கண்கள் வறண்டு இருக்கா? என்ன மாதிரியான சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று அறிவதற்கான கட்டுரை. 13,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய காலத்தில் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த வேலையில் தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. கண்களில் இப்படியான சிக்கல் ஏற்படுவதற்கு கணினித் திரையிலிருந்து வெளிவரும் கதிர்கள் தான் காரணம். அந்தக் கதிர்கள் கண்களில் உள்ள நீரை வறட்சியடையச் செய்வதோடு, எரிச்சல், அரிப்பு, சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. இப்படியான நிலைகளில் கண்களை பாதுகாக்க, உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று கண்மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பொதுவாக கொழுப்பு அமிலங்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. எனவே இந்த சத்துக்கள் அதிகம் உள்ள கடல் உணவுகளான மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கண்களை குளிர்ந்த நீரால் கழுவுதல் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழி. கணினி மற்றும் தொலைக்காட்சி அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்துக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்தால், கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும். நீண்ட நேரம் கணினி அல்லது மடிக்கணினி முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முதன்மையாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். முகத்தை அசைக்காமல் கண்களை மெதுவாக வலமாக இடமாக சுழற்றுவது சிறந்த பயிற்சியாகச் சொல்லப்படுகிறது. கண்களை பத்து பதினைந்து முறைகள் சிமிட்டுவதும் நல்ல பயிற்சியாகும். அதிகமான தண்ணீர் குடித்தால், கண்களில் எந்தச் சிக்கலும் வராமல் தடுக்கலாம். ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும். கண் வறட்சியைத் தடுக்க, நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள் குறித்து காண்போம். முதன்மையாக இந்தக் கொழுப்பை உடலால் உற்பத்தி செய்ய இயலாது. உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். இது உடலுக்கு பல வகைகளிலும் நன்மை செய்யுமே தவிர தீமை செய்யாது. இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் இதயத்தின் நண்பன் என்றே சொல்லலாம். ஆளிவிதை: பாதாம் பருப்பு: சொல்லப் போனால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான சிக்கல்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. உண்மையில் அன்றாடம் ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் கெட்டகொழுப்பு சிக்கல் முதல், அகவை முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. சோயாபீன்ஸ்: எனவே அடிக்கடி சோயா உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. தைராய்டு சுரப்பியின் வீக்கத்திற்கு காரணமானவற்றை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெந்தயம்: மேலும் ஐம்பது விழுக்காடு கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்த இந்த வெந்தயத்தை முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை பருகலாம். இதனால் சர்க்கரையை கட்டுக்குள் இருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கெட்ட கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும். மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வெப்பத்தையும் தணிக்கும். கடல் மீன்கள் அதிலும் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, சூரை போன்ற கடல் மீன்களில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. முட்டை: மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு முட்டையில் உள்ள செலினியம் அதிக ஆற்றலை தருவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. நண்டு: உண்மையில் நல்ல கொழுப்பான ஓமெகா மூன்று கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த நண்டு உணவை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் இதயத் தமனிகளில் கெட்ட கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே நண்டை கிழமைக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இறால்: இதனால் இதய நோய்கள் மற்றும் வாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமல்ல இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகளில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஆளிவிதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் வறட்சிக்கு தீர்வு கிடைக்கும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பாதம் பருப்பிலும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. மேலும் இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலு பெற்று உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தருகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களோடு ஒமேகா ஆறு மற்றும் ஒமேகா மூன்று என இரண்டு கொழுப்பு அமிலங்களும் மிகுந்துள்ளன.
எளிதாக கிடைக்கக்கூடிய நம் சமையல் அறையிலேயே இருக்கும் வெந்தயத்தில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் மிகுந்துள்ளது.
அதேபோன்று வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம்.
அசைவம் உண்பவர்கள் கிழமையில் இரண்டு நாட்களாவது மீன் உணவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களை போதுமான அளவு பெற முடியும்.
தற்போதைய ஆய்வுகளில் பெரும்பாலான நல்ல கொழுப்பு முட்டையில்தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது. காரணம் இதில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் என்ற நல்ல கொழுப்பு உள்ளதால் இது இதயத்திற்கு ஒரு நல்ல உணவு என்றும் கூறப்படுகிறது.
இதில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம், செலினியம் மற்றும் தாமிரம் போன்றவை அதிகம் நிறைந்துளது.
கடல் உணவான இறாலில் அதிக அளவு ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உள்ளதால் கெட்ட கொழுப்பால் குறுதி ஓட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,140.