நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அந்த வகையில் நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! நீங்கள் ஒப்புக் கொடுக்காமல், யாரும் உங்கள் தலைஎழுத்தில் சிறு மாற்றமும் செய்ய இயலாது. 14,தை,தமிழ்த்தொடராண்டு-5123: அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: அ.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த நாள்மீனில் பிறந்து விட்டீர்கள். ஆ.நீங்கள் இந்த திசையில் பிறந்துள்ளீர்கள் இ.நீங்கள் பிறந்த போது கோள்கள் இந்த இந்த ஓரைகளில் இருந்துள்ளது என்று மூன்று வகையான கணிப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று பலன் சொல்லுவது. உங்களுக்கு அமையப் போகிற வாழ்க்கையை மேலே குறிப்பிட்ட மூன்று கணிப்புகள் மூலம், அன்றாடம் பலன் தெரிவித்து, அதை உங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் கணிப்புகளின் போக்கில் உங்களை முன்னெடுக்கிற கலை நிமித்தகமாகும். என்றாலும் இதற்கு நீங்கள் ஒப்புகொடுத்து உங்கள் எண்ணத்தை இந்த வகைக்கு நீங்கள் இயக்கும் போது மட்டுமே இந்தக் கலை உங்களுக்கு பலன் அளிக்கும் நீங்கள் நம்பாத வகையில் இந்தக் கலை உங்களுக்குக் கொஞ்சமும் கைக் கொடுக்காது. காரணம்- தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டறிந்த- நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்கிற இயற்கை இயங்கியல் அடிப்படையாக இருப்பதே ஆகும். கணியக்கலை, நிமித்தகத்தின் மேம்படுத்தப் பட்ட கலை. கணியக்கலை என்பது: உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட பெயரால்- உங்களுக்கு வாய்க்கப் பெற்ற இயல்பை புரிந்து கொண்டு, அல்லது உங்களுக்கு பிடித்த இயல்புக்காய் உங்கள் பெயரை அமைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இயல்புக்கான கல்வி, தொழில், என அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான கலை ஆகும். இது நிமித்தகத்தைத் தோற்கடிக்கிற கலை ஆகும். உங்கள் பெற்றோர் தீர்மானித்த இயல்பு உங்களுக்கு விருப்பமில்லை யெனில் அதுகுறித்தும் கவலைப்பட வேண்டாம். எது உங்களுக்கு விருப்பமான இயல்பு, எது உங்களுக்கு விருப்பமான கல்வி, எது உங்களுக்கு விருப்பமான தொழில் அவற்றை முன்னெடுப்பதற்கானதுதான் கணியக்கலை. நீங்கள் நம்பாத வகையில் இந்தக் கணியக்கலையும் உங்களுக்குக் கொஞ்சமும் கைக் கொடுக்காது. காரணம்- தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டறிந்த- நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்கிற இயற்கை இயங்கியல் அடிப்படையாக இருப்பதே ஆகும். அடுத்து மந்திரம் என்பது கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலை. இந்தக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை நீங்கள் எந்த மதத்தையோ அல்லது கோட்பாட்டையோ உறுதியாக நம்பும் போது மட்டுமே, அந்த மதமும் அந்தக் கோட்பாடும் நீங்கள் உங்கள் தலை எழுத்தை எழுதிக் கொள்வதில் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்கின்றன. அதாவது- தங்களைத் தலைமைப் படுத்திக்கொண்டு தங்களுக்கு ஆதாயம் ஈட்டிக் கொள்ளும் வகைக்கு- அவர்கள் தங்கள் விதிகளை வலிமைப் படுத்திக் கொள்ள உங்களை நீங்கள் ஒப்புக்கொடுக்க- உங்கள் விதியை ஏறத்தாழ அவர்கள் எழுதுகின்றார்கள். அந்த வகையில், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவும்- கல்வி, தொழில், வணிக, ஆளுமை, தனித்திறன் உடைமையாளர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள விதி எழுதிக் கொள்ள முடியும் என்பதை உணரத் தலைப்படாமல்- வெறுமனே சிறு தொழில் முனைவோராகவும், நிருவாக மற்றும் உடல் உழைப்புக் கூலிகளாக மட்டுமே வாழும் வகைக்கு விதி எழுதிக் கொண்டு பாடாற்றி வருகின்றனர்.
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
என்கிற குறளில் சிலர் பல்லக்கைத் தூக்கிக் செல்கின்றனர், ஒருவர் அதில் அமர்ந்து செல்கின்றார். வாழ்க்கை இப்படித்தான் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தி- அது அவரவர்கள் அவரவர்களுக்கு விதித்துக் கொண்டது என்றும், மாற்றிக் கொள்ள முடியும் என்றும் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் மந்திரக்கலை செய்தியாக உணர்த்த, அறதாறு இதுவென வேண்டா என்று அடித்துச் சொல்லப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.