உலகப் பொதுவாக இருக்கிறது அமெரிக்க டாலர். காரணம்- நிருவாகம். எந்த நாடும் பணத்தை அச்சிடும் போது அந்தப் பணத்தின் மதிப்புக்கான தங்கத்தை இருப்பு வைக்கவேண்டும். ஏனென்றால் பணம் என்பது அரசு அச்சிட்டுத் தருகிற தொகை அல்ல. அரசு சம்பாதித்த தொகையும் அல்ல. அந்த நாட்டின் மக்களின் உழைப்பின் ஆதாயம். உழைப்பின் ஆதாயத்தை மக்கள் தங்கள் உருவாக்கிய பொருளை, பண்டமாற்றாக பரிமாறிக் கொள்ளாமல் பணம் என்ற அடையாளத்தால் பரிமாறிக் கொள்கின்றனர். அரசு அந்த அடையாளத்தின் மதிப்பிற்கு தங்கத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் அச்சிட்டு வெளியிடுகிற பணம் அளவிற்கு தங்கத்தை இருப்பு வைப்பதில்லை. இந்தியா இருபத்தெட்டு விழுக்காட்டு மதிப்புக் தங்கம் வைத்திருக்கிறது. இதில் அதிக விழுக்காட்டு மதிப்புக்கு தங்கம் இருப்பு வைத்திருப்பது உலக வங்கியும் அமெரிக்காவும். உலகவங்கி பணம் அச்சிடுவதில்லை. அமெரிக்க டாலரை அச்சிடுகிறது. ஆகவே அதிக விழுக்காட்டு தங்கத்தை தங்கள் மக்கள் பணத்திற்கு இருப்பு வைத்துள்ள அமெரிக்காவின் டாலர் உலகச்செலாவணிகளின் பொதுவாக வைக்கப்பட்டுள்ளது.