மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. 16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியக்கலை ஆகும். உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும் என்பதே மந்திரக் கலை என்பதறிவோம். தமிழ்முன்னோர் தெரிவித்துள்ள முதல்களில் ஒன்றான வெளியில் (இடத்தில்) மன்றொன்றான காலமான தனி ஒன்றுகளின் தனித்தனி கூட்டுஇயங்கங்களான ஒவ்வொரு மனிதனும், ஒரு நூறிலிருந்து 120 ஆண்டுகள் இயங்க முடியும். இயற்கையில் காணப்படுகிற எந்த ஒன்றும் தனித்தனி தான்தோன்றி நிகழ்வு ஆகும். அந்த வகையில் நீங்கள் ஒரு தான்தோன்றி நிகழ்வு. நான் ஒரு தான்தோன்றி நிகழ்வு ஆவோம். எந்த நிகழ்வுக்கும் ஒரு அடிப்படை அடையாளம் இருக்கிறது. எந்த நிகழ்வுக்கும் ஒரு அடிப்படை உள்ளடக்கம் இருக்கிறது. உங்கள் அடிப்படை அடையாளத்தோடு, உங்களின் அறிவார்ந்த உள்ளடக்கத்தோடு உங்களின் (நிகழ்வு) காட்சிகள் உங்களால் கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு அந்த வகைக்கு உங்கள் வாழ்க்கை அமைகிறது. உங்கள் காட்சிகளில் மற்ற நிகழ்வுகள் இயங்கலாம், வந்து விட்டும் போகலாம். அது உங்களுக்கான திரட்சி ஆகும். உங்கள் திரட்சி என்பது மற்ற மற்ற நிகழ்வுகள் உங்கள் காட்சிப்படுத்துதலில் இயங்குவதாகும். உங்களின் திரட்சி உங்கள் முன்னேற்றத்திற்கு நிரை விகிதமாக (பாசிட்டிவ் ரேசியோ) அமையும். பாஜகவின் தமிழ்நாட்டு கிளையின் தலைவர் அண்ணாமலை தனிஅடிப்படை இல்லாதவராக பாஜக அடிப்படையில் காட்சிபாடாகிறார். அந்த வகையில் அந்தக் கட்சிக்கு இவர் தமிழ்நாட்டில் ஏற்படுத்தித் தருகிற முன்னேற்றத்தின் அளவில் கொஞ்சம் பாங்கு இவர் முன்னேற்றமாக அமையும். ஆனால் மு.க.ஸ்டாலின், சீமான், ஆகியோர் தனி அடிப்படையோடு மற்றவர்களை இவர்கள் காட்சிப்படுத்தி இவர்களின் திரட்சியைக் கூட்டுகின்றனர். உங்கள் அடையாளம், உங்கள் உள்ளடக்கம் உங்களுடையதாக இருக்குமேயானால் உங்களின் திரட்சி கலைஞரின் திரட்சி ஸ்டாலினில் தொடர்வது போல உங்கள் அடுத்த தலைமுறையிலும் தொடரும். திரட்சி என்பது என்ன? உங்களின் காட்சியில் இணைகிற நிகழ்வுகளின் அளவு ஆகும். எம்ஜியார் அவர்களின் திரட்சி: அவர் வாழ்க்கை முழுவதும் அமைந்த காட்சிபாடுகளில் பங்கேற்ற திரைப்படங்கள், கட்சி, தொண்டர்கள், தலைவர்கள், விருதுகள், என்கிற பல்லாயிரம் நிகழ்வுகள் ஆகும். உங்கள் முதல் உடைமைகளில் ஒன்று: உங்கள் தாய் தன்குருதியைப் பாலாக்கித் தந்த உங்கள் உடல். இரண்டு: உங்கள் தாய் தன் மூச்சுக்காற்றை மொழியாக்கித் தந்த தமிழ் ஆகும். இவைதாம் உங்கள் அடையாளம். உங்கள் தாய்மடிப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் கற்ற விடையங்களில் உருவாக்கிக் கொண்ட உங்களுக்கான இயல்புதான் உங்கள் உள்ளடக்கும். இதையொட்டியே உங்கள் கல்வி, தொழில்;, தனித்திறன், மனைவி, மக்கள், உறவுகள், நட்புகள், நிறுவனங்கள், அமைப்புகள், கூட்டங்களை அமைத்துக் கொண்டு உங்கள் திரட்சியை பேரளவாக நீங்கள் கட்டமைக்க வேண்டும். நீங்கள் மற்றவர் அடிப்படை, மற்றவர் காட்சிகளிலேயே காட்சியாவீர்களேயானால், உங்கள் நேரடி திரட்சியால் அவர்கள் பயன்பெற்ற வகைக்கு உங்களுக்குப் பங்களிப்பார்கள். அதில் உங்கள் தலைமுறைகளை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதோடு, உங்கள் ஐம்பதெட்டு அகவைக்கு மட்டுமான வாழ்மானமே உங்களுக்கு கிட்டும். உங்களின் அடுத்த தலைமுறையினர் அனாதையாக வலம்வருவார்கள்.
நீங்கள் எப்படி உங்கள் காட்சிகளை அமைத்துக் கொண்டால் உங்களுக்கான திரட்சி பேரளவாகும் என்று புரிய வைப்பதற்கான எடுத்துக்காட்டுகளே இந்த இரண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,233.