வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, படையல் செய்தால் பலன் கிடைக்குமா? இந்திய கடவுள்களுக்கு அதிக சக்தி உள்ளதா? என்ற வினாவிற்கு நான் அளித்த விடை குறித்ததே இந்தக் கட்டுரை. 26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடவுள் மற்றும் இறை என்கிற சொற்கள் தமிழுக்கு மட்டுமே உரிய சொற்கள். அதற்கு நேரான பொருள் தரும் வகையிலான சொற்கள் உலகின் எந்த மொழியிலும் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக ஆங்கிலத்திலோ, சமஸ்கிருதத்திலோ, வேறு எந்த இந்திய மொழிகளிலோ கடவுள் மற்றும் இறை என்கிற தமிழ்ச்சொற்களுக்கு நேரான சொற்கள் இல்லவேயில்லை என்று உறுதியாகத் தெரிவிக்க முடியும். கடவுள் என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லுக்கான விளக்கத்தை இந்த இணைப்பில் சென்று படித்திட வேண்டுகிறேன். http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html கடவுள் என்பது ஒன்றுதாம். அது ஆண்பாலோ பெண்பாலோ அன்று. அஃறிணை ஒன்றன் பால். கடவுள் பொருள் அல்ல. கடவுள் இயக்கம். அதுவும் தான்தோன்றி இயக்கம் அல்ல. நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களின் தான்தோன்றி இயக்கத்தால், இயக்கம் பெற்று, அந்த- நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களை இயக்குகிற இயக்கம் ஆகும். கடவுள் குறித்த ஆய்வு உயிர்த்தேடல் (ஆன்மீகம்) குறித்தது அன்று. கடவுள் குறித்த ஆய்வு இயற்றமிழ் (சயின்ஸ் இன் தமிழ்) ஆகும். ஆகவே உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ள, 'இந்தியக் கடவுள்கள்' என்கிற ஒரு தலைப்பை முன்னெடுக்கவியலாது என்கிற நிலையில்- அதிக சக்தி என்கிற கேள்வியும் எழ வாய்ப்பில்லை. உங்கள் வினாவின் அடுத்த பகுதி படையல் செய்தால் பலன் கிடைக்குமா என்பதாகும். படையல் செய்தால் பலன் கிடைக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவது இந்தத் திருக்குறள்: கடவுள் மற்றும் இறை என்கிற, இயற்றமிழ் (சயன்ஸ் இன் தமிழ்) ஆய்வின் அடிப்படையில் முன்னெடுத்த உயிர்த்தேடல் (ஆன்மீகம்) வகையான தமிழ்ச்சொல் தெய்வம் ஆகும். 'கடவுள் மற்றும் இறை ஆற்றல் தொய்ந்த முன்னோர்களே' தமிழர் கொண்டாடிய தெய்வங்கள் ஆவர். வீட்டுத் தெய்வம், குலதெய்வம், ஊர்தெய்வம், காவல்தெய்வம், மாவீரர், மன்னன் என்று சிறந்து வாழ்ந்திருந்த நம் முன்னோர்களே தமிழர் கொண்டாடி வரும் தெய்வங்கள் ஆவர். இவர்களைக் கொண்டாடும் வகைக்கு தமிழர் முன்னெடுத்த நடைமுறைகளில் ஒன்றே படையல் ஆகும். அது பலவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில் அமைந்தது போல அப்படியே பின்பற்றப்படுவதாகச் சொல்லமுடியாது. பல பல மாற்றங்களோடு அடிப்படை மாறாது, தொடர்ந்து தெய்வங்கள் கொண்டாடப்படுகின்றன என்றே சொல்லலாம் இன்றைய நடைமுறையில்- முன்னோருக்கு புதிய வேட்டி, துண்டு, சேலை ஆகியவற்றையும், வடை, பாயாசம் ஆகியவற்றொடு மூன்று வாழை இலைகளில் உணவுகளைப் படையலிட்டு வழிபடுவர். படையலிட்ட இலையில் உள்ள உணவை குடும்ப உறுப்பினர்களில் இலைகளுக்கு பகிரப்பட்டு உண்ணப்படும். வீட்டுப் பிள்ளைகளுக்குத் திருமணம் என்றால், திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னோர்களுக்கு படையல் போட்டு வீட்டுத் தெய்வம் கொண்டாடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. ஊர்தெய்வம், காவல்தெய்வம், மாவீரர், மன்னன் ஆகியோருக்கு நடுகல் நட்டு வழிபடும் வழக்கம் தற்காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள்- இறந்த மாவீரர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடும் நடைமுறையை சிறப்பாக முன்னெடுத்து வந்தார்கள். பழங்கால தமிழர் நடுக்கற்களே- பார்ப்பனியர்களின் தவறான புரிதலோடு, பார்ப்பனியர்களால் இலிங்க வழிபாடாக்கப்பட்டு, பிற்காலத்தில் இலிங்க வழிபாடு பெருந்தெய்வ வழிபாடாக முன்னெடுக்கப்பட்டு- பார்ப்பனியர் விளக்கத்தோடு தமிழர் வழிப்பாட்டுத்தளங்களாக நேற்று தமிழ் மன்னர்களாலும், இன்று தமிழ் மக்களாலும் கோயில் கட்டமைப்புகள் தொடர்கின்றன.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,095.