Show all

நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம்!

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்கிற வாதத்தில், நாம் நன்றாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்த்துவதற்கானது இந்தக் கட்டுரை.

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? ஆம் என்றால் ஆதாரம் உள்ளதா?

இந்த வினாவைக் கேட்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம் என்றே கருதத் தோன்றுகிறது. ஏனென்றால் இந்த வினாவைக் கேட்கும் போது நாம் எதிராளியின் நேக்கத்திற்கு ஆளாகிறோம். 

இந்தக் கேள்வியின் உள்நோக்கம் என்ன? பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு அஞ்சி தேர்தல் ஆணையம் நாம் மாற்றுக் கட்சிக்கு செலுத்தும் வாக்குகளை பாஜகவிற்குத் திருப்ப வழியிருக்கிறதா என்பதே ஆகும்.

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? என்ற வினா எப்படி இங்கு பொருத்தப்பாடாக அமைய முடியும்? நாம் மாற்றுக் கட்சிக்கு செலுத்தும் வாக்குகளை பாஜகவிற்குத் திருப்பும் வழிக்கு மின்னனு வாக்கு இயந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளதா என்பதுதான் கேள்வியாக அமைய வேண்டும்.

நாம் மாற்றுக் கட்சிக்கு செலுத்தும் வாக்குகளை பாஜகவிற்குத் திருப்பும் வழிக்கு மின்னனு வாக்கு இயந்திரங்கள் வடிவமைக்கப்படவில்லை என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? நாம் மாற்றுக் கட்சிக்கு செலுத்தும் வாக்குகளை பாஜகவிற்குத் திருப்ப வழிக்கு மின்னனு வாக்கு இயந்திரங்கள் வடிவமைக்கப் படவில்லை என்பதை அவர்கள்தாம் உறுதிப்படுத்த வேண்டும். 

எனவே மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? என்ற கேள்வி நமக்கானது அல்ல. நாம் அரசிடமும், தேர்தல் ஆணைத்திடமும் கேட்க வேண்டியது நாம் மாற்றுக் கட்சிக்கு செலுத்தும் வாக்குகளை பாஜகவிற்குத் திருப்பும் வழிக்கு மின்னனு வாக்கு இயந்திரங்கள் வடிவமைக்கப் படவில்லை என்பதற்கான உறுதியைத்தான். 

ஆளும் கட்சிக்கு அஞ்சாத நேர்மையான அதிகாரியிடம் இருந்தே இந்த உண்மையைப் பெறமுடியும். பெரும்பான்மை பலமுள்ள பாஜக ஆட்சியில் அப்படித் துணிச்சலான அதிகாரிகள் யாரும் இருப்பதாக சிறு புகைச்சல் கூட இல்லையே. 

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா? என்ற கேள்வி இங்கே தேவையேயில்லை. இந்த தலைப்பில் நாம் நிறுத்தப்பட்டு அரசின் ஆதிக்கவாதத்திற்கு எதிரான சிறு துரும்பும் எடுத்துப் போடவியலா நிலைக்குத் தள்ளப்படுகிறோம் இந்தக் கேள்வியை நாம் கேட்பதால் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.