Show all

நாள்மீன் (நட்சத்திரம்) படி தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமா?

நாள்மீன் (நட்சத்திரம்) படி தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமா? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- தமிழ்முன்னோர் கண்டுணர்ந்து நிறுவிய வகைக்கு விடைதேடி உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5125:

தமிழ்முன்னோர்- ஒன்றை விட ஒன்று மேம்பட்டதாக மூன்று முன்னேற்றக்கலைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவை 
1. சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்.
2. கணியக்கலை
3. மந்திரம்.

முதலாவது முன்னேற்றக்கலை நிமித்தகம் காலத்தைப் புரிந்து கொள்வது.

கணியக்கலை என்கிற இரண்டாவது முன்னேற்றக்கலை, காலத்தில் நம்மைப் புரிந்து கொள்வது.

மந்திரம் என்கிற மூன்றாவது முன்னேற்றக்கலை: 
முதனெப்படுவது இடமும் காலமும் என்பதாக தொடக்கத்தை இரண்டு என நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.
இயற்கையின் தொடக்கம்- இடமும், காலமும் என்கிற இரண்டு என்று நிறுவியதில்- காலத்தை நிமித்தகமும் கணியக்கலையும் தெளிவாக விளக்குகின்றன.

மீதியாக உள்ள, காலத்தின் உள்ளேயும் கடந்தும் அமைந்த. கடவுள் என்கிற இடத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது மந்திரம் ஆகும்.

1.நிமித்தகம் 2.கணியக்கலை 3.மந்திரம் என்கிற மூன்று முன்னேற்றக்கலைகளிலும்- நமது ஏழேழு- முந்தை மற்றும் பிந்தைத் தலைமுறைகளின் பெயர்களைப் பேணுவது அவர்களின் அறிவுத்தளத்தில் ஒவ்வொருவரும் இயங்கி தம்அறிவை பேரளவாக வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

அதற்கு  நாம் நமது பெயர்அடையாளம் பேணுவது கட்டாயம் என்பதையும் நமது பிள்ளைகளுக்கும் பெயர்அடையாளம் பேண கற்றுத்தர வேண்டும் என்றும்  தெள்ளத்தெளிவாகக் கண்டுணர்ந்துள்ளனர் தமிழ்முன்னோர். 

நமது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க, நிமித்தகத்தில் நாள் மீன்களை முதன்மைப்படுத்தியிருந்தனர் தமிழ்முன்னோர். 

நமது பிள்ளைகளுக்கு பெயர் வைக்க, கணியக்கலையில் அடிப்படை எண்கள் ஒன்பதின் இயல்புகளை முதன்மைப்படுத்தியிருந்தனர் தமிழ்முன்னோர்.

உலகில் தோன்றிய இரண்டாவது மொழியின் சார்பு மொழிகள் பல நம்மோடு கலக்க எத்தனித்த நிலையில்- நம் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க, மந்திரத்தில் தூயதமிழில் பெயர் வைப்பது சிறப்பு.

அதுவே கடவுளில் நமக்கான சொந்த இடத்தை உருவாக்கித்தரும் என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்.

நடப்பில் தமிழர்கள் தம் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டியது மேம்படுத்தப்பட்ட முன்னேற்றக்கலையான மந்திரம் தெரிவிக்கும் தூயத்தமிழிலேயே ஆகும்;. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.