நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம். நடைமுறையில் அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிற அந்த நிமித்தகத்தின் பகுதிகளான சாதகம் சோதிடத்தில் எழும் தொய்வுகளைச் சுட்டிக்காட்ட, அச்சம் தொடர்கிற நிலையில், நாம் முன்னேற்றத்திற்கு களமாட வேண்டியது அதன் மேம்பாடுகளில் என்கிற செய்திகளைப் பேசுகிறது இந்தக் கட்டுரை. 07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம், தமிழ்முன்னோர் முன்னெடுத்த முதலாவது முன்னேற்றக்கலை ஆகும். ஒருவருக்கு, சாதகத்தில் இடம் சோதித்து பலன் சொல்லிவிட்டால்- சோதிடம் பலிக்காமல் போவதைக் கண்ட தமிழ்முன்னோர், கமுக்கம் உடைத்தால் கடவுளால் சாதக அடிப்படை சார்ந்த பலனை ஒருங்கிணைக்க முடியாமல் போகிறது என்று கண்டறிந்தார்கள். இதனால் நிமித்தகத்திற்கு நாற்பது மதிப்பெண் அளித்து, அதனினும் மேம்பட்ட கலையாக நாம் விரும்பும் இயல்புக்கு நமது பெயரை அமைத்துக்கொள்ளும் கணியத்தை இரண்டாவது முன்னேற்றக்கலையாக நிறுவினர் தமிழ்முன்னோர். கணியத்திலும் அதே வகையான சிக்கல் எழவே கணியத்திற்கு அறுபது மதிப்பெண் அளித்து அதனினும் மேம்பட்ட கலையாக, எது நமக்கு வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்டுப்பெறும் வகைக்கான மந்திரத்தை மூன்றாவது முன்னேற்றக்கலையாக நிறுவினர் தமிழ்முன்னோர். மந்திரம் கற்றலுக்கு எண்பது மதிப்பெண்ணும், கற்றல் வழி நிற்றலுக்கு நூறு மதிப்பெண்ணும் வழங்கி முன்னேற்றக் கலை தேடலை முடிவுக்குக் கொண்டு வந்தனர் தமிழ்முன்னோர். இசைத்தட்டுக்களைச் சுழலவிட்டு பாட்டுக் கேட்டிருந்த நாம், நாடாப் பதிவில் பாட்டுகேட்பதற்கு மேம்பட்டோம். நாடாப் பதிவில் பாட்டுக் கேட்டிருந்த நாம், வானொலி, பண்பலை, தொலைக்காட்சி, என்று வளர்ந்து கையடக்க செல்பேசியிலேயே விரும்பிய பாடல்களைத் தெரிவு செய்து கேட்கிறோம். இந்த வளர்ச்சியை அறிவுலகம் கொடுத்தது. அறிவுலகம் ஆசிரியர்களால் இயக்கப்படுகிறது. ஒரே ஆசிரியரிடம் மழலை வகுப்பில் இருந்து முனைவர் வகுப்பு வரை படிக்க நாம் நிர்பந்திக்கப் படுவது இல்லை. மேம்பட்ட கல்விக்கு மெத்தப்படித்த ஆசிரியர்கள் வருகின்றார்கள். முன்னேற்றக் கலைகளை வழிகாட்டிகள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். வழிகாட்டிகள் மேம்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு வளர முனையாமல், முன்னேற்றக் கலைகளில் மாற்றம் இல்லை மேம்பாடும் இல்லை என்று மறுக்கிறார்கள். அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளாக கணியமும் மந்திரமும் மறைக்கப்பட்டு நிமித்தகம் மட்டுமே வழிகாட்டிகளால் முன்னெக்கப்படுவதாலும், அதன் மீது மகத்துவம் கற்பிக்கப்படுவதாலும், 'சாதகத்தில் இடம் சோதித்து பலன் சொல்லிவிட்டால், கமுக்கம் உடைந்து, கடவுளால் சாதக அடிப்படை சார்ந்த பலனை ஒருங்கிணைக்க முடியாமல் போகிறது' என்கிற உண்மை தொடர்ந்து மறைக்கப்பட்டே வருகிறது. இந்த உண்மையை தமிழர்கள் உரக்கச் சொல்லுங்கள், தொல்கலை வரலாறாக மட்டும் இருக்கட்டும். முன்னேற்றத்திற்கு அதன் மேம்பாடுகளில் களமாடுவோம். உறுதியான முன்னேற்றத்தை முன்னெடுக்க, இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம், மற்றும் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் கற்று, கற்றல்வழி நிற்றலைக் கொண்டாடி வாகை சூடுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,589.