எல்லையில்லாத முன்னேற்றம் யாருக்கும் கிடைக்காத ஒன்று அல்ல, என்பதை அனைவரும் அறிவோம். எல்லோருக்கும் அது சாத்தியம் ஆவதற்கு தமிழ்முன்னோர் மந்திரம் என்கிற ஒரு முன்னேற்றக்கலையை நிறுவியுள்ளதை தமிழ்மக்கள் அனைவரும் புரிந்துகொண்டு முன்னேற வேண்டும் என்கிற ஆர்வத்திற்கு இந்தக் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126: இதுவரை உங்களுக்கு கிடைத்தது அனைத்தும் நீங்கள் கேட்டதும் அதற்காக நீங்கள் நோற்றிருந்தது மட்டுமே என்றால், உங்களால் ஒருபோதும் மறுக்க முடியாது. இதைத்தான், 'கேட்பது மந்திரம் நோற்பது தவம்' என்று சொலவடை ஆக்கி மந்திரம் என்கிற முன்னேற்றக்கலையைத் தொடங்குகின்றனர் தமிழ்முன்னோர். 1. நாம் கேட்டால் கிடைக்கும். 2. நாம் கேட்டால் மட்டுமே கிடைக்கும். 3. நாம் கேட்டதைக் கொடுக்கிற வேலையைக் கடவுள் செய்கிறது. 4. நாம் கேட்டால் மட்டுமே கடவுளால் கொடுக்க முடியும். 5. நாம் கேட்டதை ஒருங்கிணைத்துக் கொடுப்பதற்கு, அதற்கான நோற்றல் என்கிற தவத்தை எதிர்நோக்குகிறது கடவுள். 6. கேட்காமலும் நோற்காமலும் இருப்பவர் பேரளவு காரணம் பற்றியே- இலர் பலராகியுள்ளனர். என்பது தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்திற்கான நூலான திருக்குறளின் கூற்று. அதற்கான குறள்: 7. பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அந்த வாய்ப்பு கடவுளிடம் கேட்டதால் கிடைத்தது. பல்லக்கை சுமக்கிறவனுக்கு நம்மால் பல்லக்கை சுமக்கத்தான் முடியும் என்று புலம்பியதால் கிடைத்தது. இரண்டும் விதிக்கப்பட்டது அல்ல. என்பது தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்திற்கான நூலான திருக்குறளின் கூற்று. அதற்கான குறள்: 8. கடவுளிடம் எதையெல்லாம் கேட்கவேண்டும் என்கிற எண்ணமும் அதற்கு கடவுள் கேட்கிற தவத்தை நிறைவேற்றுகிற திண்ணமும் இருந்தால் எண்ணியதெல்லாம் கிடைக்கும், என்பது தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்திற்கான நூலான திருக்குறளின் கூற்று. அதற்கான குறள்: 9. நம்மில் பெரும்பாலோர் உடல்நலம், மனமகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம் அகியவற்றை எய்தாமைக்குக் காரணம் கடவுளிடம் கேட்காமல் இருப்பதே. என்பதே மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் தமிழ்முன்னோர் நிறுவிய செய்தி. தமிழ்மக்கள் அனைவரும் எல்லையில்லாத முன்னேற்றம் பெறமுடியும் என்பதை உறுதியாகத் தெரிவித்தும், பலரின் வாழ்க்கையில் அந்த வகைக்கு மாற்றத்தை உருவாக்கியும் வரும் ஐந்திணைக் கோயில்- அதற்காக, குடும்ப குடும்ப உறுப்பினர் காப்பு மந்திரத்தையும், உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் கலைவளவன் சான்றிதழ் படிப்பையும் வழங்கி வருகிறது. தமிழ்மக்கள் பேரவளவாக தங்களை இணைத்துக்கொண்டு அருள்பெற பாடாற்றி வருகிறது ஐந்திணைக்கோயில்.
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,084.