நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. தமிழ்முன்னோர் தெரிவித்துள்ள முதலெனப்படுவதில் ஒன்றான இடமும், அதன் அடுத்த ஆக்கமாக உருவானது என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ள ஐந்திரங்களில் ஒன்றான வெளியின் மூன்று நிலைகளாக அமைந்த கடவுள் உங்களிடம் இருந்து இயக்கம் பெற்று உங்களை முயக்குகிறது. தமிழ்முன்னோர் இறை என்று கொண்டாடும்- நிலம், நீர், தீ, காற்று ஆகியன உங்களுக்கு இரையாவதைத் தவிர தனிப்பட்ட முறையில் உங்களைப் பாதிப்பதில்லை. பொதுவான மழை காற்று தட்பவெப்பங்களையே அவைகள் இயக்குகின்றன. கடவுள் ஒன்று, இறை நான்கு என ஐந்திரங்கள் என்று தலைப்பு பெற்ற இந்த ஐந்தும் ஆற்றல் மூலங்களே. இந்த ஐந்து ஆற்றல் மூலங்களின் கூறுகளே (அம்சம்) தெய்வங்கள். அந்தத் தெய்வங்கள் அனைத்தும் காலமாகிப் போன கூட்டியக்கச் சுழியங்களே. கூட்டியக்கச் சுழியங்கள் அனைத்தும் மின்னூல் மாதிரியான தரவுகளே. அவை உங்களின் அறிவை மேம்படுத்த முடியுமே அன்றி நேரடியாக உங்களுக்கு நன்மையோ தீமையோ தர முடியாது. ஒரு நூலகத்திற்குச் சென்று இயல்பான தமிழ்த்தொகுப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை தேடுவது மாதிரியான நடவடிக்கைதான் நீங்கள் ஏசுவைக் கும்பிடுவது. உங்களைப் போன்றதொருவர் முன்பே இருந்து, அவர் கூட்டியக்க சுழியமாகி அங்கே நூலகத்தில் இருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஆங்கிலம் கற்று முதனூல் தேட வேண்டியிருக்கும். இந்த வேலைகளும் கடவுளிடம் சென்றே கடவுளால் மட்டுமே முயக்கப்படுவதால், நீங்கள் அயல் தேடுவதால், நீங்கள் அயலவர் வரிசையில் நிறுத்தப்பட்டு உங்கள் கேட்புகள் நிறைவேற்றலில் தாமதப்படுத்தப் படுவீர்கள் அவ்வளவுதான். அடுத்து ஒரு செய்தி: தமிழர் ஆகிய நீங்கள் பிறப்பால் ஹிந்து என்று தலைப்பிட்டுக் கொண்டு வேறு ஒரு அயல் தேடலில்தான் நடப்பில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆகையால் தற்போதும் நீங்கள் வேறு ஒரு அயலின் வரிசையில்தான் கடவுளால் நிறுத்தப் பட்டிருக்கின்றீர்கள். உஙகள் வினா கொண்டுள்ள உங்கள் நடவடிக்கையில்- நெருக்கடி குறைந்த வரிசை என்று கருதுகிற இன்னெரு வரிசைக்கு இடம் பெயர்கின்றீர்கள் அவ்வளவுதான். மொத்தத்தில கடவுளில் உங்களுக்கு ஒரு சொந்த இடம் உருவாக்கவில்லை. உருவாக்குவது அறியவில்லை என்பதே உங்கள் நடப்பு நிலை. பாதிப்பு ஏதும் இல்லை. தொடர்வதைக் காட்டிலும் கடவுளில் உங்களுக்கான சொந்த இடம் உருவாக்க முயல்வது சிறப்பு! வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,659.