தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா? அல்லது தை முதல் நாளா? இப்படியொரு கேள்வியைத் தமிழ் ஆர்வலர்களுக்குள்ளாகவே கேட்கப்பட்டு விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான விடையாகவே முன்னெடுக்கப் படுகின்றது இந்தக் கட்டுரை. 18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. உலகின் மற்ற எந்த மொழிகளிலும் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். இந்தச் சிறப்பு வாய்ந்த பொருள் இலக்கணம், சங்கம் கண்ட தமிழ்முன்னோருக்கு கூட்டுச்சிந்தனையில் கிடைத்த கருவூலம் ஆகும். இதனால் சமூகம் திருத்தும் நோக்கத்திற்காக, தனி மனித அறிவாளர்கள் முன்னெடுத்த மதம் தமிழர்களுக்கு இன்று வரை தேவைப்படாமல் போனது. தமிழன் வானியல் முன்னோடி. தமிழனின் அகப் பொருள் இலக்கணப் பகுதியே ஏராளமான வானியல் செய்திகளை ஒட்டியே கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதை அப்படியே தோதாக விட்டுவிட்டு தமிழர் ஆண்டுத் தொடக்கம் சித்திரையிலா, தையிலா என்று நிறுவ வேறு ஆதரங்களை கட்டமைக்க முடியாது; கட்டமைக்கவும் கூடாது. அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும். ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முதன்மை இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை, 1.குறிஞ்சித் திணை 2.முல்லைத் திணை 3.மருதத் திணை 4.நெய்தல் திணை 5.பாலைத் திணை இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை, 1.முதற்பொருள் 2.கருப்பொருள் 3.உரிப்பொருள் ஆகியன. முதற்பொருள்: நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர். இங்கே தமிழர் ஆண்டுத் தொடக்கமாக இளவேனிற்காலத்து சித்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் நாள் தொடக்கம் காலை சூரியன் தோற்றம். ஆரியர் நாள் தொடக்கம் நண்பகல். ஐரோப்பியர் நாள் தொடக்கம் நள்ளிரவு என்பது நடைமுறையில் உள்ள செய்தி. சித்திரை, வைகாசி-இளவேனிற் காலம். ஆனி, ஆடி-முதுவேனிற் காலம். ஆவணி, புரட்டாசி-கார் காலம். ஐப்பசி, கார்த்திகை-குளிர்காலம். மார்கழி, தை-முன்பனிக் காலம். மாசி, பங்குனி- பின்பனிக் காலம். இப்படி ஏராளமான செய்திகளை அகப்பொருள் இலக்கணம் உள்ளடக்கியுள்ளது. நமது தலைப்புக்கு தேவையின்மைக் காரணம் பற்றி அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாக எழுதமுனையவில்லை. முதல் எனப்படுவது இடமும் காலமும் என்றனர் நம் தமிழ்முன்னோர். அதையே தான் ‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இடம் அடிப்படையில் தமிழர்கள் ஓரை என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். நாம் வாழும் புவி, ஞாயிறுகோளைச் சுற்றிவரும் பாதையை பனிரெண்டு பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பனிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். அந்த வகையான இடம் அடிப்படை கொண்ட சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு, ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்குத் திருவிழா, தை முதல்நாள் பொங்கல் திருவிழா ஆகிய இந்த விழாக்களை, நாட்களை யொட்டி முன்னெடுத்தார்கள். காலம் அடிப்படையில் தமிழர்கள் நாள்மீன் என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். புவி சுற்றிவரும் பாதையில் காணப்படுகிற நாள்மீன் கூட்டங்களை அதற்கு அடையாளமாக பயன்படுத்தினார்கள். அதற்கு தமிழர் கண்ட நாள்மீன் கூட்டங்கள் 27 ஆகும். இடம் அடிப்படையில் நாட்களை யொட்டி மேற்கண்ட மூன்று விழாக்களை கொண்டாடிய தமிழர்கள்- காலம் அடிப்படையிலான நாள்மீனை யொட்டி கொணர்ந்த ஒரு விழாதான் கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழாவாகும். தமிழர்கள் வானியலை ஒட்டி மூன்று முன்னேற்றக் கலைகளை உருவாக்கினார்கள். அவை 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 2.கணியக்கலை. 3.மந்திரக்கலை என்பனவாகும். இந்த மூன்று கலைகளையும் நாம் பார்ப்பனியர்களுக்கு தாரை வார்த்து விட்டோம். தமிழர்கள் ஐந்திர ஆற்றல் (பஞ்சபூதம்) குறித்தும் அவற்றின் இயக்கம் குறித்தும் ஐந்திரம் என்ற தலைப்பில் நிறைய பேசியுள்ளார்கள். அதில் வருகிற இயக்க ஆற்றல்களே இறை, தெய்வம், கடவுள் என்பன. இவைகள் தமிழர் அறிவித்தலில் இயக்கங்கள். வேண்டுமானல் அஃறிணை ஒன்றன்பால் என்று சொல்லலாம். தெய்வ ஆற்றல் ஆகிப் போன முன்னோர்களுக்கு, குலதெய்வங்களுக்கு, தமிழர் நாட்டிய நடுகல்லை, தொடக்கத்தில் லிங்கத்தை வழிபடுகின்றனர் கிண்டல் அடித்த பார்ப்பனியர்கள், பிற்காலத்தில் இவைகளுக்கு ஆண்பால் பெண்பால் கற்பித்து, சிவலிங்கம், மகாலிங்கம், பூதலிங்கம், புஷ்பலிங்கம் என்றெல்லாம் ஆபாசக் கதைகளைக் கட்டமைத்து விட்டார்கள். பார்ப்பனியர்கள் எதையும் உருவாக்குகிறவர்கள் இல்லை. ஒருசெங்கல்லைக் கூட பார்ப்பனியர்கள் செதுக்கியதாக வரலாறு இல்லை. தமிழர் கட்டிய கோயில்களில்- சாம பேத தான தண்ட முயற்சிகளில், கருவறைக்கு உரிமை பெற்று விட்டவர்கள்தான் பார்ப்பனியர்கள். நடுகல், கோயில்கலை, 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 2.கணியக்கலை. 3.மந்திரக்கலை என்பனவான முன்னேற்றக் கலைகள் கலியுக ஆண்டுக் கணக்கு அனைத்தையும் பார்ப்பனியர்களுக்கு தாரை வார்த்து விட்டு ஐரோப்பிய அடிப்படையில் ஜனவரி மாதத்தில் வருகிற தையில் தமிழர் ஆண்டு தொடங்குகிறது என்று பிழையான சான்றுகளை அடுக்கத் தொடங்கியிருக்கிறோம். தமிழர் ஆண்டுத் தொடக்கம் சித்திரை முதல் நாளே.
நிலம்:
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு: குறிஞ்சி-மலையும் மலை சார்ந்த இடமும். முல்லை-காடும் காடு சார்ந்த இடமும். மருதம்-வயலும் வயல் சார்ந்த இடமும். நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும். பாலை-பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும். தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பொழுது:
பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிறு பொழுது:
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும். ஐவகறை-விடியற்காலம். காலை-காலை நேரம். நண்பகல்-உச்சி வெயில் நேரம். எற்பாடு-சூரியன் மறையும் நேரம். மாலை-முன்னிரவு நேரம். யாமம்-நள்ளிரவு நேரம். சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.
பெரும்பொழுது:
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழர் நாளின் தொடக்கமாக ஞாயிற்றின் தோற்றத்தை தேர்வு செய்தது போலவே தமிழகத்திற்கு நிகழும் ஆறு பருவங்களில் ஆண்டின் தொடக்கத்திற்கும் ஞாயிற்றின் இளவெம்மைத் தொடக்கமான இளவேனிற் காலத்துச் சித்திரை மாதத்தைதானே முன்னெடுக்க முடியும். ஆம் சித்திரையைத்தான் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாக அமைத்தார்கள்.
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’ என்று தொல்காப்பியரும் தெரிவித்திருப்பார்.