Show all

வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:

இந்த வினா அடிக்கடியும் பேரளவாகவும் பேரளவினராலும் கேட்கப்பட்டு வருகிறது.

இப்படிக் கேட்கிற அனைவருக்கும் இந்த வினாவை அவர்களுக்குள் தீயாக மீட்டுவது இயங்கலையே (ஆன்லைன்).

இயங்கலையில் நிறைய வருமானம் ஈட்ட முடியுமா என்றால் முடியும் என்பது உண்மை.

இயங்கலையில் எளிதாக வருமானம் ஈட்ட முடியாதாமே என்றால் அதுவும் உண்மை.

வருமானம் எந்தெந்த வகையில் வரும்?
1. கலை, விளையாட்டு என்று தனிதிறனில் வருமானம் வரும்.
2. தொழிலில் வருமானம் வரும்
3. வேளாண்மையில் வருமானம் வரும்
4. வணிகத்தில் வருமானம் வரும்
5. உடலுழைப்பு கூலியாகவோ மேலாண்மைக் கூலியாகவோ வருமானம் ஈட்டலாம்.

இவற்றில் வணிகம் மற்றும் மேலாண்மைக் கூலியாக இயங்கலையிலும் வருமானம் ஈட்ட முடியும்.
மிகப்பேரளவினரின் வினா- மேலாண்மைக் கூலியாக இயங்கலையில் வருமானம் குவிக்க முடியும் என்கிற தீயே.
அதற்கு உறுதியாக தகவல் தொழில் நுட்பத்தில் பொறிஞர் படிப்பு கட்டாயம் ஆகும்.

உங்கள் பணத்தை வைத்து உங்களுக்கு வருமானம் உருவாக்கித்தர முடியும் என்று பலநூறு நிறுவனங்கள் இயங்கலையில் முளைக்கின்றன. 

அவர்களின் கணிப்புக்கு பேரளவு ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு நூறு விழுக்காடு இல்லை.
அவர்களும் ஏமாந்து தங்களை நம்பியவர்களையும் ஏமாற்றி அன்றாடம் பலப்பலர் வீழ்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஆக கனவுத் தீயாக இருக்கிற இந்தத் துறையில் காசை இழக்காதீர்கள்.

ஆக வீட்டில் இருந்து வருமானம் என்கிற நிபந்தனை வேண்டாம். இயங்கலையில் வருமானம் என்கிற நிபந்தனை வேண்டாம். உங்களுக்கு தெரிந்த துறையில், உங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டு, அது கேட்கும் ஈடுபாட்டைக் கொடுத்து வருமானம் ஈட்டுங்கள். வாகை சூடலாம்.

எந்த இழப்பும் வரக்கூடாது. பொழுது போக்காக மிகச்சிறு வருமானம் வந்தாலும் போதும் என்றால் இந்த இணைப்பில் சென்று பயன்பெறுங்கள்.

ஐந்திணைக்கோயிலின் மந்திரம் கலைவளவன் படிப்பில் இணைந்து, மாண்பிதழ் பெற்றுக்கொண்டு, ஐந்திணைக்கோயில் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்திற்கு புதிய புதிய மாண்பாளர்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம்.

உங்களால் குறைந்தது மாதம் ரூபாய் ஐநூறு சேமிக்க முடியும் என்றால், நீங்கள் பங்குச் சந்தையில் இணைந்து சிறப்பாக ஆதாயம் பார்க்க முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.