Show all

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வௌ;வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில், மலைப்புகளில்- தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைப் புழங்கி வருகிறோம்.

அவ்வகையாக நாம் தொலைத்துள்ள பல நூறு சொற்களின் பொருள் பொதிந்த வரையறைகளை தெரிவிக்க 'பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்' என்கிற தலைப்பில், தொடர்ந்து கட்டுரைகள் படைக்கவிருக்கிறேன். 'ஐந்திரம்' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். 

ஐந்திரம்: தமிழில் 'ஐந்திரம்;' என்று வழங்கப்படுகிற சொல் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற திரண்ட ஆற்றல்களுக்கான பொதுச் சொல் ஆகும். 

தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பார்ப்பனியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான பிரபலம், பிரமாண்டம், பிரசாதம், பிரணவம், பிரதமர், போன்ற நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். அந்த வகையில் தமிழன் கண்ட ஐந்திரத்திற்கும் ஒரு சொல்லை உருவாக்கினார்கள். அந்தச் சொல்தான் பிரபஞ்சம். இதற்குப் பெரிய ஐந்து என்று பொருள். 

அவர்கள் மொழிமாற்றிய பிரபஞ்சம் என்ற சொல்- நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களை குறிக்க பெரும்பாலும் பயன்படுத்த படாமையாலும், பிரபஞ்சம் என்பது பேரண்டப் பெருவெளி என்பது மட்டுமானது போலவும் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், பார்ப்பனியர்கள் ஐந்திரத்திற்கு மொழிமாற்றம் செய்த இன்னொரு சொல் பஞ்ச பூதமாகும். இன்றைய தமிழர்களும் ஐந்திரத்தை பஞ்ச பூதம் என்ற சொல்லாலேயே வழங்கி வருகின்றனர்.

கட்டிடக்கலை சிற்பக்கலையில் வல்லவரான மயன் என்கிற பழந்தமிழ்க் கலைஞனை பார்ப்பனியரும் கொண்டாடி வருகின்றனர். மயன், ஐந்திரம் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 

பனம்பாரானரின் தொல்காப்பிய பாயிரத்தில் தொல்காப்பியர் ஐந்திரத்தைக் கற்றுத் தேர்ந்தவர் என்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் விசும்பு ஆற்றல் குறித்து, தெளிவான கருத்துக்கள் பொதிந்த விழுமிய நூல் ஐந்திரம் என்று பேசப்படுகிறது.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வகைக்கே தமிழ் முன்னோர், தமிழின் ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஆய்ந்து நிறுவியுள்ளனர். ஆக எந்தத் தலைப்பின் விரிவையும் அந்தச் சொல்லை ஆய்வு செய்து மீட்டுவிட முடியும். அந்த வகையில்தான் பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் மீட்புக்கான இந்தப் பணியை நான் உறுதியோடு தொடர்ந்து வருகின்றேன்.

ஐந்திரத்தில் உள்ள ஐந்து எவை என்கிற கேள்விக்கான விடை திரங்கள் ஆகும். ஆக, 'திரம்' என்றால் என்ன என்கிற ஆய்வு நமது ஐந்திரத்தின் வரையறையை நிறுவுவதற்கு நமக்கு முழுமையான செய்தியை மீட்டுக் கொடுத்துவிடும்.

திரட்சி, திரள், திரண்ட, என்கிற தமிழ்ச் சொற்களில் இருந்து திரம் என்பது திரண்டிருக்கிற என்று பொருள் தருகிற சொல்லாகும். அந்த திரண்டிருக்கிற ஆற்றல்கள், திறந்தால் வெளிப்படுவது திறன் என்ற சொல்லால் நாம் அறிய முடிகிற நிலையிலும், 

அடிப்படையில் திரம் ஐந்து மட்டுமே என்று உறுதிப்பாடாக சொல்லப்படுகிற சொல் ஐந்திரம் என்கிற நிலையிலும்- தமிழர் அடிப்படை ஆற்றல்களாக கொண்டாடி வரும் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களே ஐந்திரம் என்று தமிழர் நிறுவியிருந்தனர் என்று நாம் ஐந்திரத்தை மீட்டெடுக்க முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.