Show all

நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய

நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய தடையாய் இருப்பன குறித்த, தரவுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

உலக நாடுகள், நல்லக் குடும்பங்களைக் கட்டமைக்கும் முயற்சியில் கடும் பாடாற்றிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்க்குடும்பங்கள் நல்லதொரு நாடாக இல்லாத இந்தியாவிலும் நல்ல குடும்பங்களாக இயங்கி வருகின்றன.

உலக நாடுகளின் முயற்சிக்கு எதிர்ப்பாடு ஆற்றுவன: தான் என்கிற, உலக மனிதர்களின், தனிமனித அகந்தை 

தமிழ்க்குடும்பங்களின் நன்றாற்றலுக்கு அறைகூவலாக அமைவது நடப்பு இந்தியாவின் ஏற்றதாழ்வு பேணும் பேரின ஆதிக்க அடாவடி சட்டங்கள்.

நடப்பு இந்தியாவின் ஏற்றதாழ்வு பேணும் பேரின ஆதிக்க அடாவடி சட்டப்பாட்டுக்கு ஆதரவாக நிற்பன: பேரினவாதக் கட்சியான காங்கிரசுக்கு முன்பு ஆதரவு அளித்து வந்ததும், பேரினவாதக் கட்சியான பாஜகவுக்கு தற்போது ஆதரவு அளித்து வருவதும் ஆகப் பாடற்றிவரும் வடஇந்தியக் குடும்பங்கள். 

நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய, மாற வேண்டியன:

1. நடப்பு இந்தியாவின் ஏற்றதாழ்வு பேணும் பேரின ஆதிக்க அடாவடி சட்டப்பாட்டுக்கு ஆதரவாக நிற்கிற வடஇந்தியக் குடும்பங்களின் போக்கு

2. உலக நாடுகளின் முயற்சிக்கு எதிர்ப்பாடு ஆற்றிவருகிற தான் என்கிற தனிமனித அகந்தை கொண்டுள்ள உலகினரின் போக்கு 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,156.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.