குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- நமது, மகளாகவோ, மகனாகவோ அல்லவா அமைய முடியும்? 01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதி தமிழ்த்தொடராண்டு-4993 இல் (கிபி.1891) வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் (தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல) எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தொடராண்டு-5115 (கிபி.1913) ஆம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக அதன் அடுத்த ஆண்;டு தொடங்கி கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்தனர். அதேபோலப் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்சங்கமாக ஏற்று ஆங்காங்கே உருவாக்கப்பட்ட சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இப்பாடலைத் தமிழக அரசின் பாடலாக ஏற்குமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. தமிழ்த்தொடராண்டு-5069 இல் (கிபி.1967) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாகத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார். ஆலோசனையின் முடிவில் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுப்பாடாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் அண்ணா இறந்தார். இதன்பிறகு மு.கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்ப் பெண்ணைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5071 அன்று (11.03.1970) தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. 02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (17.12.2021) மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் நீராரும் கடலுடுத்த பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும். பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி இசையில் மூன்றாம் நடையில் பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. பாடல் வரிகள் 'இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் இந்தச் செய்தி, செய்திக்கான அடிப்படைகளில் 99.9 விழுக்காடு நமக்கு மாறுபாடு இல்லை. 0.1 விழுக்காடு மாறுபாடாக அமைந்ததுதான் நம்முடைய வினா? தமிழ் நமக்கு தாய் என்கிற அடையாளப் படுத்தல், எப்படி முன்னெடுக்கப்பட்டது? என்பதுதான் அந்த வினா. தமிழ்- வரலாறு நெடுகிலும் நமது பிள்ளையாக, சேயாக அல்லவா முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. சுந்தரனாரின் இந்தப் பாடலிலும் தமிழ்- தாயாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை சேயோன் அல்லது முருகன் என்று பட்டியல் இட்டுள்ளனர் தமிழ்முன்னோர். சேயோன் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அடையாளப்படுத்துகிற போது, தமிழ்- மகளாகவோ, மகனாகவோ அல்லவா அமைய முடியும்? எப்படி தாயாக அமைய முடியும்? நமக்குத் தாயான தமிழ்தாம், நம்மை வளர்க்க வேண்டும். நம்மை வளர்க்க முனையாத தமிழை விடுத்து ஆங்கிலத்தையோ, ஹிந்தியையோ அல்லது எனக்கு வாழ்மானம் தருவதாக நான் நம்பிக் கொண்டிருக்கிற வேறு எந்த மொழியையாவது வளர்ப்புத் தாயாக ஏற்றுக் கொள்வது பிழையில்லை. அப்படி நிறுவிக் கொள்ளும் வகைக்கு இட்டுக்கட்டிக் கொள்ளப்பட்ட வகைமைதான், தமிழைத் தாயாக அடையாளப்படுத்தியது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் தமிழ்நாட்டுக் கல்வியில், தமிழ்- அந்தநிலைதாம் தொடர்ந்து பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் நம்முடைய தாய்மொழி என்பதில்:- தமிழ்- நம் தாய்பேசிய மொழி, தமிழ்- நம் தாய் நமக்கு எடுத்துக் கொடுத்த மொழி என்கிற வேற்றுமைத் தொகையாகும். தமிழ் நமக்கான தாய் அல்ல. தமிழ் நம்முடைய சேய். தமிழை நாம்தாம் வளர்க்க வேண்டும். ஆங்கிலத்தை அதன் பிள்ளைகள் உலகளாவி வளர்த்து விட்டிருக்கின்றனர். ஹிந்தியை அதன் பிள்ளைகள் மோடியும், அமித்சாவும், அதை வளர்க்கும் முகமாகவே தங்கள் அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்கப் போக்கில் நம்மீது திணிக்கின்றனர். நாம், நமது தமிழுக்கு, தாய் என்கிற அடையாளம் கொடுத்து, முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டாம். அதற்கும் மேலாக, அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட வேண்டாம். தமிழ் நமது பிள்ளை என்கிற உண்மை உணர்ந்து, தக்கார் தகவிலர் என்பது அவரவர் அவர்கள் தமிழைப் பிள்ளையாக கொண்டாடி வளர்த்தெடுத்ததைப் போலவே நாமும் நமது தமிழைப் பிள்ளையாகக் கொண்டாடி உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்போம். மொழிக்கு மட்டுமே இலக்கணம் என்றில்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டவர்கள் தமிழ் முன்னோர். எழுத்து, சொல், என்று மொழிக்கு இலக்கணமும் 'பொருள்' என்று வாழ்க்கைக்கு இலக்கணமும் வகுத்து வாழ்ந்தவர்கள் தமிழ் முன்னோர். தமிழர் சமூகமாக கூடி மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டதால் தமிழர்களுக்கு மற்ற மற்ற மொழியினர் போல தனி மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட மதம் தேவைப்படவில்லை. 