Show all

தமிழின் ஐம்பரிமாணங்கள்!

பாண்டியன், சோழன், சேரன்- தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்டிக் கொடுத்த வரலாற்றைப் பேசி, நடப்பு நிலையில் தமிழ் இழந்திருக்கும் இந்த ஐம்பரிமாணங்களைச் சுட்டிக்காட்டி, மீண்டும் தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்ட ஒரு மாவீரன் கிடைப்பாரா என்கிற தேடுதலுக்கானது இந்தக் கட்டுரை.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

தமிழ் வளர்த்தார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழியல் கொண்டாடினார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழ்நிலத்தில் தமிழையும், தமிழியலையும் ஆட்சி அதிகாரப்படுத்தினார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக கடமையில் பாடாற்றினார்கள்.
இதுதான் தமிழ் கடந்து வந்த வரலாறு.
தமிழுக்குக் கிடைத்தன-
1. தமிழ்
2. தமிழியல்
3. தமிழ்நிலம்
4. தமிழ் இனம்
5. தமிழ் வரலாறு.

தமிழால் வளர்ந்து கொண்டிருக்கின்றன திராவிட இயக்கங்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும்.
ஆனால் தமிழ்வழிக்கல்வி படிப்படியாக சுருக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

அட்டவணை எட்டை ஆட்சி அதிகாரப்படுத்த முனையாமல், ஒற்றையினமொழி ஹிந்தியை கோலோச்ச வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் திராவிட இயக்கங்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும்.

'தமிழியல் என்கிற ஒப்புரவு' ஒற்றைத் தமிழனின் நெஞ்சையும் நிறைத்திருக்கிறதா என்றால் வினாக்குறியே.

பிராமணியம் என்கிற ஏற்றதாழ்வை அதை எதிர்த்துக் கொண்டே கொண்டாடுகிறோம் தமிழர்கள் எல்லோரும்.

தமிழ்ப் பெருமை கொண்டாடுவதில் கூட 'தமிழன்டா' என்று கண்ணியமற்ற சொல்லாடி பிராமணியம் என்கிற ஏற்றதாழ்வைத் நெஞ்சம் நிறைத்திருக்கிறோம்.

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தலும் இலமே என்பதுதாம் ஒப்புரவு என்கிற தமிழியல்.

நான்- மேலும் மேலும் கற்க பெரியோன் ஆவேன், காலம் கடக்க கடக்க அகவையில் நான் பெரியோன் ஆவேன். அதனால் நான் பெரியோரை வியத்தல் இல்லை.

நான்- எவ்வளவு பெரியவன் ஆனாலும் அதற்குக் காரணம் என் கற்றலும் காலமும் என்பது அறிவேன் அதனால் சிறியோர் என்று யாரையும் இகழ மாட்டேன் என்பதே தமிழியல்.

அரசு பள்ளியில் நல்ல சம்பளம் வாங்கி நம்மை, குறைந்த சம்பளத்தில் இயங்கும் நம்மக்களுக்கு, நாம் மேல்தட்டில் இருப்பதாகக் காட்டுகிறோம். 

ஆனால் நம் பிள்ளையை தனியார் ஆங்கில வழிப்பள்ளியில் ஒப்புக் கொடுத்து, அரசு பள்ளியில் குழந்தைகளை இயக்கும் நம்மக்களுக்கு நாம் மேல்தட்டில் இருப்பதாகக் காட்டுகிறோம்.

வெளியில் பிராமணிய எதிர்ப்பு பேசி, உள்ளத்தில் பிராமணிய ஏற்றதாழ்வை நிறைத்து தமிழியலைக் கேள்விக் குறியாக்கி வருகிறோம்.

தமிழ்நிலத்தில் தமிழையும், தமிழியலையும் ஆட்சி அதிகாரப்படுத்தினார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.

ஆனால் நாம் தமிழையும தமிழியலையும் ஆட்சி அதிகாரப்படுத்தாத காரணம் பற்றி தமிழ்நாடு என்கிற பெயர் மட்டும் இருக்கிறது. தமிழ்நிலத்திற்கான ஆட்சி அதிகாரம் ஒன்றியத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு என்பது வெறுமனே நிருவாகத்திற்கானதாக இருக்கிறது.

வெறுமனே நிருவாகத்திற்கானதாக இருக்கிற தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்கிற வெற்றுக் கூச்சல் காதைக் கிழிக்க முழக்கப்படுகிறது. தமிழும் கொண்டாடாத, தமிழியலும் கொண்டாடாதவர்களில் யாரைத் தமிழன் என்று நிறுவுவது?

தமிழ் வளர்த்தார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழியல் கொண்டாடினார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழ்நிலத்தில் தமிழையும், தமிழியலையும் ஆட்சி அதிகாரப்படுத்தினார்கள் பாண்டியனும் சோழனும் சேரனும்.
தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக கடமையில் பாடாற்றினார்கள்.
இதுதான் தமிழ் கடந்து வந்த வரலாறு.

இந்த வரலாற்றைத் தொலைத்து விட்டு எந்த வரலாற்றை நாம் எழுதப் போகிறோம். என்று ஏங்கி நிற்க வேண்டியது இல்லை.
இன்னொரு மண்ணில் வரலாறு எழுத முயன்ற மேதகு போல 
ஒன்றை மாவீரன் எழுந்தாலும் 
எழுதமுடியும் வரலாறு. அதுதான் தமிழ் கடந்துவந்த வரலாறு. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,738.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.