Show all

நம்முடைய உடலுக்கும் உயிருக்குமான உறவு எப்படிப்பட்டது?

நம்முடைய உடல் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களால் ஆனது. 

இந்த நாற்திரங்கள் வெளியில் இறைந்து காணப்படுகிற நிலையில், தமிழ்முன்னோர் நிலம், நீர், தீ, காற்று என்கிற இந்த நாற்திரங்ளை இறை என்றனர்.

மனித உயிரியான நாம் ஒவ்வொருவரும், இறையின் வெவ்வேறு எண்ணிக்கையில் தான்தோன்றியாக உயிர்த்த கூட்டியக்கம் ஆவோம். நமது கூட்டியக்கத்தை நமது உயிர் என்கிறோம்.

இறைக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற வெளியின்- வெட்டவெளி, விண்வெளி, விசும்பு என்கிற

இயக்கமின்மை, இயக்கமேற்றல், இயக்குதல் என்கிற மூன்று நிலைகளைக் கடவுள் என்றனர் தமிழ்முன்னோர். 

நமது கூட்டியக்கம் ஒரு காலக்கெடுவோடு, உருவான நிலையில் கூட்டியக்கம் தொடரஇயலா நிலையில் இறைகள் மீண்டும் தனி இயக்கங்கள் ஆகின்றன. அதை இறத்தல் என்கின்றனர் தமிழ் முன்னோர். 

இல்லாமல் போன, அதாவது சுழியம் ஆகிவிட்ட நமது உயிரை காலமாகிறது என்கின்றனர் தமிழ்முன்னோர்.

இதை ஒரு கணக்காக கட்டமைத்து விளங்கிக் கொள்ள முயல்வோம்.
 
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு.
இன்று தொடர் ஆண்டு கணக்கு படியான நாள்: 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:
இன்று தமிழ்த்தொடர்நாள் கணக்குப்படியான நாள்எண்: 18,71,345.

கற்பனையாக- இன்றைக்கு தமிழ் நாட்டில் 9999 பேர்கள் பிறக்கின்றனர் என்று கணக்கு வைத்து ஒவ்வொருவருக்கும் எண் கொடுத்தால் 
முதலாவது ஆளின் எண்:- 18,71,345-0001 ஆகும்.
பத்தாயிரமாவது ஆளின் எண்:- 18,71,345-9999 ஆகும்.

இந்த 9999 பேர்களுக்கும் பொதுவான எண் 18,71,345 உடல் எண் ஆகும். இந்த உடல் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களால் 18,71,345 அலகுகளால் ஆனது. 

இந்த 9999 ஆட்களின் உயிர் எண்கள் 0001ல் தொடங்கி 9999ல் முடிகிறது.

இன்றைய நாளில் 18,71,345 அலகுகளால் ஆன 9999 கூட்டு இயக்க உயிர்மெய்கள் தான்தோன்றியாக உருவாகியுள்ளன.

இந்த 9999 மனித உயிரிகளுக்கும் அடிப்படையான காலக்கெடு 120 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால்,
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5244 அதிகாலை சுழியம் நாழிகையில் (ஆறு மணிக்கு) இந்த 9999 மனித உயர்மெய்களின் மெய்கள் இறையாகி இருக்கும். உயிர்கள் காலமாகியிருக்கும்.

அதே நாளில் 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5244 அன்று தொடர் நாள் எண்-1915176 என்கிற நிலையில், அடுத்த நூற்றி இருபது ஆண்டுகளில் கூடிய நாட்கள் எண்ணிக்கை 43831 என்கிற நிலையில், ஒவ்வொரு நாளும் பிறந்த புதிய மனித உயிர்மெய்களின் எண்ணிக்கையான 9999 ஐ  43831 உடன் பெருக்க கிடைக்கும் 438266169 மனித உயிர் மெய்கள் தோன்றியிருந்து அவற்றுள் சில பலவற்றின் மெய்கள் இறையாகி இருக்கலாம். உயிர்கள் காலமாகி இருக்கலாம். 

அதென்ன மெய் இறையாதல் உயிர் காலமாதல் என்பதன் விளக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இறத்தல், காலமாதல் என்கிற சொற்கள், பொருள்பொதிந்த தமிழ்ச்சொற்கள் ஆகும்.

இறந்து விட்டார், காலமாகி விட்டார் என்று பேசுவது தமிழில் இன்றும் தொடரும் நடவடிக்கை ஆகும். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற அடிப்படையிலேயே தமிழின் ஒவ்வொரு சொல்லும் தமிழ்முன்னோரின் கூட்டுச் சிந்தனையில் ஆய்ந்தாய்ந்து நிறுவப்பட்டுள்ளது.

மனிதனின் காலக்கெடு முடிகிற அடிப்படையை, தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவ முயன்றதன் விளைவே இந்த இறத்தல், காலமாதல் என்கிற சொற்களின் உருவாக்கம்.

