Show all

முன்னெடுத்தது வணிகம்- திணிப்பு அல்ல! உலகின் பொது மொழியாக நேற்று இருந்தது தமிழ். இன்று இருப்பது ஆங்கிலம்.

உலகில் எத்தனையோ ஆயிரம் மொழிகள் இருக்கும் போது, உலகின் பொதுவான மொழிக்கான தகுதியை நேற்று தமிழ் பெற்றிருந்தது. இன்றைக்கு ஆங்கிலம் அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறது. காரணம்- வணிகம். 

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் முதல் வணிகனாக தமிழன் மட்டுமே உலகஞ் சுற்றி வந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்தது கடல். எந்த நாட்டுக்கெல்லாம் கடல் எல்லையாக இருந்ததோ அந்த நாட்டுக்கு தமிழன் வணிகத்திற்குச் சென்றிருப்பான். விதவிதமாக கப்பல் கட்டி, (!)நியூசிலாந்தின் கடற்கரையில் கிடைத்த ஒரு மணியை எடுத்து பொருட்காட்சியில் வைத்திருக்கிறார்கள். அந்த மணியில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறது.
(!)தங்கள் நாட்டு செல்வத்தை, தமிழக வணிகர்கள்- முத்தையும், நறுமணப்பொருட்களையும், மெல்லிய துணிவகைகளையும் கொடுத்துவிட்டு, எல்லையில்லாமல் அள்ளிச் செல்வதாக எகிப்து நாட்டு அறிஞன் தாலமி புலம்பியது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. எகிப்து இளவரசி உலக அழகி கிளியோபட்ரா தமிழக முத்தை பாலில் ஊறவைத்து அந்தப் பாலில் குளித்து வருவார்களாம்.

இப்படி தமிழனின் உலகளாவிய வணிகத்திற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. சரி இருக்கட்டும்- தமிழ் எப்படி உலகத்திற்கு பொதுவான மொழி என்பதான தகுதிக்கு உரியதாகும். தமிழன் தனது தொன்மைக்கால வணிகத்தில் அனைத்து நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தான். உலகின் அனைத்து மொழிகளுக்கும் தமிழ்ச்சொற்களைக் கொடுத்தான். ஆங்கிலத்தில் பத்து விழுக்காட்டு சொற்கள் தமிழ் என்பார் பாவணர். உலகின் அனைத்து மொழிகளிலும் அம்மா, அப்பா என்ற அடிப்படை உறவுச்சொல் தமிழ்தான். ஞாயிறு, திங்கள் செவ்வாய் எனும் கிழமையின் ஏழு பெயர்களும் உலகின் அனைத்து மொழிகளிலும் தமிழின் மொழி பெயர்ப்பாகவே இருக்கிறது. உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிற 1,2,3 எண்வடிவங்கள் தமிழே. உலகில் எந்த மொழியும் இந்த எண்களுக்கு இதுவரை உரிமை கொண்டாடவில்லை. ஆங்கிலத்தின் கடைசி மூன்று மாதங்களின் பெயர்களைப் பாருங்கள் பத்தாவது மாதம் அக்டோபர். ஆக்டா என்றால் எட்டு. பதினொன்றாவது மாதம் நவம்பர். நவம் என்றால் ஒன்பது. பனிரெண்டாவது மாதம் டிசம்பர். தசம் என்றால் பத்து. 

தமிழின் மாதங்கள் பனிரெண்டாக இருக்கிற நிலையில் ஆங்கிலத்தில் ஜிலை, ஆகஸ்டு என்ற இரண்டு மாதங்களை நடுவில் சேர்த்துக் கொண்டார்கள். வடமொழியில் பிர என்று தொடங்குகிற நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழ். எடுத்துக்காட்டு: பிரபலம், பிரமாணம், பிரவாளம், பிரபஞ்சம் இப்படி பிர எனத் தொடங்குகிற வடமொழியின் அனைத்துச் சொற்களும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். உலக மொழிகள் அனைத்திற்கும் தமிழ் தனது சொற்களையும், அறிவையும் கொடுத்து பொதுவானது.

ஆங்கிலம் உலகின் அனைத்து மொழிச்சொற்களையும் எடுத்துக் கொண்டு வளர்ந்து வருகிறது. வணிகத்திற்காக உலகம் முழுவதும் சுற்றி வந்தது. உலகினரின் ஒற்றுமையின்மையால் அவர்களுக்கு படையுதவி செய்து உலகம் முழுவதையும் கட்டிஆண்டு ஆங்கிலத்தை உலகத்திற்கு பொதுவாக்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,355.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.