Show all

கொஞ்சம் தமிழ், நிறைய வாழ்க்கை!

நாம் தொலைத்த கொஞ்சம் தமிழ் என்பது- தமிழை அடையாளமாக கருதுவதை விட்டது மட்டுந்தான். அதற்கே நாம் இவ்வளவு வாழ்க்கையை இழந்து விட்டோம் என்றால் அந்த கொஞ்சம் தமிழை மீட்டு நிறுவினால், அம்மாடியோவ் நாம் காணப்போகிற வெற்றி இமயம் தொட்டு வட துருவ முனையிலும், தென் துருவ முனையிலும் எதிரொலிக்கும் என்று அறைகூவல் விடுப்பதற்கானது இந்தக் கட்டுரை.

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தொலைத்தது கொஞ்சம் தமிழ், இழந்துள்ளது நிறைய வாழ்க்கை
நாம் தொலைத்த கொஞ்சம் தமிழ் என்பது- தமிழை அடையாளமாக கருதுவதை விட்டது மட்டுந்தான். அதற்கே நாம் இவ்வளவு வாழ்க்கையை இழந்து விட்டோம் என்றால் அந்த கொஞ்சம் தமிழை மீட்டு நிறுவினால், அம்மாடியோவ் நாம் காணப்போகிற வெற்றி இமயம் தொட்டு வட துருவ முனையிலும், தென் துருவ முனையிலும் எதிரொலிக்கும் என்று அறைகூவல் விடுப்பதற்கானது இந்தக் கட்டுரை.

தமிழை அடையாளமாக கருதுவதை விட்டு விட்ட தமிழர்கள், பற்பல அயல்களை தங்கள் வாழ்மானமாக கருதி, ஒன்றுமை இழந்து தனித்தனி கூட்டங்களாக நிற்கிறோம். 

பெரும்பாலான தமிழர்கள் தங்கள் அடையாளம் இழந்தது தங்கள் வாழ்மானம் குறித்த அடிப்படையிலேயே என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 

தங்களால் கொண்டாடப்படும் பல்வேறு ஹிந்துத்துவா தெய்வங்கள் தாம் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தமிழரின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர். 

தங்களால் கொண்டாடப்படும் இயேசுதான் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தமிழரின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

தங்களால் கொண்டாடப்படும் அல்லாதான் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தமிழரின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

தங்களால் கொண்டாடப்படும் ஆங்கிலந்தான் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

தங்களால் கொண்டாடப்படும் இந்த அல்லது அந்த கட்சிதான் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தமிழரின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

தங்களால் கொண்டாடப்படும் மார்க்சிய சிந்தனைதான் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தமிழரின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

திராவிட இயக்கத்தாரால், குறிப்பாக திமுகவால், தங்களால் கொண்டாடப்படாமல் விட்ட ஹிந்தியால்தான் தங்கள் வாழ்விழந்து நிற்பதாக ஏங்கித் தவிக்கிற ஒரு கூட்டம் கூட தமிழரில் ஒரு பிரிவாக இருந்து கொண்டிருக்கிறது, என்பது தமிழர் வரலாற்றில் இருந்து வருகிற ஒரு மாபெரும் வேடிக்கையாகும்.

ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் - வட இந்தியத் தலைவர்களால் கல்விகொடுக்கப்படாமல், இங்கே வந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு பிழைப்பதற்கும்,பானிபூரி விற்று பிழைப்பு நடத்துவதற்கே நாம்தாம் அவர்களின் வாழ்மானத் தலைமையாக இருக்கிறோம் என்பதை இந்த வகை விணாய்ப் போன தமிழர்கள் உணரத்தயாராய் இல்லை.

ஆனால் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக இனத்தினருக்குமே தமிழ்முன்னோர் அறிந்திருந்த, பழந்தமிழர் உலகைக் கட்டி ஆண்டு வாழ்ந்திருந்த, பார்ப்பனியர் வருகைக்கு முந்தைய, தமிழ் இலக்கியங்களில் தௌளத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள தத்தமது எண்ண ஆற்றலால்தாம் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை என் நெடிய ஆய்வில் உணர்ந்து கொண்டேன்.

