தின் இயல்பை ஆறின் மீதும் ஆறின் இயல்புகளை இலக்கியத்தின் மீதம் பொருத்திக் கொள்ளலாம்.
அடுத்து வருவது கமுக்கம். செல்வமும் இந்தத் தலைப்பிலேயே அமையும்.
கமுக்கத்தின் இயல்பு எண்-7
நமக்கு எளிதாகப் புரியாத எல்லாத் தலைப்புகளும் கமுக்கத்தின் இயல்பின.
ஏழு என்கிற தலைப்பில் வருகிற எல்லாவற்றையும் பொருத்தி ஆய்வு செய்யலாம்.
எட்டு என்றாலே சென்றடைவது. எட்டாவது இயல்பு புகழ்.
புகழுக்குரிய இயல்பு எண்-8
புகழுக்குரியவைகள் எல்லாம் இந்த இயல்பில் பொருந்தும்.
கடைசியாக போர்.
போர் ஒன்பதாவது இயல்பு.
போரின் இயல்பு எண்-9
பெருவெடி தாம் கடைசி. இது தமிழியல். பழந்தமிழர்தம் முடிவான முடிவு.
இரண்டுக்கான இயல்பு நிருவாகம் என்கிற நிலையில், ஒவ்வொரு குழந்தையின் இரண்டாம் அகவை ஆட்சி இயல்பு நிருவாகம் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,150.