சட்டப்புத்தகம் உங்களிடம், அதில் எழுதவும், திருத்தவும் ஆன எழுதுகோல் உங்களிடம். கடவுளோ, யாரோ எப்படி தீங்கு விளைவித்து விட முடியும்! உங்களுக்கு. முடியவே முடியாது என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில். அதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5126: உங்களுடைய செயல், எண்ணம், தமிழ் ஆகிய மூன்றும், உங்களுடைய வாழ்க்கைப்போக்கு எப்படி அமைய வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் மனதில் வடிவமைத்த உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் ஆகும். என் வடிவமைப்பில் இது, 'குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டம்' ஆகும். 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்' மாதிரி இதைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலக மனிதர்கள் அனைவரின் சட்டப்புத்தகத்தை நிகழ்நிலையில் படித்து அறியும், தீர்ப்பு வழங்கும் அறங்கூற்று ஆகும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் இருக்கிற பலநிலை வழக்கு மன்றங்கள் குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் இருக்கிற பல நூறாயிரம் வழக்கறிஞர்கள் குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கிடையாது. தீர்ப்பு வழங்குகிற இடத்தில் கடவுள் என்கிற ஒற்றை ஆற்றல் மட்டுமே கொண்டது குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டம். என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் நடப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு, தன் விருப்பத்திற்கு, எந்த அறங்கூற்றுவரும், தீர்ப்பு வழங்க முடியாது அல்லவா. குமரிநாடன் சட்டப்புத்தகத்தை, நிகழ்நிலையில் கடவுள் படித்து அறியவும், தீர்ப்பு வழங்கவும், முடியும் என்றாலும், கடவுளுக்கு சொந்த இயக்கம் இல்லாத காரணம் பற்றி, குமரிநாடன் சட்டப்புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கடவுளால் எந்தத் தீர்ப்பும் வழங்க, முடியவே முடியாது. இந்தத் தரவைத்தான் கணியன் பூங்குன்றனார் தன் புறநானூற்றுப் பாடலில் பதிவிடுகிறார். இதைத்தாண்டி யாரோ ஒருவர் எனக்குத் துன்பம் தரமுடிகிறது என்றால், அதற்கு அவருக்கு நான் என்னை ஒப்புக்கொடுத்தது காரணம் ஆகிறது. இந்த ஒப்புக்கொடுத்தல் தரவையும் என் குமரிநாடன் சட்டப்புத்தகத்தில் நான் பதிந்திருப்பதால்தான் அவர் எனக்கு தீங்கு செய்ய கடவுள் அவரை அனுமதிக்கிறது. இதற்குத் தீர்வு என்ன? யாருக்கும் என்னை நான் ஒப்புக் கொடுக்கவே கூடாது என்பதா? ஆசையே- இயற்கையின் இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் என்பதை அப்படியே தூக்கி வீசி எறிந்துவிடுகிற வகையாக, ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற அறிவுரையை பின்பற்றுவது அல்ல. எது துன்பம் தருகிறதோ, யார் துன்பம் தருகின்றாரோ அதனிடமிருந்து மட்டும் விலகு என்பதே தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தெளிவுபடுத்தும் தீர்வு ஆகும். நட்புகளில் நண்பர்களை விட்டு விலகலாம். உறவுகளில் சொந்த பந்தங்களில் இருந்து விலகலாம். கூட்டுக்குடும்பம் சிக்கலாகிறபோது அதைவிட்டு விலகலாம். குடும்ப உறவுகளில், கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என்றால் இங்கே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குற்றத்தில் இருந்துதான் விலக வேண்டியிருக்கிறது. ஆம் குற்றத்தை நினைத்துக் கொண்டிருந்தால், துன்பத்தை நினைத்துக் கொண்டிருந்தால், தேவை எதுவானாலும் கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்பது புரியாமல் அது கிடைக்கவில்லை இது கிடைக்க வில்லை என்று புலம்பலை முன்னெடுத்துக் கொண்டிருந்தால் அவையே குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டம் ஆகும். அதுவே எனது விரும்பம் என்றே கடவுள் புரிந்து கொள்ள முடியும் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடும்ப உறவு இப்படிப் பேணப்பட்டால் குற்றம் துன்பம் எல்லாம் காணாமல் போகும். கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் இந்தக் குற்றத்தை செய்யக்கூடாது என்று பதிவு செய்வதில், குற்றமே, குமரிநாடன் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலைமைத்துவம் பெறுகிறது. கடவுளே! என்று அன்றாடம், தொடர்ந்து பலமுறை வேண்டியிருந்தாலே உங்கள் தொடர்புகளை, மாண்புகளை நோக்கி கடவுளால் உறுதியாகத் திருப்பி விட முடியும். இந்தத் தரவைத்தான் திருவள்ளுவர் தன் திருக்குறள் நூலில் பதிவிடுகிறார். உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள், கடவுளுக்கு சொந்த இயக்கம் கிடையாது, நம்மிடம் இருந்து பெற்ற இயக்கத்திற்கு நம்மை முயக்குவதே கடவுள் என்கிற காரணம் பற்றி கடவுளுக்கு என்று தனியாக எந்தச் சட்டப்புத்தகமோ, சட்டமே கிடையவே கிடையாது. நீங்கள் எதிர்கொண்ட எந்தவொரு துன்பத்தையும் உங்களிடமே இருக்கிற சட்டப்புத்தகத்தில், உங்களிடமே இருக்கிற எழுதுகோலால், நீங்களே, நீங்கள் மட்டுமே திருத்த முடியும். தயவுகூர்ந்து, முடியாது என்கிற புலம்பலை, உங்கள் சட்டப்புத்தகத்தில் பதிந்து, மேலும் மேலும் துன்பத்தை வாங்கிக் குவித்து, துவண்டு கொண்டே இருக்காதீர்கள். உங்கள் சட்டப்புத்தகம்: 2. குறிப்பிட்ட நேரத்தில் எழுதிமுடிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. 3. குறிப்பு வைத்துக்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. 4. யாரைப் பார்த்து எழுதுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. 5. தேர்வு எழுதுவதைக் கண்காணிக்க, பறக்கும் படை எதுவும் இல்லை 6. முறைகேடு செய்ததாகக் குற்றப்படுத்தி. இனி தேர்வே எழுத முடியாது என்கிற வரையறை எதுவும் இல்லை. 7. உங்கள் தேர்வுத்தாள் நிகழ்நிலையில் கவனித்து தகுதிப்படுத்தப்படும். 8. உங்கள் தேர்வத்தாளைத் தகுதிப்படுத்தும் நேரத்தில் நீங்கள் குறுக்கே புகுந்து திருத்தலாம். 9. உங்கள் தேர்வத்தாளைத் தகுதிப்படுத்தும் நேரத்தில் நீங்கள் கூடுதல் வினாவிற்கு விடை அளிக்க முயலலாம். இன்பத்தை பேரளவாக நிறைக்க உங்கள் சட்டப்புத்தகத்தை உங்களால் ஒழுங்கு படுத்த முடியும். அதற்காக பாடாற்ற கடவுளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இநதக் கட்டுரைக்கான மூலக் கட்டுரைகள்: 1. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. 2. மனதில், இல்லை எந்தச் சிக்கலும் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,216.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்று.
நன்னயஞ் செய்து விடல்.
என்பதுதான் தீர்வு.
விசும்பு தெய்வமே!
நெய்தல் திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய தொடர்புகளின் ஒத்துழைப்பை வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்பு தெய்வமே
அருள்செய்க
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்று.
1. ஆசிரியாரால் மட்டுமே திருத்த முடிகிற தேர்வுத்தாள் அன்று.