மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லையே? மற்ற உயிரினங்களுக்கு வேதங்கள் அனுப்படவில்லையா? மற்ற உயிரினங்களிடையே ரிஷிகள் உருவாகவில்லையா? தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கேள்வி. 04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125. நம்பிக்கை முழுமையாகாது என்பதையும், கடவுளைப் பற்றிய புரிதலே முழுமையாகும் என்பதையும், கடவுளிடம் கேட்டால் கிடைக்கும் என்பதையும் மனிதன் தவிர மற்றெல்லா உயிரினங்களும் அறிந்துள்ளன என்பதை உயிரிகளிலேயே அறிவு தொடங்கிவிட்டது என்று, உயிரிகளை ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை வகைப்படுத்தி தமிழ்முன்னோர் தெளிவாகவே நிறுவியுள்ளனர். இற்றைத் தமிழரில் பலர், அறிவின் பாகுபாட்டுக் கருத்தியலை மலைத்து- இருசாரார் அறிவுக்கிடையே ஏற்றதாழ்வு கற்பிக்கிற, நீட் போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தி பாகுபடுத்துகிற, அயல்சார்பில் இயங்கிக் கொண்டிருக்கிற காரணம் பற்றி, தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ள அந்தத் தமிழியல் குறித்து அறியாமல், அயல் சார்புகள் தெரிவித்துள்ள நம்பிக்கை, வேதங்கள், ரிஷிகள், தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் குறித்தெல்லாம் விவாதித்துக் குழம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த வகைக் குழப்பத்தின் பாற்பட்டதே இந்தக் கேள்வியும். மூன்று அகவைக்கு முந்தைய குழந்தைகள், வெற்றியாளர்கள், மற்றெல்லா உயிரிகள் ஆகியன, 'கடவுளிடம் கேட்டால் கிடைக்கிறது' என்பதை மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர் என்பதே உண்மை. அதன் காரணம் பற்றியே உங்கள் கேள்வியில் குறித்துள்ள நம்பிக்கை, வேதங்கள், ரிஷிகள், தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் அனைத்தும் அவைகளுக்குத் தேவைப்படாமல் போயின. பேரளவான தமிழ்மக்களும் உங்கள் கேள்வியில் குறித்துள்ள நம்பிக்கை, வேதங்கள், ரிஷிகள், தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் அனைத்தும் அவைகளுக்குத் தேவைப்படாமல் இயங்குகிற காரணம் பற்றியே தமிழர்களுக்கு என்று தனியாக மதம் எதுவும் தேவைப்படவில்லை. தமிழ்மக்களைக் குறிவைத்து பல மதங்கள் களமாடிக் கொண்டிருப்பதும் அக்காரணம் பற்;றியே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,743.