18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். ஈ.வெ.இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து, கா.ந.அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் 02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5051 இல் (17.09.1949) கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு. அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்தொடர்ஆண்டு-5054ல் (1952) நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. ‘திராவிடர்களின், கருத்தையறியாமலும் திராவிடர்களின் அடிப்படை உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை’ என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் ‘ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட(தென்னாட்டு) இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு’ கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, ‘டால்மியாபுரம்’ பெயரை ‘கல்லக்குடி’ என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. தமிழ்தொடர்ஆண்டு-5057ல் (1956) திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியக் கூட்டாட்சியில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு ‘திருத்தம் வேண்டும்’ என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. தமிழ்தொடர்ஆண்டு-5059ல் (1958) தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு ‘உதயசூரியன்’ தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக தமிழ்தொடர்ஆண்டு-5063ல் (1961) திமுக பேரணி நடத்தியது. தமிழ்தொடர்ஆண்டு-5064ல் (1962) நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ‘திராவிட நாடு’ விடுதலை கோரிக்கையை முன் வைத்து கருத்துப் பரப்புதல் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். தமிழ்தொடர்ஆண்டு-5065ல் (1963) ‘பிரிவினை’ பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் ‘பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா’வை ஜவகர்லால் நேருவின் காங்கிரஸ் அரசு அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியால் திமுகவிற்கும் மாநில உரிமை மீட்புக்கும் அடிக்கப் பட்ட முதல் ஆப்பு; அடித்தவர் நேரு. இதையடுத்து அதே ஆண்டு நடத்தப் பட்ட தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலையாய கொள்கையான ‘திராவிட நாடு விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. ‘தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது’ என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. இதுதான் திமுகவின் முதல் சறுக்கல். தமிழ்தொடர்ஆண்டு-5069ல் (1967) நடைபெற்ற மூன்றாவது தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். அவர், சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது ஆகியவற்றை நிறைவேற்றினார். தமிழ்தொடர்ஆண்டு-5073ல் (1971) தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5074ல் (14.10.1972) கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இதில் காங்கிரசின் சதி உள்ளீடாக இருந்தது. ஆனாலும் எம்ஜியார் இலட்சிய நோக்கோடு செயல்பட்டு வந்த காரணத்தால், தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது அமைந்தது. 07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5076ல் (20.04.1974) ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. 17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5077ல் (31.01.1976) இந்;;;திரா காந்தியின் காங்கிரசு நடுவண் அரசால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க. அண்ணா மறைவுக்குப் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய பத்தொன்பது ஆண்டு கால ஆட்சியில் கடைசி ஐந்தாண்டு கால ஆட்சி இருண்ட கால ஆட்சியாக இருந்தது. அந்த கால கட்டத்தில் திமுகவால் மின் பற்றாக் குறையால் நாடு முழுவதும் மின் வெட்டை ஒழுங்கு படுத்தவே முடியவில்லை. அந்தமுறை திமுக ஆட்சி இழப்பு மின் வெட்டு காரணமாகவே அமைந்தது. எம்ஜியாருக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுகவிற்கு செயலலிதாவை ஒழித்துக் கட்டுவது ஒன்றே இலட்சியமாக இருந்தது. அந்தக் காலக் கட்டங்களில் காங்கிரசுக்கு பாதபூஜை செய்வது மட்டுமே திமுகவின் வேலையாக இருந்தது. எம்ஜியாருக்கு பிறகு திமுக தமிழக மக்களுக்கான கட்சியாக இயங்க வில்லை. திமுக என்ற கட்சியைக் காக்கும் நிறுவனமாகவே செயல் பட்டது. கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கும், இலட்சக் கணக்கான தமிழீழத் தமிழர்கள் கொல்லப் படுவதற்கும், தமிழ்ப்பெண்கள் மானபங்கப் படுவதற்கும், தமிழீழ விடுதலைக்கு சாவுமணி அடித்ததற்கும் காங்கிரசிற்கு ஒத்துழைப்பாய் இருந்தது என்கிற பலியைத் திமுக எந்த காலத்திலும் துடைக்க முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,626