இந்தக் கேள்வியோடு நிறைய பெற்றோர்கள் தமிழகத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்குள் ஏன் வந்தது என்று விளங்கிக் கொண்டால் போராடத் தேவையே எழாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். 22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தக் கேள்வியோடு நிறைய பெற்றோர்கள் தமிழகத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்குள் ஏன் வந்தது என்று விளங்கிக் கொண்டால் போராடத் தேவையே எழாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்தக் கேள்விக்கான அடிப்படை: தமிழர்கள் இயல்புகளில் சாதிக்க முயலாமல், சார்புகளில் பிழைப்பு நடத்த பழகிவருவதே காரணம் ஆகும். தமிழ்மொழி, தமிழ்இயல், தமிழ் இனம், தமிழ்நிலம், தமிழ் வரலாறு இவைகளே தமிழர் தம் ஐம்பரிமாண அடிப்படைகள் ஆகும். தமிழ்முன்னோர் இந்த அடிப்படைகளில் இருந்தே பல ஆயிரம் ஆண்டுகள் சாதித்து நடைபோட்டு வந்தனர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், உலகின் முதல் அணைக்கட்டு கல்லணை எல்லாம் அதற்கான சான்றுகள். அயலவர்கள் நம்முள் கலந்த போதுதாம்- சிக்கல்கள், போட்டிகள், ஊழல்கள், அடிமைத்தனங்கள், ஏமாற்றுக்கள் என்கிற களைகள் வளர்ந்தன. இதற்குத் தீர்வாக நாம் முன்னெடுத்து வருகின்றவைகளில் ஒன்றுதாம் நீங்கள் சொல்லுகிற போராட்டம் மற்றொன்று இடஒதுக்கீடு. இந்தப் போராட்டத்திற்கும், இடஒதுக்கீட்டிற்கும் நமது குழந்தைகளைப் பழக்கும் தற்காலிக தீர்வுக்கு நாம் ஏன் முயலவேண்டும். எடுத்துக்காட்டு: நீட்டே வேண்டாம் என்று தூக்கி எறிந்தால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தேவைப்படாது அல்லவா? கல்லூரி படிப்புக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசு பொறியியல் கல்லூரிகளையும் நாடும் நாம், பள்ளிப் படிப்புக்கு மட்டும் தனியார் பள்ளிகளையே ஏன் நாடவேண்டும். நமது குழந்தைகளை எவ்வளவு குழப்புகிறோம் பாருங்கள். ஒன்று சிறப்பான ஆங்கிலப் படிப்புக்காகவும், மற்றொன்று நமது குழந்தைகளின் பாதுகாப்பு கோணத்திலும் நாம் தனியார் பள்ளிகளை நாடுகிறோம். இரண்டு காரணங்களுக்கு தமிழர்களுக்கு ஆங்கிலம் கட்டாயத் தேவையாக இருக்கிறது. ஒன்று உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கட்டாயம் தேவை. இரண்டாவது நாம் ஆங்கிலத்தில் இருந்து விலகினால் வடபுல ஆட்சியாளர்கள் நம்மீது ஹிந்தியைத் திணித்து விடுவார்கள். சட்டம், நிருவாகம், ஒன்றிய மூன்று மாநிலங்கள், தொடர்வண்டித்துறை, அணைக்கட்டுகள், பலநூறு கட்டிடங்கள் என்று அருமையான களங்களோடு, இலட்டு மாதிரி, இந்திய விடுதலையை பிரித்தானியரிடம் இருந்து பெற்ற காங்கிரஸ்காரர்கள் செய்திட்ட மாபெரும் அநீதியே நாம் தொடர்ந்து ஆங்கிலத்தை கெட்டியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டிய தேவைக்கானதாக அமைந்தது. இந்திய ஆட்சி நிருவாகத்திற்கு, ஆங்கிலேயேர் பயன்படுத்தி வந்த ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஹிந்தியை பதினைந்து ஆண்டுகளுக்குள் நிறுவியாக வேண்டும் என்று சட்டம் இயற்றியதுதான் அந்த அநீதி. நம் மீது ஹிந்தியைத் திணிக்க காங்கிரசார் முன்னெடுத்த ஒரேயொரு சட்டமாற்றமாகும், அதனாலேயே தமிழகம் ஆங்கிலத்தை கட்டிஅழுவதை தமிழ் மக்கள் தொடரவேண்டியிருக்கிறது. இந்தியாவில் தமிழகமும், மற்ற மாநிலங்களும் மொழி அடிப்படை மாநிலங்கள், அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் நிருவாக மொழிகள் என்று எத்தனையோ சாதித்தாலும் அந்தச் சட்டம் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் வட இந்தியர் ஆதிக்கம் தொடராமல் இருக்க, நாம் முன்னெடுக்க வேண்டிய, நம் கண்முன் நிற்கிற ஒரே பணி அந்தச் சட்டத்தை அகற்றுவது மட்டுமே. ஹிந்தி ஒரு கலவை மொழி. ஹிந்தி பேச்சுக்கு மட்டுமான ஒரு மொழி. ஹிந்தி கல்விக்கான மொழியாக வளர்த்தெடுக்கப்படவில்லை. ஹிந்தி கல்விக்கான மொழியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமானால் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் அதை வளர்க்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, இன்றைய பாஜக ஆட்சியிலும் சரி ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு கல்வியே கொடுக்கப்படாமல், அவர்கள் அயல் மாநிலங்களில் பாணிபூரி விற்றும், கட்டுமானப்பணிகளில் கலவை சுமக்கும் பணிகளிலுமே பிழைப்பு நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு எல்லா மாநிலங்களும் அரிசி கொடுத்து உதவ ஒன்றிய பாஜக அரசு ஒரேநாடு ஒரேகுடும்ப அட்டையை நடைமுறைப் படுத்துகிறது. அதே சமயம் டிரம்ப்பிடம் இருந்து அந்த மக்களின் அறிவின்மையை, வறுமையை மறைக்க நீண்ட தூரத்திற்கு சுவர் எழுப்புகிறது.