சேர மண் தமிழ்த்தேயத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களையும், அவர்தம் கோட்பாடுகளையும் கொண்டாடுவதில் தலையாயது என்பதற்கு இன்றும் இந்தியாவில் ஒரேயொரு நாடாக மார்க்கியத்திற்கு களமாக அங்கே மட்டும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இளங்கோ அடிகள் சோழநாட்டுக் குடிமகள் கண்ணகியை, தன் காப்பியத் தலைவியாக்கி, சேரநாட்டு மண்ணில் அவருக்கு கோயில் அமையக் காரணமாக சிலப்பதிகாரம் படைத்தவர். தமிழ்த் தேயத்தின் தலையாய பண்பான வந்தாரை வாழவைப்பதில் சேரநாடு சிறந்து விளங்கியது என்பதற்கு சிலப்பதிகாரமே சான்றாகும். அந்தச் சேர மண் தமிழ்த்தேயத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களையும், அவர்தம் கோட்பாடுகளையும் கொண்டாடுவதில் தலையாயது என்பதற்கு இன்றும் இந்தியாவில் ஒரேயொரு நாடாக மார்க்கியத்திற்கு களமாக அங்கே மட்டும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், டச்சுக்காரர் உள்ளிட்ட ஐரோப்பிய வணிகக் குழுக்களில் முதலாவதான பேர்ச்சுகீசியர்களின் வணிகக் குழு வந்திறங்கியது சேரநாடான கோழிக்கோட்டில்தான். வாஸ்கோடகாமா 12,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 வெள்ளிக்கிழமை அன்று (20.05.1498) தற்போதைய இந்தியாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கோடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார் என்பது வரலாறு. மகாபாரதத்தின் பெரும்பாலான கதைமாந்தர்களுக்கு கேரளாவில் கோயில் உள்ளது. கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் துரியோதனனுக்குத் தனிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் சகுனி கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் கனவில், வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் தெரிவித்தனராம். மேலும் அவர்கள் கூறிய செய்திகளால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார் என்றும் அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள், இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார். இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.