Show all

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றி இயக்கலாம்! தமிழகத்தின் அனைத்து பேருந்துகளையும் வீடு வீடாகச் செலுத்தி

தீர்வு என்பதை  ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்கும் இயற்கை. கொரோனா கூட- இயற்கை விரும்பும் ஒரு தீர்வுக்கான- இயற்கையின் ஒரு முன்னெடுப்புதாம். ஓடி ஓடி ஒளியும் கோட்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுதான் கொரோனாவை எதிர்கொள்ள ஊரடங்கு.

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் இன்றுவரை விடுபாடாத பாலியல் சிக்கலுக்கு- திருமணத்தை தீர்வாக உலகத்திற்குக் கொடையாகக் கொடுத்தது தமிழகம். இதை மனதில் ஓரமாக கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு அதற்கான சாத்தியப்பாடு தமிழகத்திற்கு மட்டுமே எப்படி அமைந்தது என்று ஒரு குறு ஆய்வினை முன்னெடுப்போம்.

திருவள்ளுவர் பிறந்ததிலிருந்து- தமிழ்த்தொடராண்டு-4960 (கிபி.1858) இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் குடிமைப்பணி தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது வரை தமிழியலைத் தூக்கிப்பிடித்த ஒரே மாமனிதர் திருவள்ளுவர் மட்டுமே. திருக்குறளாக மட்டுமே தமிழியல் முழங்கப் பட்டு வந்தது. 

திருவள்ளுவர் காலத்திற்கு முந்தைய அத்தனை இலக்கியங்களும் தமிழியல் இலக்கியங்களே. திருவள்ளுவருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தோன்றிய எந்த இலக்கியமும் பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கிற இலக்கியங்களாகவே இருந்தன. ஏறத்தாழ ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழகத்தில் பார்ப்பனியம் முழுமையாக ஆட்சி செய்தது.

பிரித்தானிய ஆட்சிகாலத்தில்தான் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு தமிழியல் மீட்புக்கான வேலைத்திட்டம் தொடங்கியது.

இந்தியா விடுதலைபெற்று காங்கிரஸ் ஆட்சியிலும், மீண்டும் தீர்மானிக்கும் இடத்தில் பார்ப்பனியம் அமைந்தது. திராவிட இயக்கத்தின் வேலைத்திட்டம் இன்று முழுமையடையாமலே, நோக்கமே முழுமையாக சிதைந்து, தற்போது திராவிட இயக்கங்களின் நோக்கம் தமிழகத்தை ஒரு கிராமப் பஞ்சாயத்து போலவாவது ஆளும் உரிமை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு பல குழுக்களாக பிரிந்து விட்டன.

தற்போதைய பாஜக ஆட்சியில் தீர்மானிக்கும் இடத்தில் பார்ப்பனியம் பன்மடங்கு வலிமையை கூட்டிக் கொண்டே வருகிறது. தமிழக ஆட்சிஅதிகாரம் அதற்கு குற்றேவல் செய்யும் வகையாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தாம் கொரோனா- மனித இனத்தின் தீர்மானங்களை, கொள்கைகளை, கண்டுபிடிப்புகளை, கலாச்சாரங்களை, நடைமுறைகளை எல்லாம் முறியடிக்கும் வகையாக களம் இறங்கியிருக்கிறது.

அணையின் மதகுகளைத் திறந்து விட்டால், அணையில் வாழும் மீன்கள் எல்லாம் விரைந்தோடும் நீரில் அடித்துச் செல்லப்படமாட்டா. மாறாக நிரை எதிர்த்து போராடி அணையைச் சென்றடையும் முயற்சியில் மீன்கள் கடுமையாக ஈடுபடும்.

இப்படியான இயற்கை போக்கை தூக்கிப்பிடிப்பது தமிழியல். நிலம் எப்படி இருந்தாலும்- நிலத்தைத் திருத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நாகரிகம் படைத்தது தமிழியல். 

ஆற்றங்கரையை தேடித்தேடி அலைந்து ஈரானிலிருந்து கைபர் போலன் கணவாய் எல்லாம் கடந்து நாவலந்தேயம் வந்தடைந்து சீர்திருத்திய நிலத்தில் நாடோடி வாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த பாஞ்சாலி- பாண்டவர் கதையை மட்டும் வைத்துக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றி தீர்மானிக்கும் இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டுள்ளது பார்ப்பனியம்.

அந்த ஓடி ஓடி ஒளியும் கோட்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுதான் கொரோனாவை எதிர்கொள்ள ஊரடங்கு. அந்த ஊரடங்கால், குற்றேவல் அரசு தமிழகத்திலும் அதை முன்னெடுத்த நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட நாட்களாக முடங்கி, வருமானம் இழந்து வாடிக் கொண்டிருக்கின்றது தமிழ்மண்.

தீர்வு என்பதை  ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்கும் இயற்கை. கொரோனா கூட- இயற்கை விரும்பும் ஒரு தீர்வுக்கான- இயற்கையின் ஒரு முன்னெடுப்புதாம். 

விலகுவது, மறுப்பது, தடைபடுத்துவது, தப்பியோடுவது, சூழ்நிலையை மட்டும் எதிர்பார்த்து இயங்குவது என்பதை ஆண்டான் அடிமையாகவே வாழ விரும்பும், பார்ப்பனியம் உள்ளிட்ட சில ஆதிக்க இனங்கள் தங்கள் நிலைபாடாக வைத்துள்ளன.  

கொரோனா இயற்கையின் ஒரு வலிமையான முன்னெடுப்பு. அதை எதிர்கொள்ள- ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்க வேண்டும். எந்தத் துறைகளையும் முடக்காமல் அவை ஒவ்வொன்றையும் இயக்க புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

தமிழர்- பாலியல்வேட்கையை தடைபடுத்தி குற்றங்களுக்கு வழிவகுக்காமல்- திருமணம் எனும் வகையாக முறைப்படுத்தி- உலகிற்கு அதை கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையையும் வருமானம் இழக்காமல் இயக்குவோம்.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று:- தமிழகத்தின் அனைத்து பேருந்துகளையும் வீடு வீடாகச் சென்று கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றி இயக்கலாம். இதற்கு அறக்கட்டளைகளோ, பெரிய மருத்துவமனைகளோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ, அரசோ திட்டம் வடிவமைத்து செயல்படலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.