'பொருள்' அகம் புறம் என இரண்டு ஆகும். புறம் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். அகம் என்பதில் தலைவன், தலைவி, குடும்பம் இவர்களின் ஒழுக்கம் குறித்து ஐந்திணைகள். அந்த ஐந்திணைகள் ஒவ்வொன்றிற்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்று ஏராளமான விளக்கங்கள் கொண்டிருக்கிறது தமிழர்தம் பொருள் இலக்கணம். கருப்பொருள் இலக்கணத்தில் வருகிற பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்களான கடவுள், இறை, தெய்வம் மூன்றும் தமிழுக்கு மட்டுமே உரிய சொற்கள். அவைகளுக்கான விளக்கத்தை தமிழில் மட்டுமே தேடவேண்டும். மாறாக தமிழர்கள் சிலரின் சார்புகளால் புழக்கத்திற்கு வந்துவிட்டன உலக மதங்கள் என்பதால் அந்த மத அடிப்படையில் இந்த சொற்களும் தவறுதலாகப் புழங்கப் படுகின்றன என்பதால் இந்த மூன்று சொற்களை மதங்களுக்கு காவு கொடுத்துவிடக் கூடாது. மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்களை- இறை என்றோ கடவுள் என்றோ பொருத்த முடியாது. இறை என்ற தலைப்பிலும், கடவுள் என்ற தலைப்பிலும் தமிழ் முன்னோர் சுட்டுகிற செய்தி முற்றிலும் வேறானது. மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்கள் குறித்து அந்தந்த மதங்கள் சொல்லுகிற செய்தி வேறானது. கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பது என்றே பொருள். எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளியின் மூன்று நிலைகளையே கடவுள் என்கிறது தமிழ். அந்த மூன்று நிலைகள்: 1.தான் தோன்றி இயக்கம் இல்லாத, எல்லையில்லாத, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளி. 2.அந்த வெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய, தான்தோன்றி இயக்கம் உடைய, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லோராலும் இயக்கம் பெற்ற இரண்டாவது நிலை விண்வெளி. 3.தனக்கு இயக்கம் வழங்கிய அனைத்தையும் இயக்க எதிரியக்க முனைப்பான விசும்பு என்பனவாகும். விசும்புதல் என்றால் குழந்தைகள் அழும்போது அடக்க முடியாமல் எழுகிற அந்த விசும்புதலைக் கொண்டதுதான் விசும்பு. நியூட்டனின் மூன்றாவது விதி நிகழக் காரணம் இந்த விசும்புதான். எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை என்பதுதானே அந்த விதி. அந்த விதியை முன்னெடுப்பதுதான் இந்த விசும்பு. ஆகவே கடவுள் என்பதை வேறு எவற்றோடும் பொருத்த முடியாது. கடவுள் என்பது கணினியில் உள்ள வண்தட்டு போன்றது. அது இல்லாத ஒன்றாக, எல்லை இல்லாத ஒன்றாக இருந்து, தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்களால் இயக்கம் பெற்று அவைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைக்கான தெய்வமாக தமிழ்முன்னோரால், காட்டப்படுவன முறையே சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை என்பனவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைக்கான திரங்களாக (பஞ்ச பூதத்தில் குறிப்பிடப் படுகிற பூதங்கள்) தமிழ்முன்னோரால் காட்டப்படுவன முறையே விசும்பு, நிலம், நீர், காற்று, தீ ஆகும். நிலம், நீர், தீ, காற்று ஆகிய திரங்களை இறையென்றும், விசும்புத்திரத்தைக் கடவுள் என்றும் நிறுவினர் தமிழர். ஆக கடவுள் நம்மை படைத்தான ஒன்று அல்ல. கடவுள் வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை இயக்குகிறது. எனவேதான் கடவுளை- நமக்கு உள்ளும் வெளியிலும் அமைந்து- நம்மை தக்கவரா தகவிலரா என்று அடையாளம் காட்ட வல்ல- நமது எச்சமான பிள்ளைக்கு அடையாளமாக்கி- சோயோன் என்றனர் குறிஞ்சி நிலத்திற்கான தெய்வத்தை தமிழ்முன்னோர். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள்தாம் நம்முள் இருக்கின்றன. அவைகளை தாயென்றோ தந்தையென்றோ அடையாளப் படுத்துவது பொருந்தும். ஐந்தாவது ஆற்றலான விசும்பு பொருள் அல்ல. அது கட்டளைகள் மட்டுமே. அது அறிவு மட்டுமே. நாற்திரங்களும் தரும் இயக்கம் பெற்று அவைகளை இயக்கும் பேரறிவு ஆகும் விசும்பு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். விசும்பு தாய்மொழி ஆகும். விசும்பு தமிழர்களுக்கு தமிழ் என்கிற மென்பொருள் ஆகும். தமிழ் உண்மையில் நமது சேய் ஆகும்.
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
என்பதாக தமிழை உலக அரங்கில் உயர்த்திக் காட்டுவோம்.
எச்சத்தால் காணப் படும்
என்கிற வகைக்கு சிறப்பு மிக்க நமது தமிழை வைத்தே, அவர்கள் எழுதிச் சென்றுள்ள இலக்கியங்களை வைத்தே நமது தொல்காப்பியர், திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார், காக்கைப் பாடினியார், ஒளவையார், நச்செள்ளையார் ஆகிய முன்னோரை நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,249.