நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்த: பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை அமைத்துக் கொள்வது குறித்த கலையே கணியக்கலை. கணியக்கலை குறித்து தொடர்ந்து பேசிடும் வகைக்கானதே இந்தத் தொடர். 19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இந்தக் கலையில் நாம் நுழைய முற்பட்ட உடனேயே- நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண் கண்டு பிடித்து அந்த எண் நமது பிறந்த (ஆங்கிலத்) தேதிக்குப் பொருந்த வில்லையென்று- பெயரின் எழுத்துக்களில் சில பல மாற்றம், அல்லது பெயரையே மாற்றம் செய்து கொள்கின்றனர். ஒரு தமிழ்க் குழந்தை தனது மூன்று அகவைக்குள் தமிழ் இலக்கணம் என்றால் என்ன என்று தெரியாமலே, பல்லாயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை இலக்கணத்தோடு பிணைத்து அழகாக மழலைத்தமிழ் பேச சாத்தியமாகிறது. இந்த வாய்ப்பை தாயின்மடியும், தாயின் தோளும் அந்தக் குழந்தைக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டின் எந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், அந்தக் குழந்தை தன்தாயின்மடி. தாயின்தோள் ஆகிய பல்கலைக்கழகத்தில் 'மழலைத்தமிழ் முனைவர்' பட்டம் பெற்ற தகுதியின் அடிப்படையே தீர்மானிக்கிறது என்பதே உண்மை. எந்தக் குழந்தைக்கும் ஆன அடிப்படை இயல்பு அங்கிருந்தே உருவாகத் தொடங்குகிறது. அப்படியிருக்கும் போது நாம் நமது பிள்ளைகளின் பெயரை அல்லது நமது பெயரை ஆங்கிலத்தில் எழுதி சிலபல மாற்றங்களை முன்னெடுத்து எப்படி நமது குழந்;தைகளின் அல்லது நமது இயல்பை மாற்றிக் கொள்ள முடியும்? ஆங்கிலத்தில் எழுதிய பெயருக்கு, ஆங்கில நாளை (தேதி) பொருத்தி- பிறந்ததிலிருந்து இன்று வரை, நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்தப் பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரை சிதைத்து அல்லது முழுமையாக மாற்றி உறுதியான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பிருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர் இந்த வகை முயற்சியில் பிழை இருக்கிறது என்பதற்காக அவர்தம் முன்னேற்றத்திற்கான முயற்சிக்கே தடை போடுவது தவறு; மிக மிக தவறு. என்ன செய்ய வேண்டும்? அதை விட சிறந்த, செப்பனிடப் பட்ட, தமிழர் எந்த அடிப்படைகளையும் இழக்காத மாற்று வழியைக் காட்ட வேண்டும்! அதற்கான முயற்சிதாம் இந்தக் 'கணியக்கலை அறிவோம்' தொடர். உங்கள் ஆர்வங்களையும் ஐயப்பாடுகளையும் மரஅயசiயெனயசெளூபஅயடை.உழஅ என்ற மின்அஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்.
இன்று தமிழர் ஆண்டு கணக்குப்படி 19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123. என்கிற 5122 ஆண்டு கால வரலாற்றையும் தொலைத்து-
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.