கலியுகம் என்ற தலைப்பில்: ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழித்து கிருதாயுகத்தை உருவாக்குவார். கல்கி அவதாரம் எடுத்து ஸ்ரீகிருஷ்ணர் என்கின்றனர் பார்ப்பனியர்கள். ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிக்கிறவனுடையதாக கலியுகஆண்டு இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் கலியுக ஆண்டுக் கணக்கிற்கு சொந்தக்காரர்கள் யார்? அலசுவோம். 24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஞ்சாங்கத்தைப் புரட்டுங்கள் அதில் ஒவ்வொரு ஆண்டுக்கணக்கின் நடப்பு எத்தனையாவது ஆண்டு என்று குறித்திருக்கும். உலகத்தின் முதலாவது வானியலாளன் தமிழன். ஞாயிற்றின் சுழற்சி அடிப்படையில் ஒரு ஆண்டுக்கான காலம்: 365நாட்கள், 15நாழிகை, 31விநாழிகை 15தற்பறை என்பதாகக் கணக்கிட்டு 5120 ஆண்டுகளுக்கு முன்னம் கலியுக ஆண்டு என்கிற தொடர் ஆண்டுக்கணக்கு முறையை உருவாக்கியவன் தமிழன். அவனுக்கு தொடக்கத்தில் சுழல் ஆண்டுக்கணக்கு முறை இருந்தது. அறுபது ஆண்டுகள் ஒரு தலைமுறை இரண்டு தலைமுறை ஒரு யுகம் என்று கணிப்பான். அப்போது தமிழர்கள் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டுகள். இரண்டு தலைமுறை. சுழல் ஆண்டுகளுக்கு அறுபது மரங்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அவற்றை பார்ப்பனியர்கள் மொழிமாற்றம் செய்து கொண்டார்கள். பார்ப்பனியர்கள் தாங்கள் மொழிமாற்றம் செய்து கொண்ட சுழல் ஆண்டுக் கணக்கு முறையையும், தொடர் ஆண்டுக் கணக்கில் சாலிவாகன மற்றும் விக்கிரம ஆண்டுக்கணக்கு முறைகளையும் பின்பற்றுவார்கள். ஆனால் பார்ப்பனியர்கள் ஒருபோதும் கலியுக ஆண்டை பயன்படுத்த மாட்டார்கள். நாம்தான் அவர்களுடையதோ என்று எண்ணி புறந்தள்ளியிருக்கிறோம். பார்ப்பனியர்கள் தமிழகத்தில் நுழைந்த போது தமிழர்தம் கலியுகத்தை இழிவு படுத்த கலியுகம் எவ்வளவு கேவலமானதாக இருக்கும் என்று பட்டியல் இட்டு, இந்தக் கலியுகத்தை முடித்துக் கட்டி பார்ப்பனியர்களின் சிறப்பான ஆட்சிக்கான கிருதாயுகம் தோற்றுவிக்கப்படும். அதற்கு ஸ்ரீகிருஷ்ணரின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் முன்னெடுக்கப்படும் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக கதை கட்டி வந்திருகின்றார்கள். தமிழகம்- காங்கிரஸ் ஆட்சி, அடுத்து திமுக ஆட்சி, அடுத்து எம்ஜியார் அதிமுக ஆட்சி, அடுத்து செயலலிதா அதிமுக ஆட்சி, தற்போது எடப்பாடி மற்றும் பன்னீர் அதிமுக ஆட்சியை கண்டு வருகிறது. இதில் நீங்கள் அதிகமாக சாடுகிற ஆட்சி எது என்று சொன்னால், நீங்கள் எந்தக்கட்சிக்கு ஆதரவானவர் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடலாம் அல்லவா? இவற்றுள், நடப்பில் இருக்கிற எடப்பாடி மற்றும் பன்னீர் அதிமுக ஆட்சியை நீங்கள் கடுமையாகச் சாடுகின்றீர்கள் என்றால், நீங்கள் நடப்பு அதிமுகவற்கு எதிரானவர் என்றுதானே பொருள். நாம் வரலாற்றில் முன்னெடுத்த ஒரு வேடிக்கையைப்பாருங்கள். கலியுகம் என்கிற காலத்தைப்பற்றி பார்ப்பனியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை வைத்து கலி என்கிற சொல்- கலியுகம் என்கிற சொல், கலிப்பா என்கிற சொல், கலியுக ஆண்டு என்கிற சொல், கலியுக ஆண்டுக்கணக்கு என்கிற சொல் எல்லாம் பார்ப்பனியர்களுக்கு எதிரானவைகளா? இல்லையா என்பதை அறிந்து கொள்வது நமது கடமையாகும். கலியுகத்தில்:- அரசர்கள் செங்கோல் தாழும். கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளைப் பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும். என்று தெரிவிக்கின்றார்கள். ஆதாவது அனைத்து தமிழர் ஆட்சிகளும் முடித்து வைக்கப்பட்டு, பாஜக ஆட்சி தமிழகத்தில் வரும் என்கிறது போல இந்தச் செய்தி இருக்கிறது இல்லையா? அப்படியானால் கலியுக ஆண்டுக்கணக்கு யாருடையது? கலியுடன் போரிட்டு தீயசக்திகளை அழிக்கிறவனுடையதா கலியுகஆண்டு? ஆனால் கலியுக ஆண்டுக் கணக்கை பார்ப்பனியர்களுடையது என்று தள்ளி வைத்து விட்டு தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கேயில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம் கலியுக ஆண்டுக் கணக்கிற்கு சொந்தக்காரர்கள் என்று கெத்து காட்ட வேண்டிய தமிழர்களாகிய நாம்.
கலியுக ஆண்டு- 5121.
சாலிவாகன ஆண்டு- 1941
கொல்லமாண்டு- 1194-95
விக்கிரம சகாப்தம்- 2076-77
தென்னிந்தியா- விகாரி
வடஇந்தியா- சாதரண
சௌராஷ்டிர விஜயம்- 707
ஸ்ரீராமானுஜாப்தம்;- 1003
பசலி- 1428-29
பிரபாவதி ஆண்டு- 33
ஆங்கில ஆண்டு- 2019-20
திருவள்ளுவர் ஆண்டு- 2050-51
இவற்றுள் கலியுக ஆண்டு என்பது தமிழருக்கு சொந்தமான தொடர் ஆண்டுக் கணக்கு முறையாகும்.
மக்கள் மனப்பான்மையில் பொறாமை அதிகமாகும்;. ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது. காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.
ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது. அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.
திருமணம் அவரவர் விருப்பப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல. ஆக இப்படியான தமிழர்களுக்குச் சொந்தமான கலி என்கிற சொல்- கலியுகம் என்கிற சொல், கலிப்பா என்கிற சொல், கலியுக ஆண்டு என்கிற சொல், கலியுக ஆண்டுக்கணக்கு என்கிற சொல் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு-