Show all

இன்று முன்னெடுக்கப்படுகின்றன இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள்! தமிழ் வளர்க்க கொரோனா தடையில்லை; கூகுள் குவியம் செயலிஇருக்க

கூகுள் குவியம் செயலியில், இன்று முன்னெடுக்கப்படுகின்றன இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள், கூகுள் குவியம் செயலி இருக்க, தமிழ் வளர்க்க, கொரோனா தடையில்லை என்று கெத்து வழங்குகிறார் நமக்கு நமது சுந்தர் பிச்சை. 

24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை நான்கு இருபத்தியாறு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. 

உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் கண்டு மகிழும் வகையாக குவியம் (ஜூம்) செயலியை நமக்கு வழங்கியிருக்கிறது தமிழ்இனஉறவு சுந்தர் பிச்சையைத் தலைவராகக் கொண்ட கூகுள்.

இன்று மாலை 4.26 மணிக்கு கூட்டஅடையாளஎண்: 4775896897. குவியம் செயலியில் இலக்கிய களம் அமைப்பு முன்னெடுக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ‘கலித்தொகையில் இயல்அறிவு செய்திகள்’ என்ற தலைப்பில் திருவாரூர். தமிழ்ப்பேராசிரியர். முனைவர். பெ.வெற்றிச்செல்வி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். 

நிகழ்ச்சியின் தொடக்கமாக புரட்சிக்குயில். ச.செந்தில்வேலன், தமிழிசை வாணர். செல்லாங்குப்பம் சுப்பிரமணியன், மற்றும் தென்மொழிப் பண்ணன் ஈகவரசன் ஆகியோர் இனமான இன்னிசை முழங்க உள்ளார்கள். மேலும் குறளும் பொருளும், இன்று ஒரு செய்தி, கலந்துரையாடல் என பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.

இன்று மாலை 6.20 மணிக்கு கூட்டஅடையாளஎண்: 6869035682. கடவுச்சொல்: kuralon. குவியம் செயலியில் முப்பா அமைப்பு முன்னெடுக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ‘அறம் வாழ்வின் உரம்’ என்ற தலைப்பில் முனைவர் ரேணுகா பரமேசுவரி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். நிகழ்ச்சியின் தொடக்கமாக தென்மொழிப் பண்ணன் ஈகவரசன் அவர்கள் இனமான இன்னிசை முழங்க உள்ளார்கள்

உலகத்தமிழர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இலக்கிய களம் மற்றும் முப்பா அமைப்புகள் அன்புடன் அழைக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.