கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேரான சொல்லை, உலகில் எந்த மொழியும் கொண்டிருக்கவில்லை. கடவுள் என்கிற சொல்லில் பொதிக்கப் பட்ட பொருளுக்கு உலகில் எந்த இனமும் எந்தத் தரவையும் இன்றுவரை முன்னெடுக்கவில்லை. கடவுள் என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லை-
நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்களோடு ஐந்தாவதாக 'வெளி' யைக் கடந்தும் உள்ளும் இருக்கிற கடவுள் என்கிற ஆற்றல் மூலம் என்று நிறுவியவர் தமிழ்முன்னோர்.
ஆதரிக்கும் நோக்கத்திற்கோ அல்லது மறுக்கும் நோக்கத்திற்கோ - உலகினரின் எந்த வழிபாட்டு மூலத்திற்கும் தலைப்பாக்குவது-
தமிழியல், தமிழ்வரலாற்றுக்கான வீழ்ச்சியாகும்.