தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை.
அவைகளே எனக்கு ஆதாரம்.
என்தமிழ் !
என்தாய் எனக்கு தந்த முதல் உடைமை என்பதே எனக்குப் பெருமை.
என்தமிழை!
எந்த இன்னொரு மொழியோடும் வைத்து ஒப்பிடத் தேவையில்லை.
என்தமிழை!
பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான கடமை என்னுடைதே.
தாய்மொழி!
வெறுமனே கருத்துப் பறிமாற்றக் கருவியன்று. அதுவே அவன் அறிவின் மூலம்.
அடுத்த மொழிகள் எத்தனை கற்றாலும் அவைகள் கருவிகள் மட்டுமே.
தமிழ் உயர்வானது!
தமிழ் பழமையானது!
தமிழ் வளமையானது!
தமிழ் செம்மையானது!
என்பதெல்லாம் நிற்காது.
தமிழ் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமை என்பது ஒன்றே நிற்கும்.
அதுவும் ஏனைய
2.குடும்பம்
3.வீடு
4.கல்வி
5.கலை
6.இலக்கியம்
7.தொழில்
8.கருவிகள்
9.உடை,அணிகலன்
10.உணவுகள்
11.வணிகம்
12.நாடு
13.அரசு
14.நீராதாரம்
15.கோயில்
16.நிதி
17.நீதி
18.பாதுகாப்பு
19.பண்பாடு
20.வரலாறு
ஆகியவற்றில் எல்லாம் உடைமையாளனாக
மாறா விட்டால் நிற்காது.
எனவே
வெறுமனே தமிழ் உணர்ச்சியை மட்டும்
தூண்டுவதை நிறுத்திவிட்டு
மற்றவைகளில்
தமிழன் உடைமையாளனாக மாறி
தமிழைத் தரணி போற்றச் செய்குவோம்.