அந்த மாபெரும் உணர்வை மந்திரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகளாகவும், நூல்களாகவும் மீண்டும் மீண்டும் பதிவிட்டு வருகிறேன். நிறைய பேர்கள் என் கட்டுரைகளையும் நூல்களையும் படித்தும், விரும்பியும், பகிர்ந்தும் வருகின்றார்கள். 

ஆனால் ஒரு ஒருவர் ஆன இளந்தமிழ்வேள் என்ற புனைப்பெயர் கொண்ட லோகநாதன் அவர்கள், 'ஆம் உண்மைதான்' என்று மீண்டும் மீண்டும் என்னோடு கலந்துரையாடி வருகின்றார். 

இந்த 
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்
என்கிற வெறுமனே ஒன்னே முக்கால் அடி தமிழை எங்கள் அடிப்படையாக்கிக் கொண்டு நன்மைகளை எய்தி வருவதில் நாங்கள் மகிழ்ந்திருக்கிறோம்.
என்னோடு இன்னொருவர் (இளந்தமிழ்வேள்) என்கிற இந்த எண்ணிக்கை, பத்தாகும் போது பல தமிழ்க்குடும்பங்கள் நன்மைகளை எய்தும் என்கிற உண்மையை பல நூறு பேர்கள் கொண்டாடுவார்கள். 
என்னோடு இன்னொருவர் என்பதைத்தாண்டி ஒரு நூறாயிரம் என்கிற எண்ணிக்கையை எட்டுகிற நிலையில், உறுதியாக இந்தியாவில் தமிழர் ஆட்சி சாத்தியமாகும்.

நாம் முன்னெடுக்க வேண்டியது ஒன்னே முக்கால் அடி செய்தியில் பொருந்தியிருக்கிற உண்மையை உலகுக்கு ஓங்கி ஒலிப்பதைத்தான். இந்தக் கொஞ்சம் தமிழ் உலகமே தமிழுக்குப் பின்னால் என்கிற அந்த மிகப்பழைய நிலையில், நீங்கள் உலக மக்கள் மீதான உங்கள் தாய்மையை உணர்கிற நிறைவான வாழ்க்கை உங்களுக்கு சாத்தியமாகும். 

'தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்பது கணியன் பூங்குன்றனார் வழியாக, தமிழ்முன்னோர் நிறுவிச் சென்ற, நமது தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்ள முடிவதான மந்திரக்கலையை மூன்றாவது கலையாக முன்னெடுத்தவர்கள் தமிழ்முன்னோர். 

மற்ற இரண்டு கலைகள் நிமித்தகமும், கணியமும். இந்த மூன்றையுமே அயல் இனத்தவர்கள் தங்கள் மூளையில் உதித்ததுபோல நடித்தே உலகை ஆண்டுவருகின்றனர். 

இந்தியாவில் இன்று ஆட்சியில் இருக்கிற பார்ப்பனிய பணியாக்கள் தங்கள் மொழிதான் ஹிந்தியாவை ஆளவேண்டும் என்று நம்மீது திணிக்கின்றார்கள். அதற்கு அவர்கள் முன்னெடுப்பது ஹிந்தியை பதினைந்து ஆண்டுகளுக்குள் நிறுவிக் கொள்ளலாம் என்று கொடுத்திருந்த, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்ட சட்டப்பிரிவை. 

எக்காலத்தும் பொருந்துகிற சட்டப்பிரிவாக அட்டவணை எட்டும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. மீட்டு நிறுவுவதில் நாம் முன்னிலை வகுத்தால் மீதம் உள்ள இருப்பத்தியோரு மொழியின மக்களும் நம்மை வியந்து பார்ப்பார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,236.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.