தமிழர்தம் பொருள் இலக்கணத்தில் அகத்திணையில் உரிப்பொருளில் கடவுள், இறை, ஆகியன ஆற்றல் மூலமாகவும், அவைகள் தொய்ந்த தெய்வம் வழிபாட்டு மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வம் என்பன- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நிலத்தில், ஒவ்வொரு நிலத்திற்கும் வேறு வேறு ஆகும். தெய்வம் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் வீட்டுதெய்வம், குலதெய்வம் என்று வேறு வேறு ஆகும்.

அடுத்து இறை என்பது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களான ஆற்றல் மூலங்கள் ஆகும். 

கடவுள் என்பது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது ஆகும்.

ஆக இறத்தல் என்பதில் நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையாகிப் போதல் என்கிற நடப்பு உள்ளடங்கியுள்ளது. இறந்தவரின் உடலை நிலத்தில் புதைக்கும் போது அது மண்ணில் மக்கி நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது. ஆக உடல் தன்னுடைய அடிப்படையான நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது என்கிற அடிப்படை காரணம் பற்றியே அதை இறத்தல் என்றனர் தமிழ் முன்னோர். உடலை எரியூட்டுவது தமிழர்மரபு அன்று.

அடுத்து காலமாதலுக்கு வருவோம்.

இறத்தலைப் போல அவ்வளவு எளிதான பொருள் பொதிப்பு கொண்டது அல்ல காலமாதல். 

தமிழ்முன்னோர் கண்டறிந்த காலமாதல் என்கிற செய்தி உலகினருக்கு புதிய செய்தியாகும். 

உயிரை பேரளவாகக் கொண்டாடும், உயிர் தொடர்பாக மறுபிறப்பு என்கிற செய்தியைக் கொண்டாடும் வகைமையில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை. 

உயிர் என்பது மீண்டும் உயிர்ப்பது இல்லை, அது சுழியமாகி விடுகிறது, என்பது தமிழியல் ஆகும். மேலும் உயிர் என்பது கூட்டியக்கம் மட்டுமே. அதன் காலக்கெடு முடிந்ததும் அந்தக் கூட்டியக்கம் சுழியம் ஆகிறது. சுழியம் என்பது அந்தக் கூட்டியக்கத்தின் வரலாறும் அறிவும் தெய்வமும் ஆகும்.

உங்களுக்கு வருமானம் எதுவும் வரவில்லை என்பதை சுழியம் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு ஒரு நூறு ரூபாய் வருமானம் வந்து அந்த மாதம், கடந்த ஆனி மாதம் என்று வைத்துக் கொண்டால், அந்த வருமானம் முற்றும் செலவாகி விட்டால் ஆனி மாத சம்பளத்தின் நிலை சுழியம் என்கிற கணக்கீடு ஆகும். 

ஆக ஒரு கூட்டியக்கம் வந்தது. காலக்கெடு முடிவில் சுழியம் ஆக விசும்பில் பதிவாகி விட்டது. அது திரும்ப எண்ணிக்கையாக இயங்க முடியாது. சுழியம் எண்ணிக்கையின் மதிப்பு கூட்ட முடிவது போல தம் எச்சங்களின் அறிவைக் கூட்ட முடியும் கூட்டியக்கச் சுழியங்களால்.

ஆக இந்த உயிரைக் காலமாதல் என்று தமிழர் தெரிவிப்பது எவ்வாறு?

தமிழியலில், முதல் எனப்படுவது இடமும் காலமும் ஆகும். படைப்புக் கோட்பாட்டில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை. 

இடம் என்பது- தான்தோன்றி இயக்கமும் எல்லையும் இல்லாத வெளி ஆகும்.

காலம் என்பது அதில் இயங்கிக் கொண்டிருக்கும், தான்தோன்றி இயக்கம், எல்லை எண்ணிக்கை உடைய மிக மிக நுட்பமான தனிஒன்றுகள் ஆகும். இயங்குவதால் அது காலம் காட்டும் என்பதால் அதை காலம் என்றனர் தமிழ் முன்னோர். 

தமிழ்முன்னோரின் கடைசி என்பது பெருவெடி ஆகும். நமது பயணம் பெருவெடியை நோக்கியது ஆகும். காலத்தின் நோக்கம் இருப்பும் வளர்ச்சியும் ஆகும். காலத்தின் தனி ஒன்றுகளின் அடுத்த நிலை நிலம், நீர், தீ, காற்று என்கிற எண்ணிக்கை மாற்றத்தால் வேறு வேறு இயல்புகளை கொண்ட இறை அல்லது நாற்திரங்கள் ஆகும். 

மரம், விலங்குகள், மனிதன், நீங்கள், நான் அனைவரும் வௌ;வேறு எண்ணிக்கையில், வௌ;வேறு இயல்புகள், வௌ;வேறு காலக்கெடு அமைந்த கூட்டியக்கங்கள் ஆவோம்.

காலத்தின் நிலை தனி ஒன்றுகள் என்கிற எண்ணிக்கையின் அடிப்படை நிலை ஆகும். சுழியமும் ஒரு எண்ணிக்கை என்கிற நிலையில் கூட்டியக்கம் அல்லது உயிர் சுழியம் ஆதலை காலமாதல் என்றனர் தமிழ் முன்னோர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,345.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.