வேறு ஒரு களத்தில், நீங்கள் ஒரு விடையத்திற்கு பேரறிமுகமாக இருந்தால், அது என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு நான் எழுதிய விடையே இந்தக் கட்டுரை. 15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது தமிழ்மரபாகும். தமிழ் மரபான, தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பது பெற்றோரின் தோளில் அமர்ந்து பிள்ளைகள் அவர்களுக்கும் மேலாகச் சிந்திப்பது என்று பொருள். நாம் ஹிந்துக்களாக அறியப்படுகின்றோம். ஹிந்துக்களில் தமிழர் யார் என்று தேடினால், சூத்திரர்கள் என்ற தலைப்பு கிடைக்கின்றது. சூத்திரர்களுக்கு மனுவாதியில் சொல்லப்பட்ட தண்டனைகள் அபத்தமோ அபத்தமாக இருக்கிறது. நமது நடுகல் வழிபாடு லிங்கமாகி அதன் ஆபாசப்பொருள் புரியாமலே பார்ப்பனியர்களின் காமசாஸ்திர கொக்கோக ஆபாசங்களைப் புனிதங்களாக நமது கோயில் கோபுரங்களில் அரங்கேற்றியிருக்கிறோம்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று பேசும் திருக்குறள்.
தொல்கதைகளின் பெயரால் மூல முதல் முன்னோர்களைக் கொண்டாடுவது பார்ப்பனியர் மரபாகும்.
இன்று வரை இராமயணம், மகாபாரதம், நான்கு வேதங்கள், மனுசாஸ்திரம், காமசாஸ்திரம், கொக்கோகம், உபநிஷத்துக்கள் மட்டுமே பார்ப்பனியர் வாழ்மானத்திற்கான பேசுபொருளாய் இருந்து வருகிறது. இதனால் இவர்கள் பிள்ளைகள் யாரும் புதியதாக சிந்திக்க வேண்டிய தேவையேயில்லை என்பதாகும்.
நம்முடைய தமிழர்கள் இடைப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் தம்முடைய பெற்றோரின் தோளில் அமர்ந்து சிந்திக்காமல், பார்ப்பனியர்களோடு கைகோர்த்து சிந்தித்ததால், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய பல ஆயிரம் ஆண்டுகால தமிழ்முன்னோர் அறிவு துண்டுபட்டு நிற்கிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிற அவர்களின் பேச்சைநம்பி, அண்ணாந்து பார்த்தால் முகஞ்சுளிக்கும் நிலையாகிறது.
ஆங்கிலேயர் வரவுக்கு பின்பு, ஆங்கிலேயர்களால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்தம் துண்டுபட்ட அறிவு தூசுதட்டி பாராட்டப் பெற்றதன் விளைவாக, அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்ச்சியாக பல்வேறு திராவிட இயக்கங்களும், பொதுவெளியில் தனித்தமிழ் இயக்கங்களும் அந்த துண்டுபட்டு நின்று போன அறிவு குறித்து பேசத் தொடங்கின.
திராவிட இயக்கங்கள் - ஆங்கிலேயர், தமிழை - பார்ப்பனியர் ஒலித்த திராவிடம் என்று முன்னெடுத்த தலைப்பிலேயே முன்னெடுக்க - அதையே தங்கள் தலைப்பாக்கி கொண்டதால் துண்டு பட்டு நின்ற தமிழ் முன்னோர் அறிவு கொஞ்சமும் மீட்கப்படவில்லை; பெருமை மட்டுமே பேசப்பட்டு வருகிறது.
தனித்தமிழ் இயக்கங்கள் - ஆங்கிலேயர் இயல்அறிவை (சயின்ஸ்) தனித்தமிழில் மொழிபெயர்ப்பு செய்திடவே தொடர்ந்து தலைப்பட்டு வருகின்றன.
ஆக துண்டுபட்டு நிற்கும் தமிழ் முன்னோரின் பல நூறு துறைகளில் என்னால் இயன்ற, 1.பொருள் இலக்கணம் 2.உலகத் தோற்றம் 3.கடவுள் இறை தெய்வம் குறித்த வரையாறைகள் 4.சோதிடம் சாதகம் 5.ஐந்திரம் 6.கணியக்கலை 7.மந்திரக் கலை (மாயக்கலை அல்ல) 8.இயற்றமிழ் 9.தமிழ்இயல் அகிய துறைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய என் தமிழ்முன்னோரின் தோள்களை நான் தொட்டிருக்கிறேன்.
நான் பேரறிமுகமானால், மந்திரக்கலையில் என்னால் சிறப்பாக மிளர முடியும். மந்திரக்கலை குறித்து நான் அறிந்த செய்திகளின் தொடக்கப் பகுதியை, இந்த இணைப்பில் சென்று படித்தறியலாம். http://www.news.mowval.in/Editorial/katturai/Manthiram-1-114.html