Show all

விஞ்ஞானம் ஏன் கடவுளை நம்பவில்லை?

விஞ்ஞானம் ஏன் கடவுளை நம்பவில்லை? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கேள்வி தமிழ்அடிப்படையை அறிவுச்சுழியம் என்று நிறுவுவதற்கான அரசியல் நோக்கத்திற்கானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகிறது இந்தக் கட்டுரை. 

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தக் கேள்வி தமிழ்அடிப்படையை அறிவுச்சுழியம் என்று நிறுவுவதற்கான அரசியல் நோக்கத்திற்கானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 

இந்தக் கேள்வியை முன்னெடுத்திருக்கிற கேள்வியாளர் நோக்கமாஅது என்று ஆய்ந்தால், உறுதியாக இல்லை. இல்லவேயில்லை என்பதுதான் பொருள். 

இன்றைய தமிழ்நாட்டுக் கல்விமுறை கேள்வியாளரை அந்த நோக்கத்திற்கு ஆற்றுப்படுத்துவதற்காக கல்வி வழங்கியிருக்கிறது என்பதே உண்மை.

காங்கிரசார் காலத்தில் இடுகுறியாக தமிழுக்கு கொண்டுவரப்பட்ட விஞ்ஞானம் என்ற சொல்லில், ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பை மேன்மைப்படுத்துவதற்கு கேள்வியாளர் தமிழ்நாட்டுக் கல்விமுறையால் ஆற்றுப்படுத்தப் பட்டிருக்கிறார். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானல் இவர் ஒன்றிய அரசின் ஆங்கிலவழிக் கல்வியால் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று கொள்ள விஞ்ஞானம் என்கிற சொல் நமக்கு இடம் தருவதாகிறது. 

இந்த இடத்திற்கு இவர் சயின்ஸ் என்கிற தலைப்பையே பயன்படுத்தியிருப்பாரேயானால் இவரை ஆற்றுப்படுத்துவது பதின்மக் கல்வி தலைப்பில் முன்னெடுக்கிற ஆங்கில வழிகல்வி என்று முடிவுசெய்து கொள்ள முடியும். 

இந்த இடத்திற்கு இவர் அறிவியல் என்கிற தலைப்பை பயன்படுத்தியிருப்பாரேயானால் இவரை ஆற்றுப்படுத்துவது அரசுப்பள்ளிகள் முன்னெடுக்கிற தமிழ் வழிகல்வி என்று முடிவுசெய்து கொள்ள முடியும்.

விஞ்ஞானம், சயின்ஸ், அறிவியல் இந்த மூன்று சொற்களிலும் பொதுவாக முன்னெடுக்கப்படுகிற அரசியல்- தமிழுக்கு இந்த வகைத்துறை இல்லை மற்றும் இருந்திருக்கவும் இல்லை என்று நிறுவுகிற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழ் அந்தத்துறையை உலகினருக்கு முன்பாகவே கொண்டிருக்கிறது. அந்தத் துறைக்குப்பெயர் இயற்றமிழ் என்பது ஆகும். அந்த இயற்றமிழில்- உலகின் முதலாவது அணையாக திருச்சியில் கல்லணை கட்டிய நீர் மேலாண்மையியல் மற்றும் கட்டிடவியல், உலகினருக்கு தமிழர் வழங்கிய கொடையாக கிழமைகளுக்கு கோள்களின் பெயர்களை சூட்டிய வானியல், உலகின் முதலாவது கடலோடியாக கப்பல் கட்டி பயணித்த கடலியல், தட்பவெப்பவியல், தொழில் நுட்பவியல் அனைத்தும் அடங்கும்.

இதை உலகப்பொதுவாகச் சுட்டுகிற போது தமிழர்க்கு மட்டுமான இயற்றமிழை இயல்அறிவு என்று சுட்டலாம். அதை விஞ்ஞானம் என்றோ, அப்படியே சயின்ஸ் என்றோ, அறிவியல் என்றோ புழங்குவது- தமிழ்அடிப்படையை அறிவுச்சுழியம் என்று நிறுவுவதற்கான அரசியல் நோக்கத்திற்கானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 

அடுத்து இந்தக் கேள்வியில் இருக்கிற கடவுள் என்ற சொல்லுக்கு வருவோம். முதலாவதாக கடவுள் என்பது தமிழ்ச்சொல். கடவுள் என்கிற சொல்லில் தமிழ் பொதித்திருக்கிற பொருள் அடிப்படையில் உலகில் எந்த மொழியும் சொல்லைக் கொண்டிருக்கவில்லை. உலகினரின் எந்த சொல்லுக்கும் கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லை- கடவுள் என்பதை ஒரு மூலமுதல் படைப்பாளியாக, பேராற்றல் மிக்க ஆண்பாலாக வீணடித்தால், கடவுள் என்கிற சொல்லில் தமிழ் பொதித்திருக்கிற கண்டுபிடிப்பு பொருளற்றதாகி விடும். 

அயல்சார்பில், இன்னும் சிறப்பாகச் சொன்னால் அயல்மலைப்பில் தமிழர்களும் இந்த கடவுள் என்ற சொல்லுக்கு இடுகுறியான பொருள் கற்பித்து கடவுள் என்ற சொல்லை வீணடித்துக் கொண்டிருக்கிறேம். கடவுள் நம்புவதற்கானது அல்ல என்று, கடவுள் என்கிற சொல்லுக்கு தமிழ்பொதித்திருக்கிற பொருளில் கடவுளைப் புரிந்து கொள்வோமேயானால் இந்தக் கேள்விக்கான தேவை எழாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,572.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.