Show all

நான்கு யுகங்கள், அவற்றின் பெயர்கள், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது கலியுகம், இது 432000 ஆண்டுகள். அனைத்தும் உண்மையா?

புவியின் நான்கு யுகங்கள் பற்றியும் அதன் பெயர், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகம் இது 432000 ஆண்டுகள். கடந்த யுகங்கள் ஒவ்வொன்றிலும் புவியின் சாய்வு, சுழற்சி வேகம், சுற்று வேகம், சுற்றுப்பாதை என்பன வரையறுக்கப்பட்டிருக்கின்றதா? என்று வேறு ஒருதளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: இந்த வினாவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நடப்பில் ஒட்டுமொத்த உலகினர் பின்பற்றிக் கொண்டிருக்கிற கிரிகேரியன் ஆண்டு குறித்த வரலாறு ஆகும். 

நடப்பு 2024 ஆண்டுகளில் இத்துனை மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றால் இலட்சங்களில் பட்டியல் இடப்படுகிற யுகம் பற்றிய கருத்துக்கள் நூற்றுக்கு நூறு விழுக்காடு பொய் என்பது புரிந்து விடும்.
 
கிரிகேரியன் ஆண்டு அல்லது ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது என்பதையும், டிசம்பர்- தசம்- பத்து என்பதையும் பொருத்தி ஆங்கில ஆண்டுக்கான மாதங்கள் தொடக்கத்தில் பத்து மட்டுமே என்பதை அறியலாம். 

ஜூலை மாதமும், அகஸ்டு மாதமும் பின்னர் இணைக்கப்பட்டு, ஆங்கில ஆண்டுக்கணக்கில் பனிரெண்டு மாதங்களாக்கப்பட்டு, தமிழ்த் தொடர் ஆண்டுக் கணக்கோடு நேர் செய்யப்பட்டது.

ஆனாலும் ஐரோப்பியக் நாட்காட்டிப்படி 365நாள் என்றே தொடக்கத்தில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு நாளில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். 

இந்த திருத்தத்தின் படி 400ஆண்டுகளுக்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வேறுபாட்டைச் சரி படுத்த எண்ணி லீப் ஆண்டுக்கணித முறையைக் கொண்டு வந்தனர்.

கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி ஆண்டை சாதாரண ஆண்டாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு 29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வேறுபாட்டுக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது. இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் மாறுபடும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் நாட்காட்டியிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில ஆண்டுக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஆரியர்கள் இந்த பத்து மாதங்கள் கொண்ட நிலா ஆண்டுக்கணக்கின் எச்ச சொச்சங்களையே இன்றும் கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு அவர்கள் திதியையே பேரளவாக மதித்து வருவதும் தமிழ்மக்களுக்கும் திதி பார்த்து காரியங்கள் நடத்தும் வேலைகளை செய்து கொண்டிருப்பதும் சான்றாகும். நாடோடி வாழ்க்கையினருக்கு நிலாதான் மிகச்சிறந்த காலக்கண்ணாடியாக இருக்க முடியும் என்பது எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய தரவே ஆகும்.  

ஆங்கில ஆண்டுக்கணக்கின் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5126 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட தமிழ்த் தொடர் ஆண்டு கணக்கு முறை நமக்கு உண்டு என்பது தமிழினத்திற்கான பெருமிதமாகும். 

தமிழ் ஆண்டுக்கணக்கில் ஒரு ஆண்டுக்கான முழு நாட்கள் 365, நாழிகை15, விநாழிகை31, தற்பரை15 (தற்பரை என்பது பரையில் ஒரு கொட்டு கொட்டும் போது எழுகின்ற அதிர்வு நேரமே தற்பரை ஆகும்) என்று நிமித்தகம், வள்ளுவம், கணியத்துறை சார்ந்தவர்களால் 5126 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

காலத்தை தொடர்ந்து கணித்திருப்பவர்களை சில சாதிகளாகவே முன்னெடுத்திருப்பது உலகில் தமிழ்மரபு மட்டுமே ஆகும். காலத்தைத் தெளிவாகக் கணிப்பதற்கு முதலில் ஒரே மண்ணில் நிலையான வாழ்க்கை மேற்கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம் ஆகும். அப்படி ஒரே மண்ணில் நீண்ட நெடியகாலம் வாழ்ந்த பெருமை தமிழ்மக்களுக்கு மட்டுமே உண்டு. 

உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும். 

உலகத்தில் இருக்கிற அத்தனை மொழி ஆய்வாளர்களும், தமிழ் குறித்த ஆய்வில், ஆழமாக இறங்கும்போது, தடுமாறிப் போவார்கள். தங்கள் மொழியோடு உலக மொழிகளுக்கெல்லாம் பலவகையான தொடர்புகள் இருக்கும்போது, இந்தத் தமிழ்மொழி மட்டும் தனித்து காணப்படுகிறதே என்று குழம்பிப் போவார்கள். 

உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உலக மொழிகளில் தமிழ்மொழி குறித்து மட்டும் ஒரே மாதிரியான ஒருமித்த முடிவுக்கு வரமாட்டார்கள்; யானையைத் தடவிப்பார்த்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல இதுவரை வௌ;வேறு முடிவுகளையே தந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.   

உலகின் முதல் கடலோடியாக தமிழன்- கடற்கரை அமைந்த நாடுகளுக்கெல்லாம் வணிகனாகச் சென்ற போது, அந்தந்த  மொழித் தொடர்பு தமிழ் வணிகர்களுக்குக் கிடைத்தது. வணிகத்திற்கு வந்த ஆங்கிலேயர் உலகம் முழுவதும் தங்கள் மொழியான ஆங்கிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, தமிழ் வணிகர்களும் பல கடற்கரை நாடுகளின் மொழிகளில் தமிழின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதை அந்த நாடுகளின் வரலாறுகளில் தகவல்களாகவும் அருங்காட்சியகங்களில் பொருட்களாகவும் காண முடிகின்றது. 

தமிழ் நான்கு வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் பல கூட்டங்களாக, இமயமலைக் கணவாய்கள் வழியாக, நுழைந்திருந்த ஆரியர்கள், தாம்அப்போது பேசிவந்த பல்வேறு மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஆரியர்கள் பேசி வந்த ஈரானிய ஆப்கானிய மொழிகளுக்கு எல்லாம் எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வரும் அமைப்புக்கு எழுத்துக்கள் இன்று வரை கிடையாது. 

உலக மொழிகளில், தமிழைத் தவிர எந்த மொழியிலும், அ ம் மா என்று எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வராது. அம்மாவுக்கு எ எம் எம் எ என்பது போல அந்தந்த மொழிகளின் அத்தனைச் சொற்களுக்கும் ஒரேயொருமுறையாவது ஒவ்வொரு சொல்லுக்கும் அமைக்க வேண்டிய எழுத்தைக் (ஸ்பெல்லிங்) கற்றாக வேண்டும்.

இந்தியாவில் ஆரியர்கள் பேசி வந்த மொழிகளின் குடும்ப மொழிகளாக உருவான அத்தனை மொழிகளும், தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆரிய மொழிகளின் தாக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்த தென்னக மொழிகளும் ஆரிய மொழிகளை ஒட்டியே தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். உலகில் எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் மொழிகளை- முப்புறமும் கடலும் நான்காவது புறம் பெருமலையும் பாதுகாப்பாக அமைந்த நாவல 'ந்தேய' ம் என்று தமிழர் அறிமுகப்படுத்த ஐரோப்பியர் ந்தேயா என்று ஒலித்துப் பதிவு செய்து கொண்ட இந்தியாவில் மட்டுமே காண முடியும். 

உலக இனங்கள் அனைத்திற்கும் தனிமனித சான்றோர்கள் முன்னெடுத்த மதங்களே அடிப்படை. ஆனால் உலகில் தமிழர்களுக்கும் மட்டும் தனிமனித சான்றோர் முன்னெடுத்த மதம் கிடையாது. மாறாக சங்கம் கண்ட தமிழ் அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையில் விளைந்த பொருள் இலக்கணம் உண்டு. இப்படி தமிழ்மொழிக்கு மட்டுமேயான தனித்துவத்தை எழுத முனைந்தால் சிறப்பான ஒரு புத்தகமே வடிக்கிற அளவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படியான தமிழர் ஆண்டுக் கணக்கே 5126 ஆண்டுகளையே கடந்து வந்திருக்கிறது. ஆங்கில ஆண்டுக்கணக்கில் 2024 ஆண்டுகளிலேயே பல மாற்றங்கள் முன்னெடுக்கப் பட்ட வரலாறு இருக்கிறது. 

புவியின் நான்கு யுகங்கள் பற்றியும் அதன் பெயர், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகம் இது 432000 வருடங்கள். கடந்த யுகங்கள் ஒவ்வொன்றிலும் புவியின் சாய்வு, சுழற்சி வேகம், சுற்று வேகம், சுற்றுப்பாதை என்பன வரையறுக்கப்பட்டிருக்கின்றதா? என்கிற உங்கள் கேள்வியில் இருக்கிற அனைத்து கருத்தும் ஆரியர் தொடர்ந்து பீற்றிவரும் புளுகுகளே ஆகும். 

ஆரியர்களுக்குத் தெரிந்தது எல்லாம் மகா பாரதம் விவரிக்கும் கூட்டுக் குடும்பத்திற்குள் முன்னெடுக்கிற சூழ்ச்சிகள், சதி வேலைகள், இராமயணத்தில் வருகிற ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியின் மீது கூட ஊரார் வைக்கிற குற்றச்சாட்டு என்கிற பெண்ணடிமைத்தனம், காமசூத்ரா கொக்கோகத்தில் வருகிற பாலியல் நெறிபிறழ்வுகள் மட்டுந்தாம். மற்ற மற்றவற்றில் அவர்கள் தெரிந்ததாகப் பீற்றிக் கொள்வன அனைத்தும் எல்லையில்லாத கற்பனைகள் மட்டுமே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,197

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.