அன்பின் இனிய தமிழ் உறவுகளே! கடந்த கட்டுரையில் மின்சாரத்தை அளக்கும் வகைக்கு பயன்படும் அளவைகளில் 1.மின்அழுத்தம் குறித்து பார்த்தோம். அடுத்து பார்க்கவிருப்பது மின்னோட்டம். 2.மின்னோட்டம். (கரண்ட்) 3.மின்திறன். (பவர்) 4.மின்ஆற்றல். (எனர்ஜி) ஒரு யூனிட் மின்சார நுகர்வுக்கு 40வாட் திறனுள்ள குழல் மின்விளக்கை 25மணி நேரம் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் பத்து 40வாட் திறனுள்ள குழல் மின்விளக்கையும், நான்கு 60வாட் திறனுள்ள மின்விசிறியையும் முறையே ஆறு மணி நேரம், மற்றும் பத்து மணி நேரம் பயன் படுத்துவதாக வைத்துக் கொண்டால் அறுபது நாட்களுக்கு உங்களுக்கான மின் கட்டணம் எத்தனை அலகுகளுக்கு வசூலிப்பார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். விளக்குகளுக்கு 40வாட்X10விளக்குX6மணி நேரம்X60நாட்கள் = 144000வாட் மணிகள் 144கிலோவாட்மணிகள் அதாவது 144அலகுகள்.
நமது வீட்டிற்கு மின் இணைப்பு செய்யப்பட்டுள்ள செப்புக் கம்பியில் ஒரு அணுவுக்கு 29 நேர்கள் (எலக்ட்ரான்) என கோடி கோடியான நேர்கள் அந்த செப்புக் கம்பியில் இருக்கும். மின்னோட்டம் ஆம்பியர் என்ற அளவால் குறிக்கப்படுகிறது. ஒரு அணுவிலிருந்து அடுத்தடுத்த அணுக்களுக்கு நேர்கள் (எலக்ட்ரான்) ஓடுவதுதான் மின்னோட்டம் ஆகும். ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது கொஞ்சம் அதிக அளவு மின்னோட்டமே. நமது வீட்டில் பெரும்பாலான கருவிகளில் ஒரு ஆம்பியருக்கு குறைவான மின்னோட்டமே இருக்கும். ஆனால் குளிர்சாதன கருவியில் ஐந்து ஆம்பியருக்கு அதிகமாகவே மின்னோட்டம் இருக்கும். ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது, உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு செய்யப்பட்டிருக்கிற செப்புக் கம்பியில் ஒரே சமயத்தில் 6280000,00,00,00,000 நேர்கள் ஓடுவதாகும்.
வீட்டில் நாம் அமைக்கும் கருவிகளை இயக்கப் பயன்படும் மின்அழுத்தம் X மின்னோட்டத்தின் கூடுதல் அளவைதான் அந்தக் கருவியின் மின்திறன் என்கிறோம். மன்திறன் வாட் என்ற அளவால் குறிக்கப்படுகிறது. நமது வீட்டில் பயன்படுத்தப் படும் குழல்மின் விளக்கின் மின்திறன் 40வாட் ஆகும். மின்விசிறிகளின் மின்திறன் 60வாட் ஆகும். வீட்டில் ஒரு எச்பி திறனுள்ள நிரேற்றுக் கருவி பொருத்தப்பட்டிருக்குமானால் அது 746வாட் மின்திறனுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படி வீட்டில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியும் குறிப்பிட்ட வாட் மின் திறனுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது கிலோ-வாட்-மணி என்ற அளவில் குறிக்கப்படுகிறது. இதை மின்வாரியம் ஓர்அலகு என்று குறித்து, நாம் எத்தனை அலகு (யூனிட்) மின்சாரம் பயன்படுத்தினோம் என்று கட்டணப்பட்டியல் அனுப்புகிறது.
மின்விசிறிகளுக்கு60வாட்X4மின்விசிறிX10மணிநேரம்X60நாட்கள் = 144000வாட்மணிகள் 144கிலோவாட்மணிகள் அதாவது 144அலகுகள்
மொத்தம் நீங்கள் அறுபது நாட்களக்கு நுகர்வு செய்த மின்அளவு 288அலகுகள் ஆகும்.